சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
நா. முத்துக்குமாரின் தத்துவங்கள் | Na.Muthukumar Quotes In Tamil
நா. முத்துக்குமார் தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத பாடலாசிரியர் தமிழ் திரை பாடல்களை நவீன வாழ்க்கை மற்றும் நவீன கவிதைகள் அதன் மூலம் பாடல்களை அடுத்த தளத்துக்கு எடுத்து சென்றார். உதவி இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர், 1500கும் மேற்பட்ட பாடல்கள், அடுத்தடுத்து இரண்டு தேசிய விருதுகள்,10 கும் மேற்பட்ட புத்தகங்கள் என்ன தான் வாழ்ந்த 41 ஆண்டுகளில் என்ன சாதனைகள் செய்ய முடியுமோ அதை அனைத்தையும் செய்தார் இப்படி குறுகிய காலத்தில் நல்ல படைப்புக்கள் அளித்த நா. முத்துக்குமாரின் சில தத்துவங்களை பார்க்கலாம்.
- வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையை, பிள்ளைபோல் இருந்தும் இவள் அன்னையே.
- அழுது கொண்டிருக்கும் அம்மாவின் முகம் போல அவ்வளவு எளிதாக பிள்ளைகளுக்கு கிடைத்து விடுவதில்லை அழுது கொண்டிருக்கும் அப்பாவின் முகம்.
- என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே, என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே, வேறென்ன வேண்டும் உலகத்திலே, இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
- வலியது தான் உயிர் பிழைக்கும், இதுவரையில் இயற்கையின் விதி அது தான்.
- வெந்நீரில் நீ குளிக்க விறகாகித் தீக்குளிப்பேன் உத்திரத்தில் உன்னை கலப்பேன்.
- மழை வாசம் வருகின்ற நேரம் எல்லாம் உன் வியர்வை தரும் வரும் வருமல்லவா.
- காதல் கவிதை எழுதுகிறவர்கள் கவிதை மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் அதை வாங்கி செல்லும் பாக்கியசாலிகள் காதலிக்கிறார்கள்.
- கடவுளுடன் சீட்டாடுவது கொஞ்சம் கடினமானது எவ்வளவு கவனமாக இருந்தாலும் பார்க்காமலே அறிந்து கொள்கிறார்.
- உனக்கும் இல்லை, எனக்கும் இல்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான், நல்லவன் யார்? இங்கு கெட்டவன் யார்? கடைசியில் அவனே முடிவு செய்வான்.
- இலைகள் விழுந்தால் சருகாகும், வறியவன் வாழ்கை, இலை போல என்று போதிலும் சருகுகள் ஒரு நாள் உரமாகும்.
- வாழ்க்கை எனும் நதி மரணம் எனும் கடலில் கலக்கும் வரை வெவ்வேறு மேடு பள்ளங்கள் ஓட வேண்டியிருக்கிறது.
- கலைத்து கலைத்து மீண்டும் அடுக்கப்படும் சீட்டுக் கடுகள்தானே கனவுகள்.
Keywords:
Na.Muthukumar Quotes In Tamil
Quotes In Tamil
Tamil