சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பசலைக்கீரை மருத்துவ பயன்கள்(Medicinal Benefits of Spinach)
பசலைக்கீரை என்பது இந்திய உணவில் மிகவும் முக்கியமான ஒரு பங்காற்றி வருகிறது. இந்தக் கீரையில் பல வகையான தாதுக்கள் விட்டமின்கள் போன்றவைகள் நிறைந்து இருக்கின்றன. இந்தக் கீரை இரண்டு மூன்று வகைகளாகக் காணப்படுகிறது. அதில் சில வகைகள் என்னவென்றால் கொடிப்பசலை, சிலோன் பசலை என பல்வேறு வகைகள் உள்ளன.
பசலைக்கீரை மருத்துவ பயன்கள்
இந்தவகை பசலைக்கீரையில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்திருக்கின்றன. இதை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த ஒரு நோயும் அண்டாது.
அதுமட்டுமில்லாமல் பசலைக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் புதிதாக சுத்தமான ரத்தம் அதிக அளவில் உற்பத்தியாகும். இது ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டால் சீக்கிரம் ரத்தசோகை பிரச்சனை சரியாகிவிடும்.
பசலைக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். சிலருக்கு உடல் அதிக வெப்பமாக இருக்கும், அதனால் சில நோய்களை ஏற்படுத்தும். அதிலிருந்து மீண்டு வர இந்த கீரையை தினமும் சாப்பிடலாம்.
பசலைக்கீரையில் அதிகபடியான பைபர் இருப்பதால் மலச்சிக்கல் இருப்பவர்கள். இந்த கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடு பெறலாம்.
நாம் உண்ணும் உணவில் தினமும் கீரை வகைகளை சேர்த்து வந்தால் புற்று நோய் வருவதை தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பசலைக்கீரையில் அதிகப்படியான நியூட்ரிசன், விட்டமின் நிறைந்து இருப்பதால் நீங்கள் இந்த கீரையை அதிகப்படியாக கூட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக கீரை வகைகளை நாம் பால் தயிர் முட்டை போன்றவற்றை களோடு சேர்த்து சாப்பிட்டால் சிறிது செரிமான தாமதம் ஏற்படும் இதனால் கீரை வகைகள் உண்ணும் பொழுது பால் தயிர் முட்டை போன்ற உணவுகளை சிறிது நேரம் கழித்து உண்ணுவது நல்லது.
மேலும் கீரையில் அதிகப்படியான பைபர் இருப்பதால் செரிமானம் சிறிது தாமதமாக தான் இருக்கும் எனவே கீரையை இரவு நேரத்தில் உண்ணுவதை தவிர்க்கலாம் அப்படியே இதை உன்னாலும் உடனடியாக படுக்கக்கூடாது.
பசலைக் கீரையில் இருக்கின்ற வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்றவை நம் கண் பார்வைக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. பசலைக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனையிலிருந்து முழுமையாக தீர்வு காணலாம். மேலும் முடி நல்ல கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும் ஏனென்றால் இந்தக் கீரையில் ஒமேகா-3 ஆசிட் நிறைந்து இருக்கின்றன.
தோல் சம்பந்தமான அறிவிப்பு சிறிது கொப்பளங்கள் போன்றவைகள் பசலைக் கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறிது நாட்களில் குணமடைந்து விடும். மலச்சிக்கல் உள்ளவர்கள் பசலைக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பூரண குணமடைந்து விடும். மனிதர்கள் வாரத்தில் ஏழு நாட்களும் ஏதேனும் ஒரு நேரத்தில் சிறிதளவு கீரை உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடல் மிகவும் வலிமையாகவும் எந்த ஒரு நோய் தொற்றுக்கு நாம் ஆளாகாமல் இருக்கலாம்.
கீரையை எவ்வாறு உண்ண வேண்டும்
நாம் இந்தக் கீரையை இவ்வாறு சமைத்து உண்ணுவதின் மூலம் சிறப்பு உண்டு. நாம் அதிகப்படியாக தண்ணீர் விட்டு அதிக நேரம் கொதிக்க விட்டால் இந்த கீரையில் உள்ள சத்துக்கள் அனைத்தும் ஆவியாக பொய் விடும், எனவே சிறிதளவு தண்ணீர் வைத்து சீரான வெப்பநிலையில் சிறிது நேரம் மட்டும் வேகவைத்து உண்ணலாம்.
யாரெல்லாம் இந்த கீரை வகைகளை அதிகம் உண்ணக்கூடாது
உடலில் ஏற்கனவே சிறுநீர் பிரச்சனை மற்றும் ரத்த உறவு போன்ற நோய்களுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் நபர்கள் இந்த கீரை வகைகளை தவிர்ப்பது நல்லது ஏனென்றால் இந்தக் கீரை வகைகள் மாத்திரைகள் கூட சிறிது ரியாக்ட் செய்யக்கூடும் எனவே டாக்டர்களின் பரிந்துரைகளை ஏற்ப நாம் உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.