சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஆற்றின் நடுவே சிக்கிய 3 செல்பி பிள்ளைகள்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை சனிக்கிழமை நிரம்பியது, இதனையடுத்து மாலை ஒரு லட்சத்து 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது இதனால் 16 கண் மதகு பணியை தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டதால் ஆற்றுப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது தண்ணீர் அதிகம் செல்வதை 16 கண் மதகு அருகே உள்ள பாலத்தில் பொதுமக்கள் திரளாக நின்று வேடிக்கை பார்த்துச் சென்றனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பிரவீன் பிரபு வினேஷ் ஆகிய மூவரும் மேட்டூர் அணைக்கு சென்று வேடிக்கை பார்த்தன அப்போது மேட்டூர் அணல் மின் நிலையம் அருகே ஆற்றின் நடுவில் உள்ள பாறைகள் நிறைந்த பகுதிக்குச் சென்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.
வெள்ள நீரின் அளவு உயர்ந்து கொண்டே இருந்ததால் மூன்று வாலிபரும் நின்ற பாறை பகுதியில் மெய்மறந்து நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்ததால் சிறிது நேரத்தில் திடீரென வெள்ளம் சூழ்ந்து கொண்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டு உயிருக்கு போராடினர்.
நேரம் செல்ல செல்ல அவர்கள் நின்ற பாறையை வெள்ளத்தில் மூழ்கடித்தது.இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் டயர்களை கொண்டு 3 வாலிபர்களையும் மீட்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது அவர்கள் உடலில் கயிறு கட்டப்பட்டு இருந்ததால் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனை அடுத்து தீயணைப்பு வீரர்களை அந்த மூன்று மாணவர்களும் ஒருவர்பின் ஒருவராக இடுப்பில் கயிற்றைக் கட்டி விரைவாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட மூவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.