சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Positivity Motivational Quotes in Tamil| நேர்மறை தத்துவங்கள்
நாம் ஒரு செயலை செய்யும்பொழுது அந்த செயலை ஊக்குவிக்கும் வகையில் சில ஊக்குவிக்கும் வார்த்தைகளை நமக்கு கூறுவார்கள் அந்த வார்த்தைகளின் வடிவம் தான் நேர்மறை தத்துவமாகும் .
ஒருவர் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒரு இடத்தில் நாம் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு சில நேர்மறையான வார்த்தைகள் சிலவற்றை அவர்களுக்கு அளித்து அவர்களை ஊக்கப்படுத்தினால். அவர்கள் கண்டிப்பாக அந்த காரியத்தை செய்து வெற்றி பெற்று வாழ்க்கையில் சாதிப்பார்கள்
ஒரு சிலர் உடல்ரீதியாக பாதிப்படைந்து அந்த வியாதியினால் முடங்கிக் இருப்பவரிடம் சில நேர்மறை தத்துவங்களை அவர்களிடம் கூறினால் அவர்களுக்கு நல்ல ஒரு உத்வேகம் கிடைக்கும் இந்த உத்வேகம் மூலம் அவர்கள் எளிதாக இந்த வியாதியிலிருந்து குணம் அடைந்து மீண்டு வருவார்கள். மேலும் சில படிக்கும் மாணவர்களிடமும் அல்லது தொழில் செய்வோர் இடமோ நேர்மறை தத்துவங்கள் கூறினால் அவர்கள் படிப்பில் வெற்றியடைந்து தொழில் செய்பவர்கள் தொழிலில் வெற்றி அடைந்து வாழ்க்கையில் மேம் படுவார்கள். இந்த பதிவில் சில நேர்மறை தத்துவங்கள் சிலவற்றை பார்ப்போம்

- போராடி தோற்றது வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்

- அழகான வீட்டுக்குள் அன்பான கூட்டுக்குள் அமைதியாய் காத்திருங்கள் சிறகடிக்க காலம் வரும்போது ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் பறக்கலாம்

- உங்கள் மனதில் இருக்கும் குதூகலமும் சந்தோஷமும் பிரச்னைகளுடன் போராட மட்டுமல்ல அதிலிருந்து மீளவும் உதவும்

- உங்களை யாராவது நிராகரித்தால் கவலைப்படாதீர்கள் பெரும்பாலும் மக்கள் விலை உயர்ந்தவற்றை தான் வாங்க இயலாமல் நிராகரிக்கிறார்கள்

- இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்

- மனதில் ஒரு உறுதி வெளியில் சரியான சூழ்நிலை இரண்டையும் உருவாக்கினால் ஆசைப்பட்டதை தள்ளிப் போடாமல் செய்து முடிக்கும் பலம் தானாக வந்துவிடும்

- ஒருவனை மனிதனாக ஆக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களுமே ஆகும்

- ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல விழுந்த போதெல்லாம் வாழ்ந்தான் என்பதே பெருமை

- விழுந்த அடிகளை படிகளாக நினைத்தால் எந்த உயரத்தையும் தொட்டுவிடலாம்

- நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவரிடம் மட்டுமே வரும்

- அவரைப்போல் இவரைப் போல் அல்லாமல் உன்னை போல் வாழ்ந்து காட்டு

- முயற்சி பயிற்சி நம்பிக்கை சுகமாக சுமப்பவர்கள் விழுவது கடினம் எழுவது சுலபம்