சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
கள்ளக்குறிச்சி அருகே மாணவி எடுத்த விபரீத முடிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளிகள் ஸ்ரீமதி என்ற மாணவி பிளஸ் டூ படித்து வந்தார் அப்போது பள்ளியில் விடுதியில் தங்கி அவர் படித்து வந்த நிலையில் திடீரென அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர் இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் உடனே சடலம் வைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பாக திரண்டனர் இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது
அப்போது பள்ளிக்கு வந்த ஆசிரியர்களை மாணவியின் உறவினர்கள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது அதேநேரம் ஆசிரியரின் செல்போனையும் அவர்கள் புரிந்து கொண்டனர்
இதனை அடுத்து மாணவி கைப்பட எழுதி வைத்திருந்ததாகக் கூறி கடிதம் ஒன்றை மாவட்ட எஸ்பி செல்வகுமார் உறவினர்கள் முன்னிலையில் படித்துக் காட்டினார் அதில் விளையாட்டாக இருந்த தன்னை ஆசிரியர்கள் படிக்கச் சொல்லி கண்டித்ததாக குறிப்பிட்டுள்ளார் தொடர்ந்து தன்னை படிக்க வேண்டும் என ஆசிரியர்கள் தொந்தரவு செய்து வந்தால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்
இந்த கடிதத்தில் என்னை மன்னித்து விடுங்கள் என்று ஆசிரியர்களுக்கும் என்னை மன்னித்து விடுங்கள் என பெற்றோருக்கும் உருக்கமாக எழுதி வைத்துள்ளார்
மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இதற்கு முன்பாக பள்ளியில் 4 மாணவர்கள் உயிரிழந்ததை சுடுகாட்டில் கோஷங்களை எழுப்பினர் இதனையடுத்து கணக்கு பாடம் எடுத்த ஆசிரியர் , ஆசிரியை ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது