சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Pain Marriage Life Failure Quotes in Tamil | கல்யாண வாழ்க்கை தோல்வியின் தத்துவங்கள்
நம் தமிழ் சமூகத்தில் திருமணம் என்பது ஆண் மற்றும் பெண்ணின் ஒப்புதல் பெற்று, பொருத்தம் பார்த்து, உறவினர்கள் அனைவரையும் அழைத்து மிக விமர்சையாக நடைபெறும்.திருமணம் முடிந்து ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ ஆரம்பித்து வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் பொழுது இருவருக்கும் ஏதேனும் சண்டை ஏற்படுகிறது.
இந்த சண்டை நாளடைவில் இருவரும் பிரிந்து செல்லும் அளவிற்கு பெரிதாகி விடுகிறது. இதுபோன்ற சம்பவம் நம் மனதில் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.திருமணம் முடிந்தபின் ஆனோ பெண்ணோ இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதுதான் சரியாக இருக்கும்.
ஒரு ஆணும் பெண்ணும் மன ரீதியாக காதலித்து திருமணம் செய்த பின்னர் அவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு இடத்தில் ஏற்படக் கூடிய சிறிய சண்டையின் காரணமாக அவர்களின் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். இதனால் மனரீதியாக பாதிப்படைகின்றனர் . மேலும் அவர்களின் தாய் தந்தையும் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
வாழ்க்கையில் அனைத்து குடும்பங்களிலும் சிறிய சிறிய சண்டைகள் மற்றும் மனக்கசப்புகள் இருக்கக்கூடும் இவை அனைத்தையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்துப் போனால் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும். இந்தப் பதிவில் சில கல்யாண வாழ்க்கை தோல்வியின் தத்துவங்களை பார்ப்போம்

- அனைவரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கிறது நாம் நேசித்த அவரின் பிரிவு

- பழகுவது தவறில்லை அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பது தான் தவறு

- பெண்களுக்கு திருமணம் என்பது எப்போதும் வாழ்வின் தொடக்கமாக இருக்க வேண்டும் தவிர முடிவாக இருக்கக் கூடாது

- இழந்து விட்டேன் என்பதை விட உன்னை தவற விட்டேன் என்பதே உண்மை

- உன் நினைவுகளுடன் என் வாழ்க்கை சந்தோஷமாக தான் தொடர்கிறது ஆனால் கண்களில் கண்ணீர் மட்டும் வருகிறது

- நம்முடன் பேசுவதற்கு நேரம் இல்லாமல் இல்லை பேசப் பிடிக்காமல் தான் காரணம் சொல்லி விலகிப் போகிறார்கள்

- உடலுக்கு உயிர் கூட சுமைதான் நாம் உயிராக நினைக்கும் ஒரு உயிர் நம்மை மறந்து போகும் போது

- கை தவறினால் பொருட்கள் உடையும் என யோசிப்பவர்கள் வாய் தவறினால் மனம் உடையும் என யோசிப்பதில்லை

- ஒருவரை இழக்கும் போது வரும் கண்ணீரை விட அவர்களை இழக்க கூடாது என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு இன்னும் வலி அதிகம்

- பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோசமாக இருக்கின்றனர் உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காணப்படுகின்றனர்

- முதல் முறை வெறுக்கும் போதே விலகி விடுங்கள் பின் அவர்களுக்கு பிடித்ததே செய்தாலும் வெறுப்பாகத்தான் இருக்கும்

- நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை காயப்படுத்தும் போது ஏற்படும் வலி மரணத்திலும் கொடுமை