சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Love Quotes in Tamil – காதல் கவிதைகள்
காதல் என்பது இந்த உலகில் பிறந்த ஒவ்வோருக்கும் தோன்றும். காதல் என்பது இருவரது தனிப்பட்ட அன்பு பிணைப்பாக இருப்பினும் நட்பு, குடும்பம், சமூகம் மீதான காதலும் கூட காதல் தான்.
இதில் நம்மை பெற்று, வளர்த்துவிடும் பெற்றோர்கள் மீது வருவதும் காதல். ஆனால் அது குறிப்பிட்ட வயதுவரை தான் துணை நிற்க முடியும் அதற்குமேல் நமக்கு நம்பகத்தகுந்த அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய ஆணுக்கு ஒரு பெண்-பெண்ணுக்கு ஒரு ஆண் தேவை. மேலும் நாம் பெற்றோரிடம் செலுத்தும் காதலானது குடிநீரும்-கண்ணீரும் போல! இரண்டும் நீரும் ஒன்றுதான் இருப்பினும், வேறுவேறு தான்.
ஆணுக்கும்-பெண்ணுக்கும் இடையே உள்ள காதலானது தாகமும்-குடிநீரும் போல.. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இதனை புரிந்து கொண்டு கடைசி வரை நம்மோடு எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்கு தேவை. மேலும் பார்த்தவுடன் காதல், பழக பழக காதல், நட்புக்கு பிறகு வரும் காதல் என பலவகைகளில் காதல் தோன்றுகிறது.
- பெரிய சண்டைகளுக்கு பின் வரும் அன்பு ஆழமானதாக இருக்கும். எனவே சண்டையிட்டால் உடனே சமாதானம் ஆகி விடுங்கள்!
- என் கையையும் உன் கையையும் கோர்த்து கொண்டு உலகின் எல்லைகளை அளக்கலாம்
- குறையாத உன் அன்பினாலே இன்றும் உயிரோடு வாழ்கிறேன்
- ஆயிரம் வழிகளை கடந்துவிட்டது என் வாழ்க்கை உன் அன்பினாலே
- உன் மூச்சுக்காற்று என் மீது படும்போது உணர்ந்தேன் நான் எதற்காக உயிர் வாழ்கிறேன் என்று
- அன்பை அடைத்து வைக்க முடியாது என்று வள்ளுவர் சொன்னார் ஆனால் உன் அன்பினால் என்னை அடைத்து வைத்தாய்
- ஆயிரம் பெண்களை கடந்து விட்டேன் ஆனாலும் ஒரு பெண் கூட உன்னை போல் இல்லை
- உன் அன்பிற்காக குழந்தையைப்போல உன் பின்னாலே அலைகின்றேன்
- உன்னையே நினைத்து நினைத்து எது நாளை மறக்கின்றேன்
- ஆசைக்கு எல்லை இல்லை நான் உன் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் எல்லை இல்லை
- என் தாயின் அன்பிற்கு பிறகு நான் ஏங்கிய ஒன்று உன்னோட அன்பிற்கு மட்டுமே
- காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்
- ஒவ்வொரு நாளும் நம்மல சந்தோஷம் வெச்சிக்கிற மாதிரி ஒரு காதல் கிடைச்சா நம்ம வாழ்க்கையே சொர்க்கம் தான்
- உனக்காக நான் இருக்கிறேன் எதற்காகவும் வருந்த வேண்டாம் என்ன நடந்தாலும் நானிருப்பேன் உன்னோடு என் வாழ்வின் இறுதி வரை உனக்கே உனக்காய்
- என் துன்பங்கள் யாவும் காற்றோடு கறைந்தே போகிறது! நீ என்னுடன் பேசும் நேரங்களில்
- யாரோவாக அறிமுகம் ஆகி யாவரையும் பின் தள்ளி யாதுமாகி நிலைத்து விட்டாய் என்னில் அன்பால் ஆயுள் கைதி ஆக்கிவிட்டாய் உன்னில்
- நான் சோகம் கொள்ளும் நேரங்களில் எல்லாம் நீயும் உன் அன்பு மட்டுமே என்னுடைய பெரிய தேடுதல்களாக உள்ளது… நீயின்றி நான் இல்லை
- நீ எதிர்பார்க்கும் அழகு இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீ எதிர்பார்ப்பதை விட அதிகமான அன்பு உன் மேல் உள்ளது
- வேஷம் இல்லாமல் பாசம் மட்டும் வைக்கும் உறவுகள் கிடைப்பதும் ஒரு வரம் தான் நமக்கு
- உன்ன தவிர வேறு யாராலும் என்ன இந்த அளவுக்கு அதிகமா Love & Care பண்ண முடியாதுடா
- உண்மையாக நேசிக்கின்ற ஒருவரால் மட்டுமே காரணம் ஒன்றும் இல்லாமல் சண்டையிட முடியும்
- வருடம் மாறலாம் வாழ்கை மாறலாம் ஆனால் நம் மனதுக்கு பிடித்தவர்களுடன் பேசிய நாட்களும் பழகிய நிமிடமும் என்றும் மாறாது
- ஒருவரிடம் நமக்கு உரிமைகள் அதிகமாகும் போது தான் அவர்களை பிரிவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாகின்றன
- என் மொத்த அன்பையும் உன்மீது கொட்டிவிட்டேன் மீதம் இருப்பது உயிர் மட்டுமே நீ கேட்டால் அதுவும் உனக்கே
- என்னால் மட்டுமே உன்னை அதிகமாக நேசிக்க முடியும் என்று கர்வமாக காதலித்தேன் உன்னால் மட்டுமே என்னை அதிகமாக அழ வைக்க முடியும் என நிரூபித்து விட்டாய்
- காதல் வரம் கிடைத்தும் இன்னும் தனிமையில் தவம் கிடைக்கின்றேன் உன் கரம் பிடிக்கும் வரை
- அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்
- நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம், ஆனால் உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!
- வாழ வேண்டும் என்பதில் ஆசை இல்லை! உன்னுடன் வாழ வேண்டும் என்பதில் தான் பேராசை!
- உன் கைவிரல் உரசிய நாட்களை நினைத்தே நாளும் இமைகள் மூடுதே!
- அதிக கோபம் கொண்டதும், அதை விட அதிகம் பாசம் கொண்டதும் உன்னிடமே!
- ஆசைகளே இல்லாத அற்ப பிறவு என்னையும் பேராசைக் காரனாய் மாற்றியது நீ