சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Sad Quotes in Tamil | சோகமான தத்துவங்கள் தமிழில்
வாழ்க்கையில் எல்லோருக்கும் பலவிதமான சோகமான நிகழ்வுகள் ஏற்படும். அந்த சோகமான நிகழ்வுகளில் இருந்து மீண்டு வருவதற்காக சில ஊக்குவிக்கும் வார்த்தைகள் பயன்படுத்துவார்கள் அந்த வார்த்தைகள் தத்துவ வடிவில் இருந்தால் அதுதான் சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்கான தத்துவமாகும்.
அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்தோசம் மற்றும் துன்பங்கள் பலவற்றை சந்திக்கின்றனர் . இதில் துன்பம் என்பது ஒருவருக்கு பல்வேறு வகையில் ஏற்படக்கூடும் . சிலருக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவு, சிலருக்கு உடல் ரீதியான ஏதேனும் உபாதைகள், சிலருக்கு தொழிலில் நஷ்டம் போன்ற பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு மனதில் கவலைகள் ஏற்படலாம். இந்த கவலைகளை மனதிலிருந்து போக்கி ஒரு உத்வேகம் கொடுப்பதுதான் தத்துவங்களாகும் .அந்த தத்துவங்களை படிக்கும் பொழுது நமக்கு துன்பம் என்பது ஒரு வெற்றியின் ஆரம்பமே என்று நமது மனதில் தோன்ற வைக்கும்.
கவலையைக் கண்டு அஞ்சி இருப்பவர்கள் எப்பொழுதுமே வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது. கவலையை வாழ்க்கையின் வெற்றியாக நினைத்து அதை எதிர்கொண்டு மேல் வருவது தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். மேலும் இந்த பதிவில் சில கவலையான தத்துவங்களை சிலவற்றை பார்ப்போம்

- மனதளவில் எவராலும் உங்களுக்கு வழி ஏற்படுத்த முடியாது , நீங்கள் தான் உங்களை சுற்றி நிகழும் ஏதோ ஒன்று இருக்கு , எதிர் செயலாக வழியை உருவாக்கினீர்கள்

- நினைத்தது போல் எல்லாம் நடந்தது ஆனால் கனவு போல் எல்லாம் ஒரு நொடியில் நடந்து முடிந்துவிட்டது

- எட்டி உதைக்கிறது காலம் எட்டி பார்க்கிறது துயரம் திடீரென வலிக்கிறது வலியை மறந்து ஒரு நொடி சிரித்தாள் அடுத்த நொடி வந்து விடுகிறது சோதனை என்னடா வாழ்க்கை இது

- காயமும் வலியும் பழகிப் போவது போல் வாழ்க்கை பழகுவது இல்லை அவ்வளவு எளிதில்

- கண்களில் மிதந்த அழகிய காட்சி எல்லாம் சில நேரங்களில் தூசி ஆகி கண்ணீரை தருகிறது

- ஒரு துளி அன்பை தந்துவிட்டு பல துளி கண்ணீரை தருகிறது போலியான சில உறவுகள்

- அளவு கடந்த அன்பினால் வரும் கோபங்களையும் புரிந்து கொள்ளாவிட்டால் அதுவும் சில நேரம் பிரிவுக்கு காரணமாகிறது

- ஒரு துளி அன்பை கொடுத்து ஒரு துளி தண்ணீரை விலை கேட்பது தான் இந்த வாழ்க்கை

- நிஜம் ஒரு நொடி வலி நினைவு ஒவ்வொரு நொடியும் வலி

- சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதே அதுவே உன் பெரும் தவறாகிவிடும்