சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
தேசிய கொடியின் பின்னால் இருக்கும் இரகசியம் | Interesting Facts about National Flag
ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய கொடி என்பது ஒரு அடையாளம் ஒரு பெருமை என்று சொல்லலாம் ஒரு நாடு ஏதேனும் சாதனை செய்தாலோ அல்லது எந்த துறையில் சாதனை செய்தலும். தனது நாட்டின் அடையாளமாக முன்னிறுத்துவது தேசியக்கொடியை தான் தனது நாட்டின் அடையாளமாக விட்டு செல்வார்கள் உதாரணத்துக்கு நிலவில் கால் பதித்த அமெரிக்கா அங்கு தனது தேசிய கொடியை அங்கு வைத்தது, தனது நாட்டின் போட்டியாளர்கள் ஒலிம்பிக் போன்ற சவதேச போட்டியில் வெற்றிபெற்றால் அவர்களை அடையாளப்படுத்த தேசியக்கொடியை பறக்கவிடுவார்கள் இவ்வாறு தேசிய கொடியை ஒரு நாட்டின் அடையாளமாக கருதப்படுகிறது. மேலும் ஒரு நாட்டின் பெயர் சொன்னால் நாம் மனதுக்கு நினைவுக்கு வருவது அவர்கள் பயன்படுத்தும் கொடிதான். இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா.
நம் இந்தியாவில் இருக்கும் மூவர்ணக்கொடி தயாரிக்க, பயன்படுத்த மற்றும் எந்த நேரத்தில் இருந்து எந்த நேரம் வரை பறக்க விட வேண்டும் என்று சில வரைமுறைகள் உள்ளது. அதைப்பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.
நம் இந்திய கொடியின் வடிவம்:
நமது இந்திய கொடியானது நீள்சதுர வடிவத்தில் இருக்கும் அதுமட்டுமின்றி மூவர்ணமும் சரியாக அமைந்திருக்க வேண்டும் மேலிருந்து கீழாக காவி, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய மூன்று நிறங்களும் சரியான முறையில் வரிசையாக இருக்க வேண்டும். அதேபோல் கொடியின் நடுவில் உள்ள வெள்ளை பகுதியில் அசோகா சக்கரம் இருக்க வேண்டும் குறிப்பாக அந்த சக்கரத்தில் 24 அரண்கள் இருக்க வேண்டும். நம் தேசிய கொடி முழு உயரத்தில் மற்றும் முழு நீளத்திலும் மூன்றில் இரண்டு பாகமாக இருக்க வேண்டும்.
கொடியை தயாரிக்கும் முறை:
நமது நாட்டின் தேசிய கொடியை தயாரிக்கும் உரிமத்தை வைத்துருப்பது ’கர்நாடக காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கா’ (KKGSS) என்னும் ஒரு தொழிற்சாலை மட்டும் தான் இங்கு தயாரிக்கும் கொடி மட்டும் தான்
BIS தரசான்றிதழ் பெற்றது. நம் நாட்டின் தேசியக்கொடியை கைராட்டையால் நூற்கப்பட்ட கதர் துணியில் மட்டுமே தயாரிக்க வேண்டும். மேலும் தேசிய கொடியை உடையாக அணிவது குற்றமாகும். உடலுக்கு கீழ் காலசட்டையாக அணியக்கூடாது. இதை மீறுவோருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை கிடைக்கும். இல்லையெனில் இரண்டும் கிடைக்கும்.
தேசிய கொடியை பயன்படுத்தும் நேரம்
தேசியக்கொடியை காலை நேரம் 7.30 மணிக்குமேல் தான் ஏற்ற வேண்டும் அதற்கு முன்னதாக ஏற்ற கூடாது பிறகு மலை 6 மணிக்குள் கீழ இரக்கவேண்டும் அதற்கு மேல் பறக்கவிட கூடாது. கொடியை ஏற்றும்போது சற்று வேகமாகவும் அதேபோல் கிழே இரக்கும்போது மெதுவாக இரக்க வேண்டும்.
தேசிய கொடியை எவ்வாறு பயன்படுத்துவது
தேசிய கொடியை உடையாக போடக்கூடாது என்று சட்டம் முன்பு இருந்தது பிறகு தற்போது இடுப்புக்கு கீழ் மட்டும் அணிய கூடாது என்று திருத்தப்பட்டது. பிறகு நாம் கொடியை வலதுபுறமாக தான் ஏந்த வேண்டும். சிலை அல்லது நினைவு சின்னத்தை மூடுவதற்கு கொடியை பயன்படுத்தகூடாது.
இதுபோல் அரசு அங்கீகரித்த விதிமுறைகளை மீறி அல்லது அரசாங்கம் பரிந்துரைத்த வரைமுறை இல்லாமல் கொடி தயாரிப்பின் அது கள்ள நோட்டு அடிப்பதை விட மிக பெரிய குற்றமாகும் இதற்கு அபராதம் அல்லது சிறை தண்டனை கிடைக்கும் இல்லையென்றால் இரண்டும் கிடைக்க கூட வாய்ப்புள்ளது.
எனவே தேசிய கொடியை மதிப்பும் மரியாதையுடனும் சரியான முறையில் உபயோகிக்கவும்