சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
கின்னஸ் சாதனை கோவில்(Guinness Record Temple)!
இந்த ஆலயம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த சிறப்பு வாய்ந்த ஆலயமாகும். புதுடெல்லியில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள் இந்த ஆலயமானது அக்சர்தாம் அல்லது சுவாமி நாராயணன் அக்சர்தாம் என்று குறிப்பிடுகிறார்கள். புதுடெல்லியின் முக்கிய நகரமான நொய்டாவில் யமுனை ஆற்றங்கரையின் ஓரத்தில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆலயமானது 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வைணவ ஞானியான சுவாமி நாராயணின் நினைவாக கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் சுவாமி நாராயணின் 3 ஆயிரம் தொண்டர்களும், 7 ஆயிரம் கைவினைத் தொழிலாளர்களும் சேர்ந்து கட்டமைத்துள்ளனர். மேலும் ஆலாயம் இரும்பு உள்ளிட்ட எந்த உலோகத்தையும் பயன்படுத்தாமல், ராஜஸ்தான் மாநிலத்தில் காணப்படும் இளஞ்சிவப்பு மணல்பாறை மற்றும் இத்தாலிய கர்ரரா சலவைக் கல் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
சுவாமி நாராயணன் நினைவாக கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம் 141 அடி உயரம், 316 அடி அகலம், 370 அடி நீளம் கொண்டது. இந்த நினைவுச்சின்னத்தில் அலங்காரமாக செதுக்கப்பட்ட 234 தூண்கள், ஒன்பது குவிமாடங்கள், இந்து சமயத்தின் சாதுக்கள், பக்தர்கள், ஆச்சாரியார்கள் போன்றவர்களின் 20 ஆயிரம் சிலை உருவங்கள் காணப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் சுவாமி நாராயணன் சிலை 11 அடி உயரத்தில் உள்ளது.
கோவில் வளாகத்தில் சுவாமி நாராயணின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ‘நீலகண்ட கல்யாண யாத்ரா’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. தற்போது நினைவுச்சின்னமானது இந்தியாவின் ஆன்மிக தலங்கள், சடங்குகள், மரபுகள், கலாசாரம், திருவிழாக்கள் போன்றவையானது.
இங்கு ‘சான்ஸ்கருதி விகார்’ என்ற பெயரில் படகு சவாரி வசதியும் உண்டு. அங்கு 12 நிமிடங்கள் பயணிப்பதற்கு ரூ10 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். அங்கு செல்லும் பாதை முழுவதும் தட்சசீலா, உலகின் முதர்ல பல்கலைக்கழகம், புராதன மருத்துவமனைகள் எனஇந்திய வரலாற்றை மாதிரிகளாக அமைக்கபடுகின்றன.
இந்திய பண்பாடு, வரலாற்றில் பங்களித்தவர்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் தாமரை வடிவில் காட்சியளிக்கிறது. உலக அறிவு மேதைகளின் பொன்மொழிகள் சுவர்களிள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் ஏராளமான அதிசயங்கள் நிறைந்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு ஆலயம் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. 2007ம் ஆண்டு ‘உலகின் மிகப்பெரிய அனைத்தும் கொண்ட இந்தக் ‘கோவில்’ என்று கின்ஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.