சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
நடிகர் பிரதாப் போத்தன் காலமானார் | RIP Prathap Pothan
பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆக இருக்கக் கூடிய பிரதாப் போத்தன் பல்வேறு திரைப்படங்கள் அதாவது தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இயக்கியும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது தமிழில் பன்னீர் புஷ்பங்கள் , அழியாத கோலங்கள் உட்பட மலையாளம் , தமிழ் , தெலுங்கு, இந்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
அதைபோல் 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பிறந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரைப்படங்களில் நடித்தும் திரைப்படங்களை இயக்கியும் பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கே.பாலச்சந்தர் என்ற பிரபல திரைப்பட இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது . தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தில் பல்வேறு திரைப்படங்களை இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்ற படங்களாகவும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது மேலும் 2014 ஆம் ஆண்டு கடைசியாக திரைப்படத்தில் நடித்த நிலையில் இந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கக்கூடிய அவரது இல்லத்தில் அவரது 70 வயதில் இன்று காலை 8 மணிக்கு காலமானதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்திருக்கின்றனர் பிரதாப் போத்தன் இறுதி அஞ்சலி ஊர்வலம் இன்று மாலை அல்லது நாளை காலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
இவரது மறைவு திரைப்பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றன அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரைப்பிரபலங்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.