சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
குமரி தமிழனின் வீரத்தை பார்த்து அசந்து போன ஆப்பிரிக்க நாட்டை செர்ந்த பளு தூக்கும் வீரர்:-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த சில தினங்களாக ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸ் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு கலைஞராக ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் 80 கிலோ எடை கொண்ட பெரிய இரும்பு உருண்டையை ஒற்றைக் கையால் தூக்கி சாதனை செய்து வருகிறார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் அந்த ஆப்பிரிக்க வீரர் 80 கிலோ எடை கொண்ட உலோகத்தை தலைக்குமேல் ஒற்றைக் கையால் தூக்க முடியுமா என மைக்கில் சவால் விடுத்தார் அப்போது அங்கு அமர்ந்திருந்த நமது குமரி மாவட்டம் நாகர்கோவிலை செர்ந்த குமரி மண்ணின் மைந்தரான கண்ணன் என்பவர் சவாலை எதிர்கொள்ள தயார் என்றார். இதன்படி அங்கிருந்த 80 கிலோ எடை கொண்ட இரும்பு எடையை ஒற்றைக் கையால் தனது தலைக்கு மேல் தூக்கி சாதனை படைத்தார் அதனை கண்ட ஆப்பிரிக்க வீரர் தட்டிக்கொடுத்து பாராட்டினார். அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் அனைவரும் கண்ணனுக்கு கரகோஷம் எழுப்பி வாழ்த்துக்கள். இருதி நாளில் மீண்டும் திரும்ப தூக்க போவதாக கண்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார். சவாலை சாதித்துக் காட்டிய கண்ணனின் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு தமிழனின் வீரம் சதரணம் அல்ல என்பதற்கு இந்த சம்பவம் நிகழ்கால உதாரணம்.