சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
காமராஜருக்கு இன்று பிறந்தநாள்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜருக்கு இன்று 120வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இவர் தமிழ் நாட்டுக்கு முதலமைச்சராக இருந்தபோது நம் தமிழ்நாட்டுக்கு பொற்கால ஆட்சியாக இருந்தது மேலும் இவர் சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார் இவரை கல்வி கண் திறந்த காமராஜர் என்றும் குறிப்பிடுவர் இவர் அறிமுக படுத்தியதுதான் மதிய உணவு திட்டம் இதனால்தான் பலரும் பள்ளிக்கு சென்று கல்வி பயில உதவியாக இருந்தது இதனால் பலரின் வாழ்கை முன்னேற்றம் அடைந்துள்ளது இதனால் தான் இவரை கல்விக்கண் திறந்த காமராஜர் என்று கூறுவார்.
மேலும் ஆறது பிறந்த நாளுக்கு தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் தந்து வாழ்த்தை பதிவிட்டிருந்தார் அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதால் நேரில் மரியாதையை செலுத்த முடியவில்லை. மேலும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டது என்னவென்றால் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்விவளர்ச்சி நாள் என தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களை தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும் என்றும் மேலும் போராடி பெற்ற கல்வியால் அறிவார்ந்த நல்ல சமுதாயமாய் விளங்கிடுவோம் என்றும் கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள் என்றும் தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று உறுதியெடுக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.