சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Quotes in Tamil | தத்துவங்கள் தமிழில்
தத்துவம் என்பது ஒருவரின் மனதில் உள்ள துன்பம் மற்றும் இன்பத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. பலவகையான செயல்களுக்கு தத்துவங்களின் மூலமாக வெளிப்படுத்த முடியும். அதில் காதல் தோல்வி, போலியான நண்பர்கள், போலியான உறவுகள், இனிமையான நாள், சந்தோஷமான விஷயங்கள், ஆகிய பல்வேறு விதமான செயல்களுக்கு தத்துவம் மூலமாக நாம் வெளிப்படுத்தலாம்.
ஒருவர் தன் மனதில் இருக்கும் இன்பமோ அல்லது துன்பத்தையோ வெளியில் சொல்ல முடியாதவர்கள் ஒரு தத்துவத்தின் மூலம் அவர்கள் மனதில் இருப்பதை வெளிக் கொண்டு வருகின்றனர். நான்கு அல்லது ஐந்து வரிகளில் இருக்கக்கூடும். தத்துவத்தில் எதுகை மோனை அதிகமாகப் பயன்படுத்தப்படும் , பல போராட்ட வீரர்கள், பல அறிஞர்கள், பல கல்வியாளர்கள் அவர்களின் கருத்தை மக்களிடம் தத்துவ வடிவில் கூறுகின்றனர் இவ்வாறு தத்துவ வடிவில் கூறும் பொழுது அதிக மக்களிடம் அந்தக் கருத்து சென்று சேருகின்றன மேலும் கூறுகின்ற கருத்து நான்கு வரிகளில் எளிதாக அவர்களுக்குப் புரியும் வகையில் இருக்கின்றது இதனால்தான் பல அறிஞர்களும் மற்றும் கல்வியாளர்கள் தத்துவ வடிவிலேயே அவர்களின் கருத்துக்களை பதிவு இருக்கின்றன. இந்தப் பதிவில் சில அற்புதமான தத்துவங்களை சிலவற்றை நாம் பார்ப்போம்
- முடிவு எடுக்கும் வரை காத்திரு முடிவு எடுத்தபின் காத்திருக்காதே
- உள்ளத்தை எப்போதும் உளியாக வைத்துக்கொள் சிலை ஆவதும் சிறை ஆவதும் நீ செதுக்கும் தன்மையை பொறுத்து
- வாழ்க்கையில் விட்டுக் கொடுக்கலாம் ஆனால் விட்டுக் கொடுப்பதே வாழ்க்கையாக இருக்கக்கூடாது
- தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்
- ஒருவருக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் நம் புன்னகை ஒன்றை தவிர
- நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யார் அறிவார்
- அன்பாக இருக்கிற வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அது பேர் அன்பாக மாறும்போது தான் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது
- எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நம்மை தேடி வரும்
- சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை
- என் கண்களை விட்டு நீ தூரமாக இருக்கலாம் ஆனால் உன் இதயத்தை விட்டு தூரமாக என்னால் இருக்க முடியாது
- பிறர் உன்னை நேசிப்பதை விட்டு நீயே உன்னை நேசித்து பாரு உனக்கே பிடிக்கும்