சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Pain Feeling Life Quotes in Tamil | கவலைகளின் வலியின் தத்துவங்கள்
நம் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் கவலை கண்டிப்பாக இருக்கும் அதிலும் ஆறறிவு ஜீவனான நமக்கு கவலை என்பது மிக அதிகமாக இருக்கின்றது.
ஒருவருக்கு மனதில் கவலை ஏற்பட்டால் அது உடல் ரீதியான பல்வேறு பிரச்சனைக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர் .
மனதில் கவலையினால் சிலருக்கு வயிற்றுப்புண், உடல் சோர்வு, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும்.
எனவே நாம் கவலையற்ற வாழ்வை வாழ நம் மனதை வலுப்படுத்த வேண்டும். கவலை என்பது சிலர் நம்மை கேலி செய்வதோ, அல்லது நம் மனதை புண்படுத்தும் வகையில் ஏதேனும் வார்த்தைகள் பேசினாலும், நம்மை யாராவது மதிக்காமல் ஏளனம் செய்தாலும் நமக்கு கவலை ஏற்படும் இந்த கவலையை நினைத்து தினமும் மனதை வருத்திக் கொண்டால் கண்டிப்பாக உடல்நிலை பாதிப்பு ஏற்படும் .
எனவே நாம் அனைவரும் கவலை என்ற சொல்லை நம் உடலிலிருந்து தூக்கி வெளியே எறிய வேண்டும், ஒருவர் நம்மை கேலி செய்தால் அவர் முன்னால் நாம் வாழ்ந்து காட்டி அவரின் கேலி பேச்சை உடைத்து அவர் நம்மைப் பார்த்து வாயைப் பிளக்கும் அளவிற்கு வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைத்து கவலையை வெற்றியின் முதல் படியாக வைத்து வாழ்க்கையை வாழ வேண்டும் .நம் வாழ்க்கையில் ஏற்பட்ட சில கவலைகளின் தத்துவங்களை சிலவற்றை பார்ப்போம்

- கேள்வி என்னவென்று தெரியாது ஆனால் பதில் எழுத வேண்டும் அது தான் வாழ்க்கை

- மற்றவங்க பொறாமை பட அளவுக்கு வாழணும்னு அவசியமில்லை பெத்தவங்க பெருமைப்படும் அளவுக்கு வாழ்ந்தாலே போதும்

- சுமையேற்ற வாழ்க்கை சுவையற்று போகும்

- கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்திற்கு தினமும் போடுகின்றோம் வேஷம்

- நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம் இறந்து போனது

- வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கணும் யாரையும் நம்பி தான் இருக்க கூடாது

- இன்று நான் உன்னை தேடுவது போல் என்றோ ஒருநாள் என்னையும் நீ தேடுவாய்

- என் காயங்களை கவி வடித்தாள் கவியும் காயப்படும் என் வலிகளை வரி வடித்தாள் வரியும் வலி கொள்ளும்

- தேடித் தேடிப் போய் காட்டுகிற அன்பு குப்பையை விட கேவலம் ஆகி விடுகிறது

- வருத்தத்திலேயே இருப்பவர்களை சிறிது தனிமையில் விடுங்கள் தனியாக விட்டு விடாதீர்கள்

- உன் வலியை நீ உணர்ந்தால் உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம் பிறர் வலியை நீ உணர்ந்தால் மனிதனாக இருக்கின்றாய் என்று அர்த்தம்

- வலிகளும் கண்ணீரும் வாழும் இடத்தில் காதல் காணாமல் போய்விடும்