சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மகாபாரதம் கிருஷ்ணனின் பொன்மொழிகள் | Mahabharata Krishnan Golden Words In Tamil
மகாபாரதம் ஒரு இதிகாச நூல். இது இந்து சமுதாயத்தில் மிக முக்கியமான நூலாகும். இதில் அறம் , பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனின் நால்வகை நோக்கங்களையும் இதில் மிகவும் அழகாக விளக்கி இருப்பார்கள். இதில் நடக்கு போர் தான் இந்த இதிகாசத்தில் முக்கியமான ஒரு அம்சமாகும் இதில் கிருஷ்ணன் கூறும் அறிவுரை தான் வாயில் நமக்கு பல பாடங்களை உணர்த்தும். அதுபோல் கிருஷ்ணன் கூறிய சில உபதேசங்களை இதில் பார்க்கலாம்.
- எந்த செயலானாலும் சிந்தித்து செய்யுங்கள் ஏனெனில் உங்களின் ஒரு செயல், உங்கள் எதிர்காலத்தையே மாற்ற வல்லது
- உன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அடுத்தவரின் மீது கோபம் கொள்ளாதே
- எதை நீ அதிகம் விரும்புகிறாய் அதை நீ விரைவில் வெறுப்பாய்
- எதுவுமே சில காலம் தான் எதிர்பார்ப்பை குறைத்து கொள் ஏமாற்றம் பெரிதாக தெரியாது
- உரசாமல் வைரத்தை பட்டை தீட்ட முடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது அதுபோல் நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள் ஆனால் வீழ்ந்திட மாட்டார்கள்
- தன்னை அறிந்தவன் அசைபடமாட்டான், உலகை அறிந்தவன் கோபப்படமாட்டான், இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பப்படமாட்டான்
- குற்றம் சொல்ல ஆயிரம் கரணங்கள் இருக்கலாம் ஆனால் மன்னிக்கவும் மறக்கவும் ஒரே கரணம் தான் அன்பு அன்பு மட்டும் தான்
- பிடித்தவரிடம் அன்பை வெளிப்படுத்த தேவையில்லை உணர செய்தலே போதும்
- வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை ஆனால் வந்து அதுவும் எதையும் சொல்லி கொடுக்காமல் போவதில்லை
- நீ நீயாக வாழ கற்றுக்கொள் சிலர் உன்னை விரும்புவார்கள், சிலர் உன்னை வெறுப்பார்கள் கவலைப்படாதே இது உன் வாழ்கை
- இயன்றதை இயலாதவருக்கு கொடுத்து உதவுவது இறைத்தொண்டை விட இன்றியமையாததாகும்
- நாளைய வாழ்க்கையை வாழ்ந்து விட இன்றைய வாழ்கை சரியாக வாழ வேண்டும்.