சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Friendship Quotes in Tamil | நண்பர்கள் கவிதைகள்
ஒரு உண்மையான நண்பர்கள் என்பது நம் வாழ்வில் மிகப் பெரிய பரிசு ஆகும், அதனை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருப்பினும், அதை நாம் முறை கண்டுபிடித்தால் அதை நாம் ஒருபோதும் விடக்கூடாது. ஏன்னென்றால் தேவைப்படும் நண்பர் உண்மையில் ஒரு நண்பர்களோ அல்லாது பல பேர்களோ இருக்களாம் ஆனால் உண்மையுள்ள ஒரு நண்பர்களிடையே நாம் புகழ்பெற்ற மேற்கோள் நட்பின் அர்த்தத்தை பூர்த்திசெய்கிறது, ஏனென்றால் நமக்கு தேவைப்படும் போது உண்மையான நண்பர்கள் எப்போதும் நம்முடன் துணை நிற்கின்றார்கள். நெருங்கிய, அன்பான, சிறந்த தோழமை கொண்டு இருக்கும் நண்பர்கள் உண்மையான நண்பர்கள்.
நண்பர்களிடையே நாம் போடாதசண்டையில்லை! பேசாத நியாயமில்லை! சிரிப்புக்கோ பஞ்சமில்லை! கூற முடியாத மன வலியும், புரிந்து கொள்ளும் நம் மனக் கண்ணாடி நண்பர்களே! ஆகயால் மகிழ்ச்சியாக இருப்பினும், துயரக்கடலாக இருப்பினும், மனம் தேடுவதற்கு முன் என்னருகில் இருப்பான் நண்பர்களே! அதனால் தான் நாம் நட்பினை உயிரை விட மேலானதாக கருதிகிறோம்.
- மலரின் வாசம் அனைவரையும் கவரும் – அதுபோல நம் நட்பின் சுவாசம் அனைவரையும் கவரட்டும்!
- கடவுளால் எந்நேரமும் எல்லாரிடமும் இருக்க முடிவதில்லை. எனவே நண்பர்களைப் படைத்து அனுப்பி வைக்கிறான்! சிலருக்கு உயிரைக் கொடுக்கும், கர்ணனைப் போல! சிலருக்கு உயிரை எடுக்கும் நரிக்கூட்டத்தைப் போல!
- நட்பே! முதல் உறையாடலில், கலைந்து போகும் மேகமென நினைத்த உன்னை இன்றும், என்றும் நிலையான வானமாக பார்க்கிறேன் உன் அக்கறையான அன்பால்!
- பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும், நண்பனின் பட்டப்பெயர் தான் முதலில் ஞாபகத்தில் வருகிறது!
- ஒவ்வொருவருக்கும் கடவுள் துணை இருக்கின்றார், அந்த கடவுளின் வடிவம் தான் நட்பு.
- நல்ல நட்பிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கோபத்தை காட்டி சண்டை போடலாம். ஆனால் ஒரு நிமிடம் கூட சந்தேகம் எனும் கொடிய விஷத்தை உள்ளே விட கூடாது.
- நட்பு என்பது வெறும் வார்த்தை அல்ல அது நம் உணர்வோடும் உயிரோடும் கலக்கும் அழிக்க முடியாத பொக்கிஷம் அது.
- நட்பை தேவைக்காக நேசிப்பதை விடுத்து உண்மையாக நேசித்து பார் நீ உயிர் வாழும் வரை அந்த நட்பு உன்னை விடாது.
- சொந்தங்கள் என்பது பனி துளி போன்றது சிறு பொழுதில் மறைந்து விடும் ஆனால் நட்பு என்பது பரந்த வானம் போன்றது உன்னை சுற்றி எப்போதும் நிலைத்து நிற்கும்.
- அன்பான நண்பன் கிடைத்துவிட்டால் அகிலத்தையே வென்றிடலாம் அன்பாக நம்மை வழிநடத்தும் அழகான பந்தம் நட்பு
- தனிமை நம்மை நெருங்கிடாது துன்பம் நம்மை தொடர்ந்திடாது மனதில் எங்கும் நிறைந்திடும் மகத்தான உறவுவே நட்பு
- நம் சந்தோசத்தின் மறு வடிவமாய் நாம் மகிழும் போது மகிழ்ந்து அழும் போது அரவணைத்து கொள்ளும் ஒரு அக்கறையான சொந்தம் நட்பு
- அளவோடு பழகுவது நட்பல்ல அதிக உரிமையோடு பழகுவதே நட்பு ஆபத்து நேரத்திலும் அருகிலிருந்து அறிவுரை சொல்பவனே சிறந்த நண்பன்
- தவறு செய்யும் போது தட்டிக் கேட்டு தளர்ந்து சோரும் போது தட்டிக் கொடுத்து ஆலோசகனாய் ஆசானாய் அனைத்துமாய் இருப்பவனே நண்பன்
- துரியோதனுக்கு ஒரு கர்ணன் போல குசேலனுக்கு ஒரு கண்ணன் போல உண்மையாய் ஒரு நண்பனை அடைந்து உயர்ந்து விளங்குவோமாக
- எப்படி ஒரு புத்தகம் உன் அறிவு ஆற்றலை வளர்க்கின்றதோ.. அதுபோல ஒரு நல்ல நண்பன் உனக்கு கிடைத்தால் போதும் பலகோடி புத்தகம் உன் கையில் கிடைத்தற்கு சமம்.
- நண்பர்கள் என்ற செல்வம் உன்னை தேடி வர புன்னகை என்ற ஒரு கருவி மட்டும் உன்னிடம் இருந்தால் போதும்.
- நட்பிடம் போடும் ஆயிரம் சண்டைகள் வலியை ஏற்படுத்தாது. ஆனால் ஒரு நல்ல நட்பின் மவுனம் இதயத்தையே உடைத்து விடும்.
- பல உறவுகள் பணத்திற்காக தேடி வரும். சில உறவுகள் அன்பிற்காக தேடி வரும் அதுதான் நட்பு.
- தட்டிக்கொடுக்க நண்பர்கள் இருந்தால் வேதனை கூட சாதனை ஆகும்.