சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ச வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Sa Varisai Pen Kulanthai Peyargal
இந்த பதிவில் ச வரிசை ஹிந்து பெண் குழந்தை பெயர்கள் பார்ப்போம் . குழந்தைகள் என்பது கணவன் மனைவிக்கு இடையே கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம். ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் தான் பெற்ற குழந்தையை மிகச் சிறப்பாக வளர்த்து ஒரு பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைப்பார்கள் .
முன்னோர்கள் கூறியுள்ள கூற்றின்படி. ஒரு குழந்தை பெரிய ஆளாக வருவதற்கு சிறுவயதில் அந்த குழந்தைக்கு சூட்டும் பெயர் ஒரு காரணமாக அமைகிறது என்று கூறுகின்றனர் .ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டுவது என்பது அவர்களுடைய நம்பிக்கையை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஒரு சிலர் அந்தக் குழந்தையின் ஜாதகம் மற்றும் ராசியை வைத்து ஜோதிடரை ஆலோசனை பெற்று அவர்களின் குழந்தைக்கு எந்த எழுத்தில் ஆரம்பிக்க கூடிய பெயர் வைக்கவேண்டும் என்று கேட்டு அதற்கு தகுந்தாற்போல் பெயர் வைப்பார்கள்.
ஒரு சில அவர்கள் பெற்ற குழந்தைக்கு அவர்களின் குலதெய்வ பெயரை வைப்பார்கள். அல்லது அவர்களின் குடும்ப பெயரை சூட்டுவார்கள் . நாம் குழந்தைகளுக்கு நாம் என்ன பெயர் சூட்டுகிறோம் அதுதான் அந்த குழந்தையின் இறுதி காலம் வரை அவர்களுடன் பயணிக்கின்றது எனவே நாம் குழந்தைக்கு பெயர் சூட்டும் முன் நன்றாக ஆராய்ந்து நல்ல பெயராக சூட்டுவது நல்லது.. நாம் அந்த குழந்தைக்கு கூட்டுகின்ற பெயரால் அந்த குழந்தைக்கு எந்த ஒரு அவபெயர் அல்லது கஷ்டமோ வரக்கூடாது.
தமிழ் ஹிந்து முறைப்படி குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது குலதெய்வக் கோயில் அல்லது அவர்கள் வழிபடும் கோயிலில் வைத்து தான் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவார்கள் . இதிலும் சிலர் தற்காலிகமாக அந்த குழந்தைக்கு அவர்களின் குலதெய்வ பெயரை வைத்து பின்னர் நல்ல பெயராக தேர்வு செய்து இரண்டாவது முறையாக அந்த குழந்தைக்கு நல்ல தமிழ் பெயராக வைத்துக் கொள்வார்கள்.
நாம் இந்தப் பதிவில் சில ச வரிசை பெண் குழந்தைகளின் பெயர் பட்டியலை சிலவற்றை பார்ப்போம் .அதில் உங்களுக்கு பிடித்த பெயரை நீங்கள் தேர்வு செய்து உங்களின் செல்லப் பிள்ளைக்கு அந்த பெயரை சூட்டி அந்த குழந்தையின் வாழ்க்கையை நல்ல ஒரு மேன்மையான நிலைக்கு கொண்டு செல்லுங்கள்.
ச வரிசை பெண் குழந்தையின் பெயர்கள்
- சரஸ்வதி
- சாரு
- சர்மி
- சர்மிலி
- சமர் விழி
- சாதனா
- சாந்தி
- சாயிரா
- சரிதா
- சமந்தா
- சபிதா
- சான்வி
- சஞ்சனா
- சம்யுக்தா
- சாயிரா
- சந்திரா
- சாரா
- சாலினி
- சந்தியா
- சபர்ணா
- சங்கரி
- சசிகலா
- சசிரேகா
- சண்முகி
- சத்யகலா
- சாய் பல்லவி
- சங்கீதா
- சக்தி
- சகுந்தலா
- சத்யா
- சாம்பவி
- சரண்யா
- சன்மதி
- சரோஜினி
- சாந்திப்பிரியா