சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Married Life Islamic Husband and Wife Quotes in Tamil | திருமண வாழ்க்கை இஸ்லாமிய கணவன் மனைவி மேற்கோள்கள்
இஸ்லாமிய முறையில் திருமண உறவு என்பது அமைதி, அன்பு மற்றும் கருணை போன்றவையாகும். இதில் குர்ஆனில் குறிப்பிட்டுள்ள படி கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ வேண்டும் என கூறிப்பிடுகிறது. மேலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல், அரவணைப்பை கொடுத்து வாழ வேண்டும்.
முஸ்லிம்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். முகமது நபி இதை பற்றி கூறுகையில் திருமணமானது நம்பிக்கையின் பாதி என கூறிப்பிடுகிறார். மேலும இஸ்லாமியர்களும் இவற்றை பின்பற்றி வருகின்றனர்.
இஸ்லாமிய திருமணமான தம்பதிகளுக்கு வாழ்க்கையின் பாடம் கற்கும் வகையில் விலக்கி வைப்பது, பொறுமை, அன்பு, மரியாதை, கடமை, ஞானம் மற்றும் நம்பிக்கை போன்றவற்றை கற்றுக்கொடுக்கின்றனர்.
இஸ்லாமிய திருமணத்தின் போது இருவீட்டாரின் முன்நிலையில் குடும்ப வாழ்க்கையின் சமநிலை மற்றும் கணவர் மனைவியிடையே தனிப்பட்ட நிறைவுக்கான கட்டமைப்பை வழங்குகிறது.

- “என் அன்பு கணவனே நான் அல்லாஹ்விற்காக உன்னை நேசிக்கிறேன்-என் அன்பு மனைவியே நானும் அல்லாஹ்விற்காக உன்னை நேசிக்கிறேன்”

- “இவ்வுலகம் பொக்கிஷங்களில் தங்கம், வைரம், பொற்காசுகள் விட சிறந்த பொக்கிஷம் உங்கள் மனைவி தான் சகோதரர்களே”

- “எனக்கான பொக்கிஷத்தை என் இறைவா நீ தந்து விட்டாய் என்னவனுக்கான பொக்கிஷமாய் நான் வாழ வழி வகுத்து உதவிடு ரப்பே”

- “துணை என்பது நம்மோடு நிற்பவர் அல்ல; நமக்காக வாழ்க்கை முழுவதும் நம் மீது தவறு இருந்தும், நம்மைப் பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் நிற்பவர்!”

- “மனைவி கணவனை நேசிப்பவளாக இருப்பதானது அல்லாஹ் அக்கணவனுக்கு அளித்த அருட்கொடை என்றே கருதுகிறேன்”

- “பெண்ணே நீ உன்னுடைய கனவனுக்குச் செய்யும் கடமைகளில் என்னிலையில் இருக்கின்றாய் என்பதைக் கவனித்துக் கொள். நிச்சயமாக அவர் ஒன்று உன்னுடைய சொர்க்கமாக இருப்பார் அல்லது நரகமாக இருப்பார்”

- “திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல”

- “நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் தரும் ‘மஹ்ர்’ தான்”

- “பெண்ணே! கண்டவனோடு பழகுவதில் எவ்வித பயனுமே அல்ல (பாவத்தை தவிர) கணவனே! உனக்கான அடையாளம்”

- “நாம்தான் உலகம் என்று நம்மை நம்பி வரும் உறவை இறுக பிடித்து அனைத்துக்கொள்ளுங்கள்.. தவற விட்டப்பின் கதறி அழுது கேட்டாலும் கிடைக்காது.. இது போல் உண்மையான அன்பு”

- “தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! ‘அல்லாஹ்வின்’ அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான் அவன் மன்னிப்பாவன், நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!”