சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்..!(Mettur Dam-Flood Alert)
சேலம் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோரங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பலத்த மழை தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 3 நாட்களாக படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
இந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. தற்போது இந்த நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வரும் நிலையில்.
தற்போது இதில் வினாடிக்கு 2 லட்சத்து10 ஆயிரம் கனஅடி தண்ணீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
வெள்ள அபாயம் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
அணையின் நீர்மட்டம் 120.12 அடியாக உள்ள நிலையில், அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்து விடப்படுவதால், காவிரி கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த்துறை சார்பில் விடுக்கப்பட்டு வருகிறது. இதனிடயே சுற்றுலா பயணிகள் அதிகளவில் மேட்டூருக்கு வந்தனர்.
மேலும் காவிரி ஆற்றில் பலத்த ஓசையுடன் தண்ணீர் பீறிட்டு வெளியேறுவதால் இந்த அழகை கண்டு ரசிக்க மேட்டூருக்கு சுற்றுலா அதிகளவில் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் 16 கண் பாலத்தில் தண்ணீர் வெளியேறும் காட்சியை கண்டுகளிக்க மேட்டூர்-சேலம் நெடுஞ்சாலை ஓரத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதுப் பாலத்தில் நின்று தண்ணீர் கரைபுரண்டு செல்லும் அழகை ரசித்து செல்கின்றனர்.