சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஓலா கார் டிரைவர் தாக்கியதில் பயணி உயிரிழப்பு!
ஓலா காரில் OTP எண்ணை சொல்லாத என்ஜினியரை, அவரது குடும்பத்தினர் கண்முன்னே அடித்துக் கொன்ற டிரைவர் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
தகவல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார் வாரம் தோறும் விடுமுறை நாட்களில் தனது வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் இருந்துவிட்டு மீண்டும் கோவை சென்று விடுவதை, வாடிக்கையாக வைத்திருந்தார். இவர் கடந்த ஞாயிறு அன்று காலை சினிமா பார்ப்பதற்காக தனது கிராமத்தில் இருந்து ஓலா கார் மூலம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளனர்.
அங்கு படம் பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக தனது மனைவியின் சகோதரி தேவிபிரியாவின் செல்போனிலிருந்து ஒலா கார் புக்கிங் செய்தார், அப்போது சிறிது நேரத்தில் அங்கு வந்த ஓலா இனோவா கார் வந்ததும் அனைவரும் காரில் ஏறினர் காரின் டிரைவர் ரவி என்பவர் புக்கிங் செய்ததற்கான OTP எண்ணெய் கேட்டுள்ளார். அதர்க்கு தேவிப்ரியா செல்போனில் உள்ள மெசேஜ் இன்பாக்சில் OTPயை தேடி கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த கார் டிரைவர் OTP வரவில்லை என்றால் காரை விட்டு இறங்கச் சொன்னார் அதர்க்கு, அவர்கள் காரில் இருந்து இறங்க முடியாது என்று கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காரை விட்டு இறங்கிய குடும்பத்தினர் காரின் கதவை வேகமாக சாத்தினார். இதனை பார்த்துவிட்டு ஆத்திரமடைந்த கார் டிரைவர் ரவி கார் கதவை வேகமாக எதற்கு சாத்துரிங்கா என்று கேட்டுக்கொண்டே சரமாரியாக தாக்கினார் மற்றவர்கள் தடுக்க முயன்றும், பலனில்லை தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இடத்திலேயே இறந்து போனார்.
மேலும் தப்பி ஓட முயன்ற கார் டிரைவரை பொதுமக்கள் பிடித்து போலீஸ் காரரிடம் ஒப்படைத்தனர் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.