சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Life Pain Quotes in Tamil, Pain Deep Life Quotes in Tamil | இதயத்தின் ஆழமான வலியின் தத்துவங்கள்
வாழ்க்கையில் அனைவருக்கும் துன்பங்கள் அவ்வப்போது வந்து செல்லும் அதில் சில துன்பங்கள் அவர்களின் மனதில் ஏற்க முடியாத அளவுக்கு மிக கடுமையாக இருக்கும்.
ஒருவருக்கு ஏற்படும் மிகக்கடுமையான துன்பம் அவர் மனதில் ஆழமாக பதிந்து அதை நினைக்கும் போதெல்லாம் மன வலி ஏற்பட்டு அவரின் உடல் நிலையை பாதிக்கும் அளவிற்கு மாறிவிடும்,மனிதர்கள் மனதில் உள்ள கவலையை முற்றிலும் போக்கி மன நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர் .
காதல் தோல்வி, தொழிலில் நட்டம் , தாம்பத்திய உறவில் சண்டை ,குடும்பத்தில் சண்டை , உடல் உபாதைகள் போன்றவற்றினால் மனதில் ஏற்படும் வலி மிகவும் கடுமையாக இருக்கும் .
ஆனால் நாம் அந்த வலியை ஒரு வெற்றியின் படியாக வைத்து நம் வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டும் . இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் துயரம் என்பது ஏற்படும் ஆனால் மற்ற உயிர் ஜீவன்களும் அதை அப்பொழுது மட்டுமே கவலையாக எடுத்துக்கொள்ளும் மீண்டும் அதை மறந்து விடும் ஆனால் மனிதர்கள் மட்டும் அதை மனதில் வைத்து மீண்டும் மீண்டும் தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்கின்றனர் இதனையடுத்து அவர்களுக்கு பல நோய்கள் உடலில் வந்து சேரும்.
எனவே கவலையற்ற வாழ்க்கையே நிம்மதியான வாழ்க ஆகும் தற்போதைய பதிவில் சில இதயத்தின் ஆழமான வலியின் தத்துவங்களை பார்ப்போம்

- உன்னை மறந்த இதயத்தை நினைத்துக்கொண்டு உன்னை உண்மையாக நேசிக்கும் இதயத்தை இழந்து விடாதே

- தனிமை கொஞ்சம் வித்தியாசமானது நாமே எடுத்துக் கொண்டாள் இனிக்கும் மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் கசக்கும்

- நாமும் இந்த குடையும் ஒன்று பல நேரங்களில் நாம் தேவை என்றால் நம்மை தூக்கிப் பிடிப்பார்கள் இல்லை என்றால் ஒரு ஓரமாக ஒதுக்கி வைப்பார்கள்

- வேண்டுமென்றால் வருவது வேண்டாம் என்றாள் விட்டுப் போவது வேடிக்கை உலகின் வாடிக்கை ஆகி போனது

- முடிவே இல்லாத பாதையில் பயணம் செய்கிறேன் முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்

- இருப்பதைவிட இழந்ததை தான் மனம் அதிகம் தேடுகிறது

- தேடல்களை தெளிவுபடுத்தி கொள்ளாதவரை பயணங்கள் யாவும் குழப்பமாகவே நீடிக்கும்

- சிலரிடம் சில விஷயங்களை புரிய வைக்க கஷ்டப்படுவதை விட சிரித்துவிட்டு கடந்து செல்வதே சிறந்தது

- தினமும் திட்டும் மற்றவர்களின் வார்த்தைகளை விட திட்டாமல் நகரும் நண்பர்களின் மெளனம் கொடியது

- நீ பேச மறந்தாய் என்பதைவிட பேசியதை மறந்தாய் என நினைக்கும் போது தான் அதிகம் வலிக்கிறது மனம்

- நாட்கள் வேகமாய் நகர்கிறது ஆனால் நான் அப்படியே தான் நிற்கிறேன் நீ என்னை விட்டுச் சென்ற இடத்தில்

- சில ஏமாற்றங்களையும் வலியும் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது தான் மனம் தேடும் தனிமை