சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
திருமணம் செய்வதாக ஏமாற்றியவருக்கு கத்தி குத்து!
கன்னியாகுமரி அருகே பொய் சொல்லி ஏமாற்றிய இளைஞரை ஒரு பேராசிரியர் 30 இடங்களில் கத்தியால் குத்தி கொலைசெய்துள்ளார். நாகர்கோவில் மாவட்டம் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ரிதீஷ்குமார் ஆரல்வாய்மொழியில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் உதவியாளராக பணியாற்றினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாசம் தான் கீர்த்திகா என்பவருடன் திருமணம் முடிந்தது பிறகு அவர் பணிபுரியும் இடத்துக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவந்துள்ளார்.
இந்த நிலையில் இஎஸ்ஐ மருந்தகத்தில் இருந்து அலறல் சத்தம் வந்துள்ளது அந்த சத்தம் கேட்டு அகம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது அங்கு உள்ள ரிதீஷ் குமார் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்தார் அவரது அருகில் ஒரு பெண் கையில் கத்தியோடு அமர்ந்திருந்தார்.சம்பவஇடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கு இருந்த அந்த கொலையாளியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அந்த பெண் மணவாளகுறிச்சியை சேர்ந்த மேக்சன் என்பவற்றின் மனைவி ஷீபா இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குமரியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 ஆண்டுகள் பேராசிரியாக பணியாற்றியுள்ளார்.
2013ம் ஆண்டு இவருக்கும் ரதீஷ் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து தனது கணவரையும் குழந்தையும் விட்டுவிட்டு வருமாறு ரதீஷ் குமாருடன் செல்ல தயாராகியுள்ளார் இதனை தொடர்ந்து தான் ரதீஷ் குமாருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது இதனால் குமார் ஷீபாவுடன் இருந்த தொடர்பை துண்டித்துள்ளார் இதனை ஏற்க முடியாத ஷீபா குமாரை மேலும் மேலும் தொந்தரவு செய்துள்ளார் இதனால் கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்று கூறி தனது பிறந்த நாள் அன்று வருவதாகவும் அன்று ஒன்றாக சாப்பிடலாம் என்றும் கூறியிருந்தார் குமாரும் இறக்க பட்டு வர சொல்ல ஷீபா தான் சமைத்த உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து உள்ளார் அதை சாப்பிட குமார் அங்கு மயங்கி விழுந்த உடன் தான் வைத்து இருந்த கத்தியால் குமாரை 30 இடத்தில தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது ஷீபாவுக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமண ஆகியுள்ளது இதனை தொடர்ந்து அவரின் இரண்டாவது பிரசவத்தின்போது தான் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது அப்போது ரிதீஷ் குமார் ஷீபாவிடம் நீ விவாகரத்து செய்துவிட்டு வா நாம் திருமண செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஷீபாவும் போராடி 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார் பின்பு இருவரும் திருமணம் செய்யாமல் ஒரு வருடம் ஒன்றாக இருந்து வந்தனர் பின்பு ஷீபாவுக்கு தெரியாமல் குமார் திருமணம் செய்து கொண்டார் இதனை அறிந்த ஷீபா கத்தியால் கைகளை அறுத்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பிறகு ஏனக்கு தீர்மானம் ஆகவில்லை என்று பொய் சொல்லி அவளை சமாதானம் செய்துள்ளார் பிறகு விவாகரத்து செய்கிறான் என்று சொல்லி 1.5 லட்சம் பணம் வாங்கியுள்ளார் ஆனால் விவாகரத்தும் செய்யவில்லை என்று தெரிந்தபின் தற்போது தன்னை ஏமாற்றிய குமாரை பழி தீர்த்துள்ளார் ஷீபா.