சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
How To Open Account in Facebook in Tamil | போனில் பேஸ்புக் கணக்கை எவ்வாறு ஓபன் செய்வது
பேஸ்புக் என்பது ஒரு பொழுதுபோக்கு தகவல் பரிமாற்ற செயலி ஆகும். பேஸ்புக் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களால் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இதில் மக்கள் அனைவரும் பொழுதுபோக்காகவும் அல்லது தகவல் பரிமாற கூடிய ஒரு இயந்திரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
பேஸ்புக் ஆனது 2004ம் ஆண்டில் தொடங்கப்பட்டு இணைய வழி சமூக வலையமைப்பு ஆக இயங்கிக் கொண்டிருக்கிறது. பேஸ்புக் எனப்படும் செயலி ஆரம்ப காலத்தில் பேஸ் மாஸ்க் என 2003இல் அறிமுகமானது.. பின்னர் 2004 ஆம் ஆண்டு பேஸ்புக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..
இந்த செயலியை கண்டுபிடித்தவர் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆகும்.
மேலும் இந்த செயலி 2004 பின்னர் உலகம் முழுவதும் மிகப்பிரபலமான தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அனைவரும் பயன்படுத்த துவங்கினர். பேஸ்புக் செயலி உலகம் முழுவதும் அமோக வரவேற்பை பெற்றது இப்பொழுது பேஸ்புக் சந்தை மதிப்பு சுமார் 136.41USD ஆகும் .மேலும் இன்ஸ்டாகிராம் என்ற செயலையும் தற்போது பேஸ்புக் வசம் உள்ளது. தற்போது பேஸ்புக் நிறுவனம் ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் அறியப்படுகிறது.
பேஸ்புக் செயலி
பேஸ்புக் செயலி மூலம் தனிநபர் அதில் ஒரு கணக்கு ஓபன் செய்து கொள்ளலாம் . மேலும் ஒரு தனி நபர் பேஸ்புக்கில் எத்தனை கணக்கு வேணாலும் ஆரம்பித்துக் கொள்ளலாம். பேஸ்புக் செயலி மூலம் நம்முடைய தகவலை அதில் பதிவு செய்துகொள்ளலாம் நாம் எங்கே படிக்கின்றோம், தற்போது என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறோம், நாம் எங்கே செல்கின்றோம், நமது புகைப்படம் மற்றும் நம் குடும்பத்தினரின் புகைப்படம் போன்றவற்றை நாம் அதில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் .
பின்னர் அந்தப் புகைப்படங்கள் மட்டும் தகவலை நமது நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் அதை லாக் செய்து கொள்ளலாம் அல்லது அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையிலும் அதை மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
பேஸ்புக் மூலம் நமக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் தெரியாத நண்பர்கள் யாரை வேணாலும் நம் நண்பராக இதில் இணைத்துக்கொள்ளலாம். அதற்கு நாம் அவர்களுக்கு முதலில் ரெக்வஸ்ட் கொடுக்கவேண்டும். நாம் கொடுக்கின்ற ரெக்வஸ்ட் அவர்களது பேஸ்புக் கணக்கில் தென்படும்.
நாம் கொடுத்த ரெக்வஸ்ட் அவர்கள் அக்சப்ட் செய்துவிட்டாள் . அவர்கள் இருவரும் பிரண்ட் ஆகிவிடுவார்கள். மேலும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் தகவல் மற்றும் புகைப்படங்களை இருவர் பார்த்துக்கொள்ளலாம் . இருவரும் மெசேஜ் மூலம் தகவலை பரிமாறிக் கொள்ளலாம்.
பேஸ்புக்கில் நான் மெசேஜ் செய்வதற்கு மெசேஞ்சர் என்ற ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கின்றது. இந்தச் செயலின் மூலம் மட்டுமே நாம் டைப் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ், மற்றும் போன் கால் செய்து கொள்ள முடியும்.
பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக்கை இரண்டு விதமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் நிறுவியுள்ளது. ஒன்று பேஸ்புக் மற்றொன்று பேஸ்புக் லைட். இதில் பேஸ்புக் என்பது விலை உயர்ந்த ஸ்மார்ட் போனில் மட்டும் நன்றாக பயன்படுத்த முடியும். ஏனென்றால் பேஸ்புக் என்பது அதிக எம்பி உள்ள செயலி ஆகும் .இதனால் RAM குறைவாக உள்ள மொபைல் போன்களுக்கு பேஸ்புக் என்பது அதிக ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி வைத்துக் கொள்வதால் ஸ்மார்ட் போன் சிறிது தாமதமாக இயங்கக் கூடும் .எனவே பேஸ்புக் லைட் என்ற செயலி மிக மிகக் குறைந்த எம்.பி(MB) யை உடையது எனவே பேஸ்புக் லைட்டை பதிவிறக்கம் செய்து கொண்டால் உங்கள் மொபைல் போன் நன்றாக வேலைசெய்யும் ஏனென்றால் இந்த செயலி மூலம் போனில் உள்ள அதிக ஸ்டோரேஜ் பயன்படுத்தாது.
எவ்வாறு பேஸ்புக் கணக்கை ஓபன் செய்வது
- முதலில் நாம் கூகுள் ப்ளே ஸ்டோரில் பேஸ்புக் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் இந்த செயலி முற்றிலும் இலவசமானது.
- பேஸ்புக் செயலியை பதிவிறக்கம் செய்த பின்னர் , புதிய கணக்கு உருவாக்க என்ற வார்த்தைகள் கீழே தென்படும் .அதை கிளிக் செய்து கொள்ளுங்கள் மேலும் நீங்கள் இருக்கின்ற பேச்சில் (Page) அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தால் கீழே தமிழ் என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். அதை நீங்கள் தொட்டால் போதும் அனைத்தும் தமிழுக்கு மாறி விடும் அதன் பின்னர் நீங்கள் எளிதாக பயன்படுத்தலாம்.
- முதலில் உங்கள் பெயர் என்னவென்று கேட்கும் அதற்கு நீங்கள் உங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும்.
- பின்னர் உங்கள் பிறந்த நாள் எப்பொழுது என்று கேட்கும், அதற்கு நீங்கள் உங்களது பிறந்தநாளை சரியாக பதிவு செய்ய வேண்டும். அதில் உங்களது தேதி, மாதம், மற்றும் பிறந்த ஆண்டு மூன்றையும் தவறாமல் நிரப்பவேண்டும்.
- பிறந்த தேதியை சரியாக பதிவு செய்த பின்பு அடுத்தது (Next) என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். பின்னர் உங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய சொல்லும். நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொபைல் என்னை அதில் பதிவிட வேண்டும் அல்லது இமெயில் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று விருப்பப்பட்டால் கீழே உள்ள மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யவும் என்ற வாசகத்தை கிளிக் செய்தால் நீங்கள் உங்களது மின்-அஞ்சல்(email) பதிவிட வேண்டும்.
- பின்னர் உங்கள் பாலினம் என்னவென்று தெரிவிக்க வேண்டும். இதில் ஆண், பெண், மற்றும் தனிப்பயன் என்ற மூன்று இடம் பெற்றிருக்கும். இதில் நீங்கள் எந்த பாலினத்தவர் என்று தேர்வு செய்து வேண்டும் .
- இப்பொழுது நீங்கள் 6 எழுத்துகளைப் பயன்படுத்தி கடவுச்சொல்லை உருவாக்கவும் . நீங்கள் உருவாக்கும் கடவுச்சொல் மற்றவர்கள் யூகிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும். .கடவுச்சொல் ஆனது எழுத்துக்கள், நம்பர்கள், குறிகள் போன்றவற்றை கலந்து உருவாக்க வேண்டும் அப்பொழுதுதான் உங்கள் கடவுச்சொல் மற்றவர்களால் யூகிக்க முடியாது .
- பதிவு செய்த பின்னர் நீங்கள் மொபைல் நம்பர் மூலம் பதிவு செய்து இருந்தீர்கள் என்றால் உங்கள் மொபைல் போனுக்கு பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து OTP வரக்கூடும்
- அல்லது மின்னஞ்சல்(email) மூலம் பதிவு செய்து இருந்தீர்கள் என்றால் உங்கள் மின்னஞ்சலுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் மூலம் OTP வரக்கூடும்
- பேஸ்புக் செயலியில் உங்களுக்கு பேஸ்புக் நிறுவனம் அனுப்பிய OTP கேட்கும். உங்களது தொலைபேசி எண்ணுக்கு அல்லது உங்களது மெயிலுக்கு அனுப்பியுள்ள OTP பேஸ்புக் செயலியில் கேட்கின்ற இடத்தில் பதிவிட வேண்டும்.
- இப்பொழுது உங்களது பேஸ்புக் கணக்கு துவங்கிவிட்டது. மேலும் உங்களது பேஸ்புக் கணக்கில் உள்ள போன் நம்பர் மற்றும் இ-மெயில் ID . நீங்கள் மட்டும் பார்க்கின்ற வகையில் லாக் (LOCK) செய்து கொள்ளலாம் மேலும் உங்களது புகைப்படங்கள் மற்றும் நீங்கள் பதிவிடும் புகைப்படங்களை நீங்கள் மட்டும் அல்லது உங்களது நண்பர்கள் மட்டும் பார்க்கும் அளவிற்கு அதை மறைத்து வைத்துக் கொள்ளலாம் அதற்கான அனைத்து வசதியும் பேஸ்புக்கில் உள்ளது.
பேஸ்புக் செயலியில் உள்ள வசதிகள்
- பேஸ்புக் செயலியில் நீங்கள் உங்களது நண்பர்களுக்கும் மற்றும் நண்பர்கள் அல்லாதவர்களுக்கு கூட மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம்.
- பேஸ்புக் செய்தியில் நீங்கள் உங்களது பொருட்களை மார்க்கெட் பகுதியில் விற்றுக் கொள்ளலாம். மேலும் உங்களுக்கு தேவையான பொருட்களை மார்க்கெட் பகுதியில் வாங்கியும் கொள்ளலாம். இந்த வசதியும் பேஸ்புக்கில் உள்ளது
- பேஸ்புக் செயலியின் உங்கள் இடத்திலிருந்து அருகாமை இடத்தில் உங்கள் நண்பர்களை லொகேஷன் ட்ராக்கிங் மூலம் எந்த இடத்தில் இருக்கிறார்கள் மற்றும் எவ்வளவு தூரத்தில் நிற்கிறார்கள் எங்களை அறிந்துகொண்டு அவர்களே நீங்கள் சென்று சந்தித்து வரலாம் .
- பேஸ்புக் செயலியின் (Game) அதிகமாக நிறைந்துள்ளது .இதில் நீங்கள் பொழுது போகாத நேரங்களில் அதனுள் சென்று சில விளையாட்டுகளை விளையாடி உங்கள் நேரத்தை சந்தோசமாக கடக்கலாம் .மேலும் நீங்கள் அந்த விளையாட்டில் எடுத்துள்ள அதிகபட்ச மதிப்பெண்ணை மற்றவர்களுக்கு ஷேர் செய்து அவர்களையும் இந்த விளையாட்டுக்கு அழைக்கலாம்.
- தற்போதைய கால கட்டங்களில் அதிகமாக டிக் டாக் போன்ற செயல்களை மக்கள் விரும்புகின்றனர். எனவே தற்போது பேஸ்புக் செயலிலும் (Shorts) என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது .இதில் நீங்கள் உங்களுக்கு திறமைக்கேற்ற நடனமாடி அல்லது ஏதாவது ஒரு தகவலை தெரிவித்து உங்கள் பேஸ்புக் செயலியில் பதிவு செய்து அது உங்கள் நண்பர்களின் பார்வைக்கு ஷேர் செய்யலாம்.
- பேஸ்புக் செயலியில் நீங்கள் ஏதாவது ஒரு தொழில் மார்க்கெட்டிங் செய்தீர்கள் என்றால் அந்த தொழிலுக்கான ஒரு விளம்பரங்களை பேஸ்புக் இணையதளத்தில் வெளியிட்டு அதன் மூலம் உங்கள் தொழிலில் வருமானத்தை அதிகப்படுத்தலாம் .
- பேஸ்புக் செயலியில் இந்த உலகில் தலைசிறந்த ஆட்கள் மற்றும் அமைப்புகள் போன்றவைகள் இந்த செயலியில் இணைந்துள்ளனர். அவர்களுடன் நாம் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ளலாம்.
- பேஸ்புக் செயலியில் ரத்த தானம் என்ற வசதி உள்ளது இதில் நீங்களும் உங்களது ரத்தத்தின் குரூப்பை அதில் பதிவு செய்துவிட்டால். உங்கள் அருகாமையில் யாரேனும் ஒருவருக்கு ரத்த உதவி வேண்டும். என்றால் உங்களது பேஸ்புக் கணக்கிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துவிடும் .அதேபோல் உங்களுக்கு ரத்தம் தேவை என்றாலும் அந்த வசதிகளில் சென்று பதிவு செய்துவிடலாம் உங்களுக்கு உதவி கிடைத்துவிடும்.
- மேலும் பேஸ்புக் செயலியில் சங்கத்தை உருவாக்கும் வசதியும் உண்டு. இதில் நீங்கள் உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் போன்றவர்களை ஒன்றாக இணைத்து சங்கத்தை உருவாக்கி. அதில் தேவையான தகவல்களை பதிவிடலாம் இது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கக் கூடும்.
- மேலும் நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்றால் உங்களது பேஸ்புக் செயலியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு என்ற ஒரு வசதியில் உங்களது. நிகழ்ச்சியின் பெயர், தேதி, இடம் ஆகியவற்றை நீங்கள் நிரப்பி அதை பதிவிட்டால் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் அது ஒரு அழைப்பிதழ் போல் சென்று உங்களது நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பை ஈட்டும்,
பேஸ்புக் செயலியில் நீங்கள் உஷாராக இருக்க வேண்டிய விஷயங்கள்
- பேஸ்புக் செயலியில் முன்பின் தெரியாத நபர்களிடம் நட்புக் கொள்வது ஆபத்தில் கொண்டு போய் சேர்த்து விடும், எனவே முன்பின் தெரியாத நபர்களை நண்பராக பேஸ்புக்கில் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
- நீங்கள் போடும் புகைப்படம் மற்றும் உங்களது தொலைபேசி எண்களை நீங்கள் அல்லது உங்களது நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் பதிவிட வேண்டும் உங்கள் நட்பு வட்டாரத்தில் இல்லாதவர்கள் பார்க்க முடியாத அளவிற்கு அதை லாக் செய்ய வேண்டும்.
- பேஸ்புக் செயலியில் பெண்களது புகைப்படங்களை பதிவிடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.ஏனென்றால் பெண்களது புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் அதை பதிவிறக்கம் செய்து அந்த புகைப்படங்களை தவறாக சித்தரித்து வெளியிடக் கூடிய அபாயம் உண்டு.
- பேஸ்புக் செயலியில் முன்பின் தெரியாத நபர்களிடம் நம்முடைய புகைப்படம் , தொலைபேசி எண், இருக்கும் இடம் ஆகியவற்றை கூறக்கூடாது. அது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
- பேஸ்புக் செயலியில் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களுக்கு ஏதாவது ஒரு குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே இருந்தார்கள் என்றால் உங்களது பேஸ்புக் செயலியில் அக்கவுண்ட் லாக் என்ற ஒரு வசதி உண்டு அதன் மூலம் நீங்கள் அவர்களை பிளாக் செய்து விடலாம் .நீங்கள் ஒருமுறை பிளாக் செய்து விட்டால் அவர்கள் மீண்டும் எந்த ஒரு குறுஞ்செய்தியும் அனுப்ப முடியாது.இதுபோல் நீங்கள் செய்துவிட்டால் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.
- பேஸ்புக்கில் நிறைய விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் போன்றவைகள் வரக்கூடும் நீங்கள் இவற்றை ஆராயாமல் எதையும் கிளிக் செய்யக்கூடாது. உங்களுக்கு சந்தேகம் ஏற்படக்கூடிய பதிவுகள் இருந்தால் அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது.
- பேஸ்புக்கில் உங்களது அக்கவுண்டை பிரைவேட் அக்கௌன்ட் ஆக வைத்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் பிரைவேட் அக்கவுண்டில் உங்களது நண்பர்கள் அல்லாதவர்கள் உங்களது புகைப்படம் மற்றும் தகவல்களை அறிந்துகொள்ள முடியாது. இது உங்களுக்கு ஒரு பாதுகாப்பான செயலியாக இருக்கக்கூடும்.
- பேஸ்புக் செயலியில் உங்கள் அக்கவுண்டில் உள்ள உங்களது தொலைபேசி எண் மற்றும் மெயில் ஐடியை நீங்கள் மட்டும் பார்க்கின்ற வகையில் அதை வைத்துக்கொள்ளலாம் . இதன்மூலம் உங்களது தொலைபேசி எண் மற்றவர்களுக்கு செல்லாமல் தவிர்க்கலாம் இதன் மூலம் உங்களுக்கு தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
- பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு செய்திகளும் இணைத்துக் கொள்ளலாம் இதில் நீங்கள் பதிவிடும் எந்த ஒரு தகவலும் இன்ஸ்டாகிராமில் பதிவாகிவிடும். இதை வேண்டுமென்றால் ஆப் செய்து வைத்துக்கொள்ளலாம்.
- நம் பதிவில் கூறியபடி நீங்கள் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்து நல்ல நண்பர்களை சேர்த்துக்கொண்டு .இனிமையான வாழ்க்கையை தொடருங்கள் மேலும் நாங்கள் கூறியபடி சில விஷயங்களை கடைபிடித்து தேவையற்ற வீண் வம்பில் சிக்காமல் அமைதியான வாழ்க்கையை வாழுங்கள்.