சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
kadi Jokes in Tamil | கடி ஜோக் தமிழில்
மக்கள் அனைவரும் தற்போதைய காலகட்டங்களில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் .
இந்த மன அழுத்தம் அவர்களுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மன அழுத்தத்தைப் போக்குவதற்கு அனைவரும் ஏதாவது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அல்லது நகைச்சுவை புத்தகத்தை வாசித்து மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நகைச்சுவையில் மிக அருமையான நகைச்சுவைகள் தான் கடி ஜோக் எனப்படும் . இந்த வகையான நகைச்சுவைகள் ஒருவித ஆச்சரியமும் நகைச்சுவையையும் சேர்த்து வழங்கும். நீங்கள் இவ்வகை நகைச்சுவைகளை கற்பனை கூட செய்யமுடியாத அளவுக்கு ஒரு விசித்திரமான நகைச்சுவையாக இருக்கும்.
இந்த வகை நகைச்சுவைகள் அதிகம் கேட்பதினால் நமக்கு ஒரு ஆனந்தம் மனதில் ஏற்படுகின்றது இந்த ஆனந்தத்தின் ஆள் மன நிம்மதி அடைந்து உடல் ஆரோக்கியம் அடைகிறது . இந்தப் பதிவில் சில கடி ஜோக்குகள் சிலவற்றை பார்ப்போம்.
- வேடந்தாங்கல் பறவைகள் எங்கிருந்து வருகின்றன ?
- முட்டையிலிருந்து தான்
- உலகில் அதிகமாக பங்களாக்கள் உள்ள நாடு எது ?
- பங்களாதேஷ்
- ஒருவனுக்கு செல்போன் என்றால் மிக அதிக விருப்பம் அவளுடைய அப்பாவிடம் எனக்கு ஒரு செல்போன் வேண்டும் என்று கேட்டான் அதற்கு அப்பா அவனுக்கு செல்போன் வாங்கி கொடுத்தார் ஆனால் அவன் செல்லை வாங்கி அப்படியே பார்த்துக் கொண்டே இருந்தான் ஏன் என்று தெரியுமா ?
- அது பார்சல்
- ஒருவர் தன்னுடைய மனைவி வரும் பொழுது மட்டும் கண்ணாடி போட்டுக் கொண்டுள்ளார் ஏன் தெரியுமா ?
- டாக்டர் தலைவலி வரும்போது மட்டும் போட சொன்னாராம்
- ஒருவன் அவன் வளர்க்கும் நாய் குட்டிக்கு பாலை காதில் ஊற்றி உள்ளான். இதற்கு ஏன் காதில் ஊற்றினால் என்று கேட்டதற்கு என்னுடைய தாய் சொன்னாள் நாய்க்குட்டி வாயில்லா ஜீவன் என்று அதனால்தான் காதில் ஊற்றினேன் என்றான்
- ஒரு பையன் கல்யாண தரகரிடம் எனக்கு ஸ்மார்ட்போன் வைத்துள்ள பொண்ணுதான் வேணும் என்று கூறினால் அது ஏன் ?
- அப்போதுதான் அந்த பொண்ணு குனிந்த தலையை நிமிராமல் செல்லும் என்றான்
- வெற்றிலையுடன் சேராத பாக்கு எது?
- மைசூர் பார்க்க
- அதிகமாக வெயிட் தூக்கும் பூச்சி எது ?
- மூட்டை பூச்சி
- டிரைவிங் லைசன்ஸ் வாங்குவதற்கு ஒருவன் சாக்பீஸ் எடுத்துக்கொண்டு சென்றான் அது ஏன்
- எட்டு போட்டு காட்டுவதற்காக
- செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்
- மனுசனுக்கு கால் இல்லைன்னா பேலன்ஸ் பண்ண முடியாது செல்போனுக்கு பேலன்ஸ் இல்லையென்றால் கால் பண்ண முடியாது
- பல் டாக்டருக்கு தான் அதிகம் சொத்து இருக்கிறது அது ஏன் ?
- என அவர் தான் எல்லாருடைய சொத்தையும் புடுங்கிறாரே
- எந்த எழுத்தை எழுத முடியாது ?
- தலையெழுத்தை
- கடற்கரையில் வீடு கட்டினால் என்ன ஆகும் ?
- காசு செலவாகும்
- பத்து யானையில் ஒன்பது யானை பேருந்தில் ஏறி விட்டன ஒரு யானை மட்டும் அந்த பேருந்தில் ஏற வில்லை ஏன் ?
- அது ஆண் யானை ,வந்ததோ லேடிஸ் பஸ்