சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
இயேசுவின் பொன்மொழிகள் | Jesus Golden Words In Tamil
இயேசு என்பவர் கிறிஸ்துவ சமயத்தை தோற்றுவித்தவர். இவர் கிறிஸ்துவ மதத்தின் மஹான் என்றும் அந்த மதத்தின் கடவுளாகவும் போற்றப்படுகிறார். இயேசு என்பவர் கலிலேய நாட்டில் வாழ்ந்த ஒரு யூதர் ஆவார். இவரது பிறந்த நாளை தான் கிறிஸ்துவ மதத்தினர் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். இவர் கூறிய வார்த்தைகளை பைபிள் என்னும் புத்தகமாக தொகுத்து அவர் கூறிய வார்த்தைகளை பின்பற்றி வருகின்றன. மேலும் அவர் கூறிய சில பொன்மொழிகளை பின் வரும் பதிவில் பார்ப்போம்.
சிறுமை பட்டவனுக்கு கர்த்தர் அடைக்கலமானவர், கஷ்டப்படுகின்ற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
உன் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பர் உனது பிள்ளைகளின் சமாதானம் பெரிதாக இருக்கும்
நீ தீமையினால் வெல்லப்படாமல் தீமையை நன்மையால் வெல்லு
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களை தேற்றுவேன்
உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும்
கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் திறக்கப்படும்
அமைதிக்காக உழைத்து, அமைதியுடன் வாழ்பவர்களே பாக்கியசாலிகள்
பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உங்களை சபிப்பவரை வாழ்த்துங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்
சோதனைகளை சகித்துக்கொள்ளும் மனிதன் பாக்கியவான்.