சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு!
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையத் தொடங்கி உள்ளது இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,559 கன அடியாக சரிந்துள்ளது.
புதன்கிழமை காலை வினாடிக்கு 2,836 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 2,559 கன அடியாக குறைந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருக்கின்றன
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக
புதன்கிழமை காலை 105.40அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை104.78 அடியாக சரிந்தது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 71.17டி.எம்.சியாக இருக்கின்றது.