சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஃபோர்டு நிறுவனம் மூடப்பட்டது(Last Day of Ford)..!
ஃபோர்டு அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் வாகன தியாரிப்பில் ஈடுபட்டு வந்தது. சென்னையில் உள்ள ஆலையில் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது ஆனால் தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்து வந்தனர். இதனால் இந்நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தை சந்த்தித்து இதனால் கடத்த 10 ஆண்டில் இந்த நிறுவனத்துக்கு 14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.இதனால் தொழிற்சாலையை மூடுவதற்கு முடிவு செய்தது அந்நிறுவனம்.
இதனை அறிந்து அந்நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்த ஊழியர்கள் தொழிற்சாலையை மூடக்கூடாது மற்றும் அவர்களின் பணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கடந்த 30 நாட்களாக போராட்டம் செய்தனர். போராட்டத்தை கைவிட்டு மீண்டும் உற்பத்தியை 10 நாட்களுக்கு முன்பு தொடங்கினர் சென்னை மறைமலைநகரில் உள்ள அந்நிறுவனத்தின் கடைசி உற்பத்தி இன்றுடன் முடிவடைகிறது தனது கடைசி காராக ஈகோ ஸ்போர்ட்ஸ் மாடல் உற்பத்தியுடன் நிறைவு செய்தது சென்னை தொழிற்சாலை. கடைசி காரை தயாரித்த நிறுவனத்தின் ஊழியர்கள் அந்த காரை அலங்கரித்து கண்ணீருடன் விடை கொடுத்தனர். இந்த தொழிற்சாலை ஜூலை 31 முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது.