சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம் | Pregnancy Conformation In Tamil
புதுமண தம்பதிகளுக்கு வரும் பெரும்பாலான கேள்வி அடுத்து எப்ப விஷேசம் என்பதுதான் இது போன்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாத தம்பதிகள் சிலர் பெரும் மனஉளச்சலுக்கு ஆளாகின்றன இதனால் இயல்பாக மாதவிடாய் காலம் தள்ளி போனால் அது கர்பமாக இருக்குமோ என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விடுகிறது
இதுபோல் சந்தேங்களுக்கு வராமல் இருக்க தான் மருந்தகங்களில் இதற்கான கருவிகள் இருக்கின்றன இதன் விலையானது 200 முதல் 300 வரும் இந்த கருவியில் அந்த பெண்ணின் சிறுநீரை அதில் குறிப்பிட்ட இடத்தில் வைத்து சோதித்து பார்க்கும்போது அதில் ஒரு கோடு வந்தது என்றால் கர்ப்பம் இல்லை என்றும் இரண்டு கோடுகள் வந்தால் கர்ப்பமாக இருப்பதாகவும் அர்த்தம் இதுவே உறுதியான முடிவும் கிடையாது சில நேரங்களில் ஒரு கோடு வந்தவருக்கும் கர்ப்பமாக வாய்ப்பு இருக்கிறது எனவே மேற்படி உறுதிப்படுத்திக்கொள்ள ரத்த பரிசோதனை கேட்பது தான் சிறந்த முறை சிலருக்கு 35 நாட்கள் தள்ளி போவது என்பது இயல்பான விசியமாக இருக்கலாம் இவ்வாறு பல குழப்பங்கள் இல்லாமல் இருக்க ரத்த பரிசோதனை தான் உறுதியானதும் இறுதியானதும் இருக்க வேண்டும்
ரத்த பரிசோதனையில் ஒரு ஹோர்மோன் சுரப்பதை வைத்து தான் அதன் உறுதிப்படுத்துகிறார்கள் அப்படி அந்த ஹோர்மோன் சுரக்கவில்லை என்றால் அவர் கர்ப்பம் ஆகவில்லை என்று அர்த்தம்
கரு உண்டானது என்ன வீடு பரிசோதனையில் தெரிந்தவுடன் மருத்துவரை அணுகுவது தவறாமல் செய்ய வேண்டும் கொஞ்ச நாள் கழித்து பாத்துக்கலாம் என்ற எண்ணம் இருக்க கூடாது அதன் பின் மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் இதனால் கருவானது கருப்பைக்குள் வந்துவிட்டதா இதயத்துடிப்பு வந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ள ஸ்கேன் உதவியாக உள்ளது இதை 45 முதல் 55 நாளிலிருந்து கண்டறியப்படும் இது அவர்கள் தனது மாதவிடாய் கணக்கிடுவது குறித்து மாறுபடும்
ஸ்கேனில் பார்க்ககூடிய முக்கியமான விஷியம் என்னவென்றால் கரு உருவாகி எதனை நாட்கள் ஆகியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் இது அவர்களின் கணக்கு ஆனது தவறாக இருக்கும்பட்சத்தில் இதன் மூலம் சரியான நாள் கணக்கை கணக்கிட உதவியாக இருக்கும் இதயத்துடிப்பு தொடங்கிவிட்டதா என்றும் கருப்பைக்குள் வாட்நத்துவிட்டதா என்றும் இந்த ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம்
சிலர் கருஉண்டாவதற்கு அறிகுறியாக கருதுவது வாந்தி தலைசுற்றுவதும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் அது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் சிலருக்கு வாந்தி, தலை சுற்றல், உடல் சோர்வு, காய்ச்சல். இதில் எதாவது ஒன்று அல்லது அனைத்தும் இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கு சிலருக்கு இது எதுவும் இல்லாமல் இருக்கக்கூடும் சிலருக்கு இடுகுபோன்ற அறிகுறி இருந்தும் மருத்துவரை அணுகாமல் 4 மாதங்கள் கிழித்து வந்து பார்க்கும்போது கரு உண்டாகி அது உயிர் இல்லாமல் இருந்திருக்கும் இதற்கு தன ஸ்கேன் என்பது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது இவரு நடப்பதை miss abortion என்று சொல்வார்கள்
கர்ப்பமான பெண்கள் சில விசயங்களை தவிர்க்க வேண்டும் அதில் மாத்திரை சாப்பிடும் பழக்கம் உள்ள பலர் கர்ப்பம் ஆன பின் மருந்து மாத்திரை எடுப்பதை தவிர்க்க வேண்டும் மருத்துவரின் ஆலோசனையின்றி எதையும் சாப்பிடக்கூடாது முதல் மூன்று மாதத்தில் குழந்தை வளர்ச்சி பெரும் காலம் என்பதால் அப்போது நம் உட்கொள்ளும் அனைத்தும் அந்த குழந்தைக்கும் பொய் சேரும் இதனால் அந்த காலத்தில் சாப்பிடும் உணவு முதல் மாத்திரை வரை மருத்துவரின் ஆலோசனைபடி இருக்க வேண்டும்
ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு மனா அமைதியுடன் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை மேற்கொள்ள வேண்டும் வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் மறுத்த்துவரின் ஆலோசனையை சிறந்தது தனிப்பட்டவர்களின் கருத்துக்கு காது கொடுக்காமல் எதையும் கேட்டு பதறாமல் இருப்பது நல்லது