சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Pain Life Quotes in Tamil | வாழ்க்கையின் வலிகளின் தத்துவங்கள்
மனித வாழ்க்கையில் பல்வேறு விதமான துன்பங்கள் ஏற்படுகின்றன மனிதன் தனது வாழ்நாள் காலகட்டங்களில் பல்வேறு விதமான துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.இதில் அதிகபட்சமான ஒரு துன்பம் மனிதனுக்கு என்னவென்றால் தனது உயிருக்கும் மேலான உறவுகள் அல்லது நண்பர்கள் யாரேனும் உயிரிழந்தால் அந்த வலி என்பது அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீங்காமல் இருக்கின்றன.
ஒவ்வொரு மனிதருக்கும் தனது வாழ்நாள் காலகட்டங்களை பொறுத்தே அவரின் வழிகள் மாறுகின்றன. தனது குழந்தை பருவத்தில் தான் கேட்பதை அப்பா அல்லது அம்மா வாங்கித் தரவில்லை என்றால் அந்தக் குழந்தையின் மனதில் வலி ஏற்படுகின்றன .இதுவே அந்த மனிதன் தனது வாலிப வயதில் காதல் தோல்வி அல்லது தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தால் அவர்களுக்கு மனதில் வலி ஏற்படுகின்றன. இதுவே ஒரு இளைஞன் ஆக இருக்கும்போது வேலைவாய்ப்பு போன்றவற்றினால் மன வலி ஏற்படுகின்றன .இதுவே ஒரு திருமணம் ஆன பிறகு தன் வாழ்க்கைத் துணையிடம் ஏற்படும் சண்டைகளால் இருவருக்கும் மன வலி ஏற்படுகின்றன .இதுவே வயதான பிறகு தனது உடல்நிலை சீராக இருக்கும் வேண்டும் என்று நினைத்து வருந்தி வருவார்கள் . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கால கட்டங்களில் ஒவ்வொரு விதமான மனதில் வலி ஏற்படும் . இந்த பதிவில் நாம் வாழ்க்கையினால் ஏற்படும் வலிக்கான ஒரு சில தத்துவங்களை பார்ப்போம்
- கண்களின் பார்வையால் காதல் துவங்குகிறது கண்ணீரின் பாதையால் காதல் முடிகிறது
- காயங்கள் இன்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பதில்லை
- எவ்வளவு தான் பாசம் வைத்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு தான் பிறகு நாம் மூன்றாவது மனிதர்கள் தான்
- கண்ணீரைத் துடைக்க நீ இருப்பாய் என்று உன்னை காதலித்தேன் ஆனால் கண்ணீர் வருவதற்கு நீ தான் காரணமாய் இருப்பாய் என்று அறிந்துகொண்டேன்
- எனது வலி உனது பார்வையில் தெரியாது ஏனென்றால் எனது வலி எனது முகத்தில் தெரியாது
- வலியை மறக்க சிரிப்பவர்கள் ஐ விட வலியை மறைக்க சிரிப்பவர்கள் தான் அதிகம்
- மாறி விட்டோம் என்பதை விட பல வழிகள் நம்மை மாற்றி விட்டது என்பதே உண்மை
- எதை நீ அதிகம் விரும்புகிறாயோ அதுவே உன்னை அதிகம் காயப்படுத்துகிறது
- பசித்த வயிறு பணமில்லா வாழ்க்கை பொய்யான உறவுகள் மதிக்காத உலகம் நிலையில்லா வாழ்க்கை இவைகள் கற்றுத் தரும் பாடத்தை யாரும் கற்றுத் தர முடியாது
- பிரிவை நினைத்து வருந்தாதே பிரிவு நல்லதே பொய்யான உறவுகள் விலகி செல்லும் உண்மையான உறவு எங்கிருந்தாலும் தேடி வரும்
- நாம் கஷ்டத்தில் இருக்கும் பொழுதே வாழ்க்கையின் பாடங்களை உறவுகளிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்