சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஃபோலிக் ஆசிட் மாத்திரையின் பயன்பாடு(Folic Acid Tablet Uses in Tamil)..!
இந்த மாத்திரை பெரும்பாலும் பெண்களுக்கு தான் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. ஃபோலிக் அமிலம் என்பது ஒரு வகையான வைட்டமின் பி சத்து இருக்க கூடியது இது ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
இந்த மாத்திரையின் பயன்பாடுகள் என்னவென்றால் இது மகப்பேறு அடையாமல் தள்ளிப்போகும் பெண்களுக்கும் அல்லது கரு உண்டான பிறகும் குழந்தையின் வளர்ச்சி சரியாக இல்லாதபோதிலும் இந்த மாத்திரை பயன்படுகிறது. இந்த வைட்டமின் பி குறைபாடு உள்ள பெண்கள் பல இன்னல்களை சந்திக்கின்றன அதில் குறிப்பாக ரத்த சோகை பிரச்சனை ஏற்படும் இதனால் மகப்பேறு பிரச்சனைகளும் ஏற்படும். இந்த மாத்திரை மகப்பேறு காலத்தில் பரிந்துரைப்பதற்கான கரணம் என்னவென்றால் அந்த சமயத்தில் பெண்களுக்கு அதிகமான ரத்தம் அதிகரிக்க வேண்டும் என்பதால் இந்த மாத்திரை பரிந்துரைக்கின்றனர். மேலும் மருத்துவர்கள் இந்த மாத்திரை மாதவிடாய் வராமல் இருக்கும் பெண்களுக்கும் இந்த மாதிரியை பரிந்துரைக்கின்றன இந்த மாத்திரை அவர்களுக்கு சீரான மத விடை சுழற்சியை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் சரியாக இருக்கும் பெண்களுக்கு தான் கருத்தரிப்பு ஆனது நடக்கும். இந்த மாத்திரையை ரத்தசோகை உள்ளவர்களும் சாப்பிடலாம் இது ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்கும் உதவியாக உள்ளது.
ஃபோலிக் அமிலம் தேவை படுமெனில் அது மாத்திரை மூலம் மட்டுமின்றி அதை உணவு மூலம் கூட பெறலாம் அதற்கான உணவு வகைகள் என்ன வென்றால் காய்கறிகள், பசலைக்கீரை, பீன்ஸ், ப்ராக்கோலி, பப்பாளி, ஆரஞ்சு, ஈஸ்ட், முருங்கை கீரை, முளைகட்டிய பயிறு, பச்சை பட்டாணி, வாழை, முழு தானியங்கள், ரொட்டி, பாஸ்தா, அரிசி, கறி போன்ற உணவுபொருட்கள் மூலம் நமக்கு கிடைக்கும்.
இந்த மாத்திரை மூலம் பயன்கள் கிடைப்பதுபோல அதன் மூலம் பக்கவிளைவுகளும் இருக்கும். இதனால் தான் இந்த மாத்திரை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவது சிறந்தது இல்லை, இந்த மாத்திரையால் ஏற்படும் பக்க விளைவுகள் காய்ச்சல், குமட்டல், வயிற்று வீக்கம், எரிச்சல், மன சோர்வு, அலர்ஜி, உலர்ந்த வாய், தோல் சிவந்து போவுதல், தோல் அரிப்பு போன்ற உபாதைகள் ஏற்படலாம். இது போன்ற பக்க விளைவுகள் இந்த மாத்திரை சாப்பிடும்போது இருந்தால். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த மாத்திரை யாருக்கெல்லாம் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் என்றால் கர்ப்பிணி பெண்கள், மகப்பேறு அடைய முயற்சிக்கும் பெண்கள், குழந்தைக்கும் தாய் பால் கொடுக்கும் பெண்கள், இதயநோய், சிறுநீரக நோய், கலீரல் நோய் இதுபேன்ற நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி அனைத்தும் மருத்துவர் கொடுக்கும் டோசேஜ் அளவையும் கொண்டு தான் மருந்து சாப்பிட வேண்டும் இல்லையென்றால் மேல்குறிப்பிடாது போல் பக்க விளைவுகள் ஏற்படலாம்.
இது இந்த ஒரு மாத்திரை மட்டுமின்றி எந்த மாத்திரையும் சாப்பிடும்போது இந்த முன்னெச்சரிக்கை இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறுகின்றன சிலர் மருத்துவரின் அறிவுரை இன்றி நேரடியாக மருந்து கடைக்கு சென்ற தனக்கு இருக்கும் நோய்க்கு அங்கு இருக்கும் ஊழியரிடம் மருந்து வாங்கி சாப்பிடும் பழக்க நடைமுறையில் இருக்கிறது இது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் நாம் செய்யும் மிக பெரிய தவறு மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மாத்திரை சாப்பிடுவது ஒவ்வொரு மாத்திரைக்கும் வேறு வேறு பக்க விளைவுகள் ஏற்படும் இது அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுதல் மாடு அருந்திவிட்டு சில மாத்திரைகள் சாப்பிட கூடாது என்று மருத்துவர் கூறுவார் சிலர் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் மாத்திரை சாப்பிடும் பழக்கம் இருந்து வருகிறது. இது மருந்து கடைகளில் இருக்கும் ஊழியர்களும் மற்றும் மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். மாத்திரை சாப்பிடுவதின் மூலம் உடம்பை சரி செய்யுங்கள் அதிகாமாக சாப்பிட்டு பக்கவிளைவுகள் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.