சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
அழகர் கோவில் சிறப்புக்கள் | Intresting Facts Of Alagar Kovil In Tamil
அழகர் கோவில் சிறப்புக்கள் மாற்றும் அதன் அமைவிடம் பற்றி மேலும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்த கோவில் ஒரு திருமால் கோவிலாகும். அழகர் கோவில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அழகர் மலையில் அமைத்துள்ளது. இந்த கோவிலை காட்டியவர் இளங்கோவிதியரையர் என்னும் மன்னர் என்று தெரியவருகிறது. இந்த கோவிலின் திருப்பணியை பாண்டிய மன்னர, விஜயநகர மன்னர், மதுரை நாயக்க மன்னர் ஆகியோர்கள் மேற்கொண்டனர். போன்ற பெருமைகளை இந்த கோவிலை பெற்றுள்ளது.
அழகர் கோவில் கட்டிட கலையின் சிறப்புகள்
பொதுவாக மன்னர்கள் கட்டிய பழமையான கோவில்களில் பல ஆச்சரியங்கள் மிகுந்த கட்டிட நுட்பங்கள் இடம்பெற்றிருக்கும் அதில் இந்த கோவில் ஒன்றும் குறைந்தது அல்ல. இதில் பல கட்டிட கலை சிறப்புகள் பல உள்ளது அவைபற்றி இந்த பதிவில் பார்ப்போம்
இந்த கோவில் உள்ள ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் வெவேறு விதமாக ஒளி எழுப்ப கூடிய இசைத்தூண்கள் உள்ளது
அதுமட்டுமின்றி இந்த தூணில் உள்ள உச்சியில் ஒரு சிங்கம் இருக்கும் அந்த சிங்கத்தின் வாயில் ஒரு உருண்டை இருக்கும் அதை நாமல் உருட்ட முடியும் ஆனால் வெளியில் எடுக்க முடியாது. இதுபோன்ற அமைப்பை எவ்வாறு ஷைஹ்ட்டார்கள் என்றும் இன்றும் யாரலும் கண்டுபுடிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைத்துப்போயிருக்கின்றன. இதில் உள்ள வசந்த மண்டபத்தில் ராமாயணம் மற்றும் மஹாபாரதம் சித்தரிக்கும் ஓவியங்கள் இருக்கும் மேலும் பல சிறப்புக்கள் இந்த கோவிலில் உள்ளது
அழகர் கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழா
அழகர் கோவிலில் நடக்கும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா சித்திரை திருவிழா. இந்த திருவிழாக்கு உலகம் முழுவதும் மக்கள் வந்து விழாவை சிறப்பிப்பார்கள். வருட வருடம் 5 லட்சம் மக்கள் வந்து செல்வதாக ஆய்வுகள் கூறுகின்றது. மேலும் இந்த திருவிழா கொடியேற்றத்தில் இருந்து மொத்தம் 16 நாட்கள் நடக்கும் இதை திருவிழாக்களின் திருவிழா என்றும் கூறுவார். இது சித்திரை தமிழ் வருடத்தில் சித்திரை மாதத்தில் நடக்கும்.
சித்திரை திருவிழாவின் கதை
இந்த திருவிழா பற்றிய சில கதைகள் உள்ளது அதாவது தங்கையின் திருமணத்துக்கு அழகர் சீர்வரிசையுடன் புறப்பட்டு மதுரை வருகிறார் அழகர். அவர் வருவதற்குள் கல்யாணம் முடிந்துவிடுகிறது இதனால் கோவித்துக்கொண்டு வைகையாற்றில் குளித்துவிட்டு வண்டியூர் சென்றுள்ளார் அதோடு அன்றிரவு தலுக்கு நாச்சியார் வீட்டில் தங்கி விட்டு அடுத்த நாள் அழகர் மலைக்கு சென்றுவிடுவார். இதுவே இந்த கதையாகும். இதுவே இந்த திருவிழா நடக்கும் நிகழ்ச்சியாகும்.
அழகர் கோவில் திறந்திருக்கும் நேரம்
இந்த கோவில் பொதுவாக அணைத்து நாட்களும் திறந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது என்றாலும் எந்த நேரத்தில் திறந்து இருப்பது என்றால் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும் மீண்டும் கோவில் 3 மணி நேரம் இடைவெளிக்கு பிறகு மதியம் 3.30 மணிக்கு திறக்கப்படும் பிறகு இரவு 8 மனை வரை திறந்திருக்கும் அதற்குள் பக்தர்கள் அனைவரும் சென்று இந்த கோவிலில் தரிசனம் செய்யலாம்.
மேலும் இந்த அழகர் கோவிலின் சிறப்புகள் மற்றும் அமைவிடம் பற்றி பல குறிப்புகளை தெரிந்திருப்பீர்கள் மேல் இந்த கோவிலை நேரில் சென்று பார்த்து அந்த அழகை அனுபவிக்கவும் மேலும் சித்திரை திருவிழாவை யாரும் தவறாமல் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஒன்று.