சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா? | How to Know the Fetus is a Boy or Girl
ஒரு பெண் கருவுற்று தாய்மை அடைவதை அந்த பெண் மட்டுமின்றி அவரது குடும்பமும் சுற்றமும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் இதில் அந்த பெண்ணுக்கும் மகிழ்ச்சியானது இரட்டிப்பாக இருக்கும் மேலும் இது அவர்களுக்கு தாமதமாக கர்பமாயிருந்தால் மிகவும் கவனத்துடன் இருப்பார்கள் ஆனால் மனித இயல்பு என்பது பெரிதும் பொறுமை இருக்காது கருவில் வளர்வது ஆன் குழந்தையை அல்லது பெண் குழந்தையை என்று தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வம் இருக்கும் அது அந்த பெண்ணுக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் இருக்கும்.
மேலும் சிலருக்கு ஆண் குழந்தை மீது ஆசை இருக்கும் அல்லது பெண் குழந்தை மீது ஆசை இருக்கும் சிலருக்கு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வர். ஆனால் இதை மருத்துவ பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள நினைப்பது சட்டப்படி குற்றம் அதேபோல் மருத்துவரும் அதை மட்டும் யாரிடமும் கூற மாட்டார்கள். ஆனால் இதை நாம் தெரிந்து கொள்ள அந்த காலத்தில் இருந்து பின்பற்றி வந்த சில வழிமுறைகள் இருக்கின்றன இந்த அறிகுறி வைத்து நாம் கருவில் வளர்வது ஆண் அல்லது பெண குழந்தையா என்று ஒரு அனுமானத்துக்கு வரலாம் உறுதியாக சொல்லமுடியாது தற்போது என்ன அறிகுறிகள் என்று பார்ப்போம்.
வயிற்றின் அளவு
இந்த முறை ரொம்ப நாட்களாக நடைமுறையில் இருந்து வருகிறது வயிற்றின் அளவு வைத்து கருவில் இருப்பது ஆண் குழந்தையை அல்லது பெண் குழந்தையை என்று கண்டுபுடிப்பார்கள் அதாவது கருவுற்ற பெண்ணின் வயிறு பெரிதாக இருந்தால் அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது அதேபோல் வயிற்று பகுதி சிறிதாக இருந்தால் அது பெண் குழந்தை என்று பிறகும் என்று யூகிக்கப்படுகிறது.
முகத்தில் பரு
பெங்களுக்கு பெரும்பாலும் முக்காலத்தில் பரு இருப்பது வழக்கமான ஒன்று இதை வைத்துகூட பிறக்கபோவது ஆண் குழந்தையை அல்லது பெண் குழந்தையை என்று தெரிந்து கொள்ளலாம் அதாவது முகத்தில் பரு இல்லாமல் பளிச்சென்று இருந்தால் அது ஆன் குழந்தை என்றும் முகத்தில் பரு இருந்தால் அது பெண் குழந்தை என்று அனுமானிக்கப்படுகிறது.
முடியின் வளர்ச்சி
பெண்களுக்கு முடியானது பொதுவாக நீளமாக இருப்பது வழக்கம் இந்த முடி மூலம் கூட நாம் சில விசயங்களை தெரிந்துகொள்ள முடியும் குறிப்பாக கருவில் இருப்பது ஆண் குழந்தையை அல்லது பெண் குழந்தையை என்று தெரிந்து கொள்ளலாம் ஆம் கருவுற்ற பெண்ணுக்கு முடி பிரச்சனைகள், முடி உதிர்வு, முடி நீளமாக வளராமல் இருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால் அது பெண் குழந்தை எனப்படும்.
இதுவே ஆண் குழந்தை என்றால் முடி நல்ல முரையில் வளர்ச்சியடையும், அதேபோல் ஆரோக்கியமாக இருக்கும். இதுபோன்று இறுந்தால் அது ஆண் குழந்தை என்று நம்பப்படுகிறது.
குழந்தையின் இதய துடிப்பு
கருவில் இருக்கும்போது குழந்தையின் இதய துடிப்பு தெரிந்து கொள்வது அனைவராலும் முடியாது மருத்துவருக்கு மட்டும் தெரியும் நாம் மதமானால் செல்லும் பரிசோதனையில் நமக்கு தரும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் அதில் கருவில் இருக்கும் குழந்தைக்கு 140க்கு மேல் இதய துடிப்பு இருந்தால் பெண் குழந்தைக்கு வாய்ப்புள்ளது அதேபோல் இதயத்துடிப்பு 140க்கு கீழ் இருந்தால் ஆபத்தாக கருதாமல் ஆண் குழந்தை என்று கருதலாம்.
மார்பகத்தின் அளவு
கருவுற்ற பெண்களின் மார்பகத்தின் அளவை வைத்து சிலர் கண்டுபுடிப்பார்கள் அதாவது வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரிதாக இருந்தால் ஆணாக இருக்க வாய்ப்புள்ளது. என்று கூறப்படுகிறது உறுதியாக சொல்லமுடியாது.
இதுபோன்ற அறிகுறிகள் வைத்து நாம் பிறக்கப்போகும் குழந்தை பற்றி ஒரு சில நானுமானத்துக்கு தான் வரமுடியும் உறுதியாக சொல்ல முடியாது அதேபோல் இதை வைத்து குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வதுபோன்ற நல்ல செயல்களில் ஈடுபடலாம் அதை செய்யாமல் கள்ளிப்பால் கலந்தால் சிறைக்கு தான் செல்ல முடியும்.