சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Life Quotes in Tamil | வாழ்க்கை மேற்கோள்கள்
வாழ்க்கை என்னும் பயணத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் ஏராளமாக உள்ளன. அதில் பிறந்தோம், இறந்தோம் என்ற சாதாரணமான வாழ்க்கையில் எந்தவிதமான தடைகளோ, வேதனைகளோ, அவமானங்களோ இல்லை. ஆனால் சாதிக்க நினைக்கும் சரித்திர வாழ்க்கையில் தடைகளும் வலிகளும் அதிகம் தானே!
இப்படித் தான் வாழவேண்டும் என்று ஒரு பிரிவினரும் எப்படியாவது வாழ வேண்டும் என்று ஒரு பிரிவினரும் வாழ்கின்றனர். இவர்களால் கூட வாழ்ந்து விட இயலும். ஆனால் இப்படியும் அல்லாமல் அப்படியும் அல்லாமல் இருக்கும் இடைப்பட்ட பிரிவினரின் வாழ்க்கையே கடினமானதாக அமைந்துள்ளது.
சுயத்தைத் தொலைத்து விட்டு ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டு வாழ்பவர்களின் நிலைமையோ அடிமை முறையாக உள்ளது. அதனால் இருக்கின்ற இடமே தெரியாமல் வாழ்ந்து விட்டுப் போய் விடலாம் என்கின்ற மன நிலையினரோ உப்பு சப்பில்லாமல் வாழ்ந்து கொண்டு போகிறார்கள். இவர்கள் இந்த பூமியில் எந்த சுவடையும் விட்டுச் செல்வதில்லை என்பதே உண்மை.
- வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள் சிலர் கதை கேட்க மட்டுமே விரும்புகிறார்கள் பலர் அதையும் செய்வதில்லை.
- வாழ்க்கை அடுத்தடுத்த நொடிகளில் பல ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது சிலவற்றை சந்தோஷங்களாகவும் சிலவற்றை சங்கடங்களாகவும்.
- தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ…அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.
- பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள். ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்.
- பழிவாங்குதல் வீரம் அல்ல, மன்னித்து அவரை ஏற்றுக்கொள்வதே வீரம்..
- வரலாற்றில் வெற்றி பெற்றவனும் இடம் பெறலாம் தோல்வி அடைந்தவனும் இடம் பெறலாம் ஆனால் வேடிக்கை பார்த்தவன் ஒரு நாளும் இடம் பெற முடியாது.
- வாழ்க்கையில் நடக்கும் துன்பங்களை கடந்து போக கற்று கொள்ளுங்கள் ஆனால் மறந்து போய்விடாதீர்கள் அது தான் உன் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்.
- மூன்று மணிக்கு எழுந்தால் ‘முனிவன் ‘ நான்கு மணிக்கு எழுந்தால் ‘ ஞானி ‘ ஐந்து மணிக்கு எழுந்தால் ‘அறிஞன் ‘ ஆறு மணிக்கு எழுந்தால் ‘மனிதன்,’ ஏழு மணிக்கு எழுந்தால் ‘எருமை’.
- நேற்று செய்ய வேண்டியதை இன்று செய்தால்”சோம்பேறி” இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால் “சுறுசுறுப்பானவர்” நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்தால் “வெற்றியாளன்”
- பிறரை பற்றி குறை கூறும் முன்னர் நான் அவர் இடத்தில் இருந்தால் சரியாக நடந்து இருப்போமா என்று யோசித்து பாருங்கள் அதன் பின்னர் உங்கள் மனம் சொல்லும் வரை விமர்சிக்க உனக்கு தகுதி இருக்கிறதா என்று!!
- ஒருவருக்கு நீ ஆயிரம் உதவி செய்து இருக்கலாம் ஆனால் ஒரு தடவை உன்னிடம் குறை கண்டுவிட்டால் அந்த கணத்தில் நீ செய்த உதவிகள் அனைத்தையும் மறந்து விடுவான் இதுதான் இந்த உலகம்.
- இரு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை மிக ஜாக்கிரதையாக பிடிக்க வேண்டும் அதேபோல எந்த பக்கமும் சேரக்கூடிய மனிதர்களிடம் மிக கவனமுடன் ‘பழக’ வேண்டும்
- சிலரை மன்னித்து விடுங்கள் சிலரை மறந்து விடுங்கள் சிலரை வெறுத்து விடுங்கள் யாரையும் தூக்கி சுமக்காதீர்கள் உங்கள் வாழ்க்கையே சுமையாகிவிடும்
- பார்க்க கண்களை படைத்த ஆண்டவன் பார்க்காமல் இருக்க இமைகளை கொடுத்து இருக்கிறான் இரண்டையும் சரியான நேரத்தில் பயன்படுத்துபவனே “புத்திசாலி”
- நல்லவனாய் இரு,ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாதே நல்லவனை இந்த உலகம் மதிப்பது இல்லை.
- கரையும் மெழுகில் இருளை கடந்து விட முடியும் என்ற தன்னம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்.
- உன் ஓடுகின்ற கால்கள் ஓய்வெடுக்கும் போது,நீ எடுத்து கொண்ட பயணம் முடிந்து இருக்க வேண்டும்,
- ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை மிகவும் அழகானது.
- உன்னிடம் இருக்கும் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவது உழைப்பும் விட முயற்சியுமே ஆகும்.
- வாழ்க்கையில் மீண்டும் திரும்ப பெற முடியாதவை நேரமும்,உயிரும் பேசிய வார்த்தைகளும்.
- எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருப்பதைவிட,எதுவும் தெரியாது என்று தெளிவாக இரு.
- நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால் நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும்.
- தோல்வியில் இருந்து எதையும் கற்று கொள்ளவில்லை என்றால் அதுதான் உண்மையான தோல்வி.
- தூக்கி எறிந்த பின்பு தான் சிலருக்கு தெரிகிறது கையில் இருந்தது கல் இல்லை வைரம் என்று.
- ஒவொருவருக்கும் ஒரு முட்டாள் உதவி தேவைபடுகிறது , தன்னை அறிவாளியாய் காட்டிக்கொள்ள.
- உயிருள்ள உறவினர்களில் யார் முக்கியம் என்பதை உயிரற்ற பணமே முடிவு செய்கிறது..
- ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை, முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
- கோபத்திற்கு கொடுக்கும் மரியாதையை யாரும் புன்னகைக்கு கொடுப்பதில்லை.
- வாழ்க்கை என்பது ஒரு கேள்வி , நாம் எப்படி வாழ்கிறோம் என்பது நமது பதில்.
- எப்போதும் பயத்தில் இருப்பதய் விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.
- நம்மை நாம் கேள்வி கேட்காதவரை நம் தவறுகளை நாம் உணர போவதில்லை.
- வலியை நமக்கான வழியாய் மாற்றினால் வாழ்க்கையில் என்றும் வசந்தமே.