சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
குற்றம் நீட் தேர்வு..!(Neet Exam)
கேரள மாநிலம் கொல்லம் அருகே நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்த்து பரிசோதனை நடத்திய 5 பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே ஆயூரில் உள்ள ஒரு கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த சில மாணவிகளை மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை நடத்திய போது, உள்ளாடையிலிருந்து பீப் சத்தம் வந்ததால் உள்ளாடையை அவிழ்த்து வைத்து விட்டுத் தான் தேர்வு எழுதவேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் பல மாணவிகள் வேறுவழி இல்லாமல் உள்ளாடைகளை அவிழ்த்து வைத்து விட்டு தேர்வு எழுதினர். இது தொடர்பாக சில மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து கொல்லம் சடையமங்கலம் போலீசார் மாணவிகளிடம் பரிசோதனை நடத்திய பெண் அதிகாரிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கேரள மனித உரிமை ஆணையமும் வழக்கு பதிவு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய கொல்லம் மாவட்ட எஸ்பிக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடனே விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கல்வித்துறை கூடுதல் செயலாளருக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய பிறகு 5 பெண் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் குற்றச் சாட்டுகளை மறுத்து வரும் தேசிய தேர்வு முகமை, உண்மை கண்டறியும் குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது.
நீட் தேர்வு நடந்த தனியார் கல்லூரியை மாணவர் அமைப்பினர் நேற்று சூறையாடினர். முதலில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான கேரள மாணவர் சங்கத்தினர் கல்லூரியை நோக்கி கண்டனப் பேரணி நடத்தினர். இதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினரும், பாஜ மாணவர் அமைப்பினரும் கல்லூரியில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லூரிக்குள் நுழைந்து ஜன்னல், கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.