சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
வீட்டில் லட்சுமி கடாட்சம் தங்க வேண்டுமா..!(Lakshmi Kataksam Stay at Home)
நாம் வாழும் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவர்கள். அவ்வாறு மகாலட்சுமி கடாட்சம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதர்க்கு நாம் எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
- சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு வீட்டைப் பெருக்கவோ, துடைக்கவோ கூடாது.
- வீட்டில் இருக்கும் உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவை முற்றிலும் தீரும் வரை வாங்காமல் இருக்கக் கூடாது.
- பெண்கள் செவ்வாய், வெள்ளி தவிர மற்ற நாட்களில் தலைக்கு குளிக்கக்கூடாது.
- வீட்டில் உள்ள விளக்கை ஆண்கள் ஏற்றக்கூடாது. வீட்டில் உள்ள பெண்கள் தான் விளக்கை ஏற்ற வேண்டும்.
- தலைமுடி தரையில் விழுந்து வீட்டினுள் சுழன்று கொண்டிருக்கக் கூடாது.
- வீட்டில் கரையான் புற்று இருக்கக்கூடாது. அப்படி கரையான் புற்று இருந்தால் அதனை உடனே அகற்றி விட வேண்டும்.
- வீட்டில் ஈரத் துணிகளை அதிக நேரம் போட்டு வைத்திருக்கக்கூடாது.
- வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இல்லை.. இல்லை, வரவே.. வராது, வேண்டாம்.. வேண்டாம், அய்யோ, அடப்பாவி போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரிக்கக்கூடாது.
- வீட்டில் பு ராண், தேள் போன்ற விஷ ஜந்துக்கள் உலாவக் கூடாது.
- வீட்டின் ஜன்னல், சுவர், வாசற்கதவு ஆகியவற்றின் மேல் ஒட்டறைகள் சேரக்கூடாது. வாரம் ஒருமுறை ஒட்டடைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
- வீட்டில் நாம் உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை வீணடிக்கக் கூடாது.
- வீட்டில் உள்ள குழாய்களில் சொட்டு சொட்டாக தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும்படி வைத்திருக்கக் கூடாது.
- வாசலில் விடும் செருப்பு, துடைப்பம் போன்றவற்றை அலங்கோலமாக வைத்திருக்கக் கூடாது.
- வீட்டினுள் குறைந்த அளவு வெளிச்சமாவது இருக்க வேண்டும். வீடு முழுவதும் இருள் சு ழ்ந்த நிலையில் இருக்கக் கூடாது.
- சமையல் அறையில் சமைத்த, சாப்பிட்ட பாத்திரங்களை கழுவாமல் அப்படியே அதிக நேரம் போட்டு வைத்திருக்கக் கூடாது.
இந்த மாதிரியான செயல்களை செய்துவர நம் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நமக்கு கிடைத்து, பின் தீராத பணத்தட்டுப்பாடு நீங்கி பின் செல்வம் சேர, கடன் சுமை நீங்க, வெளியில் கொடுத்த பணம் வசூல் ஆக, மற்றும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும்.