சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஜெனிபர் பாம்ப்லோனா (Jennifer Pamplona) தற்போதை நிலமை!
பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ஜெனிபர் பாம்ப்லோனா என்பவர், தனது உருவத்தை அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் போல மாற்றிக் கொள்ள நினைத்து 40 முறை மேல் உருவமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளார். சிறுவயதிலிருந்தே பிரபலங்களின் நடை உடை பாவனைகளை செய்யத் தொடங்கிய நடிகை ஜெனிபர் பாம்ப்லோனா 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து தன்னை மாடல் அழகி கிம் கர்தாஷியன் போல மாற்றிக் கொள்ள அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு முறையும் நடந்த அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட ஏதாவது ஒரு குறை பாட்டால் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையாக இருந்த அழகு மாறி ஜெனிஃபர் பாம்ப்லோனா விசித்திரமான உருவ அமைப்புக்கு மாறியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ரசிகர்கள் அவரை கிம் அபரா என்று அழைத்து வந்த நிலையில் தற்போது அவர் தனக்கு அது பிடிக்கவில்லை எனவும் மேலும் ஆத்திரமாக வந்ததால் தான் எளிதாக முடிவெடுத்து தனது பழைய உருவத்தை மாற்றிக் கொள்ள மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வது தனக்கு போதை போல இருந்ததனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதனை மேற்கொண்டதாகவும் ஒருகட்டத்தில் அது தனக்கு திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரவில்லை என்பதால் பழைய நிலைக்கு திரும்புவதற்காக இஸ்தான்புல்லில் உள்ள மருத்துவரை அணுகி பழைய உருவமைப்பை பெறுவதற்காக 95 லட்சம் ரூபாயை அறுவை சிகிச்சைக்காக வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.