சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பூசணிக்காய் ஸ்னாக்ஸ் | Pusanika Snakes In Tamil
பூசணிக்காய், முதன்முதலாக மத்திய அமெரிக்காவில் 7500 வருடங்களுக்கு முன்பாக பயிரிடப்பட்ட ஒன்று. என ஆய்வில் தெரியவந்துள்ளது. பூசணிக்காயில் வைட்டமின் ‘ஏ’ சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் அதை நாம் பல்வேறு வகையில் உணவில் அன்றாட சேர்த்து வந்த நிலையில் தற்போது இதனை நாம் கட்லெட் முறையில் சமைத்து அசத்தலாம் வங்க…
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் (துருவியது) – 300 கிராம்
உருளைக்கிழங்கு – 1
சோளமாவு – 2 தேக்கரண்டி
அரிசி மாவு – 2 தேக்கரண்டி
மிளகு பொடி – சிறிது
கறி மசால் பொடி – தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
பிரட் பௌடர் – 2 தேக்கரண்டி
கடல எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
துருவிய பூசணிக்காயில் தண்ணீர் விட்டு 10 நிமிடம் இட்லி பானையில் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியதாக நறுக்கவும். அதன் பின் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி மசித்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் அதனோடு கறி மசால், மிளகு பொடி, எலுமிச்சைச்சாறு, அரிசி மாவு, சோளமாவு கூட தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
இந்த கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டிக் கொண்டு, பிரேட் பௌடரில் புரட்டி எடுத்து 20 நிமிடங்கள் உளர்த்திக்கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை அதில் போட்டி பொன்னிறமாக மிதமான தீயில் பொரித்தெடுத்தாள். சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார்.
தயாரான பூசணிக்காய் கட்லெட்டுடன் தக்காளி சாசுடன் சேர்த்து பரிமறலாம்.