சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஏலத்திற்கு வருமா ? மறைந்த ஜெ .ஜெயலலிதா அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அசையும் சொத்துக்கள்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யும்படி பெங்களூருவில் உள்ள தகவல் செயல்பாட்டாளர் ஒருவர் இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிஇக்கு கடிதம் எழுதியுள்ளார் இதற்கு வழக்கறிஞர் நரசிம்ம மூர்த்தி இக்கடிதத்தை பெங்களூர் முதன்மை சிட்டி சிவில் செஷன்ஸ் நீதிபதி இக்கு கடிதம் எழுதியுள்ளார் அக்கடிதத்தில் நகைகள் புடவைகள் மற்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள பல சொத்துக்களை ஏலம் விடலாம் என்று அப்பணத்தை சில பொது நலனுக்காக பயன்படுத்தலாம் என்று யோசனை கூறினார் ஜெயலலிதா சொத்தை ஏலம் விடும் போது அவரின் தீரா தொண்டர்கள் அவற்றை வாங்குவார்கள் அதன்மூலம் கற்பனை செய்ய முடியாத உதவி தொகை பெற முடியும் என்று நரசிம்மமூர்த்தி குறிப்பிட்டுள்ளார் கருவூலத்தில் கிடைக்கும் பல்வேறு பொருட்களில் புடவைகள் நகைகள் மற்றும் சால்வைகள் அடங்கும் ஜெயலலிதாவை லட்சக்கணக்கில் ஆதரவாளர்கள் மற்றும் அபிமானிகள் இருப்பதால் நல்ல தொகையை எட்ட முடியும் என்றும் நரசிம்மமூர்த்தி யோசனை கூறினார் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு முன்பே இந்த பொருட்கள் 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி உத்தரவின்படி பறிமுதல் செய்யப்பட்டன இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ,இளவரசி ,சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை உறுதி படுத்தியது ஆனால் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டது
தங்கம் வைரம் மரகதம் ரத்தினக் கற்கள் மற்றும் பல வண்ணக் கற்கள் உட்பட 462 நகைகள் பட்டியலில் உள்ளன மேலும் சில வகை மின்னணு பொருட்கள் ரொக்கம் விலை உயர்ந்த சேலைகள் காலணிகள் அந்த பட்டியலில் உள்ளன இதில் புடவைகள் எண்ணிக்கை மட்டும் 11344, சால்வைகளை எண்ணிக்கை 250, காலணிகளை எண்ணிக்கை 750, என குறிப்பிடப்பட்டுள்ளது சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டனில் 1996ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி ஜெயலலிதாவின் இல்லத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட குறிப்பேட்டில் 44 ஏசி இயந்திரங்கள், 33 தொலைபேசி, 131 ஒரு சூட்கேஸ், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர்க் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள் ,146 அலங்கார நாற்காலிகள், 34 டீ பாய், 31 டேபிள்கள் ,24 கட்டில்கள், 9 ட்ரெஸ்ஸிங் டேபிள்கள், 81 அலங்கார தொங்கும் விலங்குகள், 20 சோபா செட்டுகள், 215 கண்ணாடிகள், குறிப்பிடப்பட்டிருந்தன இவ்வகை பொருட்களில் புடவை போன்ற பொருள் நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருந்தால் அதன் நிறத்தையும் தன்மையையும் இலந்து விடும் அதுபோன்ற காலணிகள் மற்றும் தோல் சார் பொருள் அதன் வலிமையையும் இழக்கலாம். பறிமுதல் செய்யப்பட்ட பட்டியலில் உள்ள பொருட்கள் தரமற்றதாகவும் நாளடைவில் எந்த பயன்பாட்டிற்கும் தகுதியற்றவை ஆக மாறலாம் என்றும் கடிதத்தில் நரசிம்மமூர்த்தி கூறியுள்ளார் எனவே உரிய சட்ட நடைமுறைகளை எடுத்து எது தகுதியாக இருக்குமோ அதைப் பின்பற்றி இந்த நீதிமன்றம் இணைப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பொருட்களை விற்க உரிய அதிகாரிகளை மூலம் அனுப்பலாம் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மாநில கருவூலத்தில் வரவு வைத்து மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று நரசிம்மமூர்த்தி கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்