சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
கள்ளக்குறிச்சி போராட்டத்தில் வெடித்த வன்முறை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கும் 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாகம் தரப்பில் அவர் மொட்டை மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதனால் அங்கு பணிபுரிந்த இரண்டு ஆசிரியர்களை கைது செய்தனர்.
அப்போது அந்த மாணவி மருத்துவமனைக்கு எடுத்து வரும்போதே இறந்த நிலையில் தான் வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அனால் தொலைபேசியில் பெற்றோர்களுக்கு உங்கள் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
பிறகு மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்த உறவினர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருக்கும் மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 நாட்களாக நடந்த போராட்டத்தில் நேற்று போராட்டக்காரர்கள் பள்ளி முன்பு மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அனுமதி இல்லாமல் நடந்த போராட்டத்தால் அங்கு கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர் போராட்டக்கார்களை கலைப்பதற்காக தடியடி நடத்தியபோது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறினர். பிறகு போலீசாரின் கைமீறி சென்ற போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளிக்குள் சென்ற போராட்டக்காரர்கள் அங்கு உள்ள அணைத்து பொருட்களையுமகள் சேதப்படுத்தியது மட்டுமின்றி அங்கு உள்ள வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர் பிறகு பள்ளிக்கு சொந்தமான பேருந்துகளை தீக்கு இறையாக்கினார். அதேசமயம் அங்கு பள்ளியில் உள்ள அணைத்து ஆவணங்களும் எரிக்கப்பட்டது மற்றும் அங்கு இருந்த டேபிள் பெஞ்ச் போன்ற பொருட்களை போராட்டக்காரர்கள் பள்ளியில் இருந்து தூக்கி சென்றனர். பிறகு நெருப்பை அணைப்பதற்காக வந்த தீயணைப்பு வாகனத்தை கற்கள் வீசி தாக்கி திருப்பி அனுப்பினார். போராட்டம் தொடர்ந்து உக்கிரமாகி இருந்ததாலும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். பிறகு போராட்டத்தை கலைக்க அதிவிரைவுப்படை வரவழைக்கப்பட்டது, அவர்கள் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க பார்த்தனர் அப்போதும் களைந்து செல்லாததால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது பிறகு அங்கு இருந்து பரவும் வதந்திகளை தடுப்பதற்கு அங்கு ஜாமர்கள் வைக்கப்பட்டது இதனால் நாகு போராட்டக்காரர்கள் ஒன்றுகூடுவது தவிறக்கப்பட்டது பிறகு அங்கு அதிரடிப்படையினர் ஒன்று குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.