சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Pan D மாத்திரையின் பயன்பாடு | Pan D Tablet Uses In Tamil
தற்போது இருக்கும் சூழலில் மாத்திரையானது முக்கிய பங்கு வகிக்கிறது இது மனித வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது சிலருக்கு நன்மைகளும் நடந்துள்ளது அது மட்டும் இன்றி பலருக்கும் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் அது மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து சாப்பிடுவது மோசமான நிலைக்கு ஆளாகும். எந்த ஒரு மாத்திரையாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரை சிறந்தது.
பான் டி மாத்திரையானது வயிற்று சம்மந்தப்பட்ட கோளாறுகளுக்கு சிகிச்சை அழிக்கப்டும் இரைப்பையில் ஏற்படக்கூடிய புண், பெருங்குடல் புண், சிறுகுடல் புண் இதுபோன்ற வயிற்றில் இருக்க கூடிய புண்ணை சரி செய்ய உதவுகிறது, மேலும் சிலருக்கு உடல் நலம் குன்றியபோது அவர்களுக்கு வாந்தி குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் பொது இந்த மாத்திரை சாப்பிட்டால் அவர்களுக்கு இந்த மாதிரி பிரச்சனை ஏற்படாது நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல், அல்சர் நோய் வராமல் பாதுகாக்கும் மற்றும் அல்சர் நோய்க்கு மருந்தாகவும் இருக்கும், உணவு செல்லும் குழாயில் வீக்கம் அல்லது அலர்ஜி ஏற்பட்டால் இந்த மாத்திரை குணப்படுத்த உதவும், ஏப்பம், ஆஜரான கோளாறு, இரைப்பையில் ஏற்படும் கட்டியை குணப்படுத்தவும், வயிற்றில் சுரக்க கூடிய அமிலத்தை கட்டுப்படுத்தும் இதுபோன்ற வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த மாத்திரை உதவியாக இருக்கும். இந்த மாத்திரை எவ்வாறு செயல்படுகிறது என்றால் நம் வயிற்றில் இருக்கும் அமில சுரப்பியின் செயல்பாட்டை தடுக்கிறது இதை தடுப்பதால் வயிற்றில் ஏற்படும் நோய்களை இது தடுக்கிறது.
இந்த மாத்திரை உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் மயக்க உணர்வு, உடல் சோர்வு, தலைவலி, கண் பார்வை மங்குதல், காய்ச்சல், மார்புவலி, வயிற்று போக்கு, நெஞ்செரிச்சல், தாய் வீக்கம், தோல் அரிப்பு, தோல் சிவந்து போகுதல், எலும்பின் வலு குறைவது, மாத விடாய் சரியான நேரத்தில் வெளியேறாமல் இருப்பது இதுபோன்ற பக்க விளைவுகள் இருந்தால் அல்லது ஏதேனும் பத்திபு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த மாத்திரையை கர்ப்பிணி பெண்கள், குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள்,மருத்துவரின் ஆலோசனையோடு மாத்திரை சாப்பிடுவது நல்லது. மேலும் கலீரல் நோய், சிறுநீரக நோய், இதய நோய் உள்ளவர்கள் இந்த மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இத மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவர் எந்த ளவு எப்போது எப்படி அப்பிட வேண்டும் என்று குறிப்பிடுகிறார் என்பதை அறிந்து அதன் படி சாப்பிடுவது நல்லது.
எந்த மாத்திரையாக இருந்தாலும் அதை மருத்துவரின் ஆலோசனை இன்றி சாப்பிடுவது பள்ள பக்க விளைவுகள் உண்டாகும். எனவே விழிப்புடன் இருந்து மாத்திரை மூலம் உடம்பை குணப்படுத்தம்.