சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Music Quotes in Tamil | இசை பற்றிய மேற்கோள்கள்
இசை என்பது மொழியை மீறிய ஒரு கலை வடிவமாகும். இசை நாம்முடைய வாழ்வில் இன்பம் துன்பம் வந்த போகையில் நம் மனதிற்கு அமைதியை தந்து புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள இயற்கை நமக்கு அளித்த அற்புதமான பரிசுதான் இசை.
நாம் அன்றாட வாழ்வில் இசையை தினமும் கேட்டுகொண்டு வருகிறோம் உலகில் அனைத்துவிதமான மொழியினரும் விரும்பும் விதமாக அமைந்துள்ளது. நோய்களைத் தீர்க்கும் ஒரு மருந்து உண்டென்றால் அது இசைதான். எந்த போதைக்கும் அடிமையாகாதவர்கள் கூட இசைக்கு அடிமையாகிவிடுவார்கள். தனிமை, தூக்கம், சோகம், துக்கம், இன்பம், துன்பம் போன்ற அனைத்துக்கும் ஒரே தீர்வாக இசை நமக்கு அமைகிறது.
இசை நமக்கு துணையாகவும், தோழனாகவும், தாலாட்டுப்பாடியும் நம்மை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இசைக்கு மொழிகளே இல்லை, எந்த மொழி பேசுபவர்களாக இருப்பினும் இசையானது அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளங்கும் இசையைப் பற்றிய மிகச்சிறந்த மேற்கோள்களை காண்க
- “இசையின் பிறவி எங்கே தெரியவில்லை இருந்தும் இசையை கேட்க இதயம் மறுப்பதில்லை இசையால் வளர்ந்த மனிதனும் இசையை வளர்த்த மன்னனும் வீழ்ந்ததுமில்லை இசையை கேட்டு மனம் வருந்துவதுமில்லை..”
- “வார்த்தைகள் தோல்வியடைந்த இடத்தில், இசை பேசுகிறது”
- “கருத்துக்களை கூறி ஊக்கவிக்க முடியாவிட்டாலும், நல்ல இசையால் ஊக்குவிக்க முடியும்”
- “துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள், நஷ்டங்கள் என்று அனைத்திற்கும் ஒரே தீர்வு என்னவென்றால் அது இசை மட்டுமே!”
- “உன்னால் மட்டுமே நொடியில் என் மனநிலையை மாற்ற முடிகிறது இசை!”
- “துன்பத்திலும் சரி, இன்பத்திலும் சரி நம்மோடு உறவாடுவது, இசைதான்!”
- “வார்த்தைகள் பேசப்படுவதற்கு முன்பே இசை கண்டறியப்பட்டது மற்றும் புரிந்து கொள்ளப்பட்டது”
- “இசை என்பது உண்மையில் ஆன்மீகத்திற்கும் சிற்றின்ப வாழ்க்கைக்கும் இடையிலான இடைநடுவராகும்”
- “சில நேரங்களில் பயணமும் இசையும் மட்டுமே மனதுக்கு ஆறுதல் தருகிறது”
- “விடியாத இரவென்று எதுவுமில்லை.. முடியாத துயரென்று எதுவுமில்லை.. வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை.. வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை..”
- “இசையை நாம் இதயத்தால் சிந்தித்து மூளையால் உணர வேண்டும்”