சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
காமராஜர் பொன்மொழிகள் | Kamarajar Quotes In Tamil 
இவர் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தபோது பல நலத்திட்டங்களை கொண்டு வந்தார் அரசு பள்ளிகளில் மத்திய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தது இவர் தான். இவர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர்பெற்றவர். இவரது 9 ஆண்டு கால ஆட்சியை பொற்கால ஆட்சி என்று குறிப்பிடுவர். இறுதி வரை திருமணம் செய்துகொள்ளாமல் நாட்டுக்காக வாழ்ந்து வந்தார். இவருக்கு தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர், கர்மவீரர், கருப்பு காந்தி, கல்வி கண் திறந்தவர் என்று இவருக்கு பல பெயர்கள் இவரது பெருமை பேசும். இவரின் மறைவுக்கு பிறகு தான் இந்தியா அரசு இவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து பெருமைப்படுத்தியது. இப்பொது படிக்காத மேதையிடம் இருந்து சில தத்துவங்களை பார்ப்போம்.
- எல்லாருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை
- கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது.
- சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை, சட்டத்துக்கும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை.
- நேரம் தவறாமை ஏன்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதுமே கதாநாயகன் தான்.
- அப்பாவி ஏழை மக்களை வசதி கொண்டவர்களும் கல்மனம் கொண்டவர்களும், கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது மிக அவசியம்.
- கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும், சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை கல்வியும் உழைப்பும் போதுமானது.
- பணம் இருந்தால் தான் நாலு பெரு மதிப்பார்கள் என்றால் அந்த மானங்கெட்ட மரியாதை எனக்கு தேவையில்லை.
- பிறை உழைப்பை தன் சுய நலத்திற்கு பயன்படுத்துவதே உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.
- ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்துக்கு கல்வி தருவதாகும்.
- ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும்.
- உன் பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்துவை, சொத்து சேர்த்து வைத்து பிள்ளையை ஊனம் ஆக்காதே.
- உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளச்சியின் அடையாளம்.
- அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது.
keywords:
kamarajar Quotes In Tamil
Tamil Quotes
Tamil