சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சேலம் முருகர் கோவில் | Salem Murugan Temple In Tamil
முருகர் என்பவர் சிவன் இருக்கும் பார்வதிக்கும் பிறந்த குழந்தையாகும். வினை தீர்க்கும் விநாயகர் அவருடைய தம்பிதான் முருகர்
முருகருக்கு தமிழ்நாட்டில் தான் அதிக பக்தர்கள் உள்ளனர் இதனால் அவரை தமிழ் கடவுள் என அழைக்கின்றார்கள் மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் முருகர் பக்தர்கள் இருக்கின்றனர் இதில் அதிகமாக மலேசியா,சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் முருகரை அதிகம் வழிபட்டு வருகின்றனர்
உலகிலேயே மிகப்பெரிய முருகர் கோவில் மலேசியாவில் தான் இருந்தன ஆனால் இப்பொழுது நம் தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் உலகிலே மிகப்பெரிய முருகர் கோவில் கட்டப்பட்டுள்ளன
பொதுவாக முருகரை வழிபட்டு வந்தால் குடும்ப கஷ்டம் , கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு , தொழில் நஷ்டம் , குடும்ப பிரச்சனைகள் போன்ற அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடை பெறலாம்.
முருகருக்கு தமிழகத்தில் 6 படை வீடுகள் உள்ளன அந்த ஆறுபடை வீடும் நாம் சென்று முருகரை வழிபட்டு வந்தால் நிச்சயம் வாழ்க்கையில் ஒரு மேன்மை ஏற்படும் .
வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை அன்று முருகனை பிரார்த்தனை செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும் மாதத்தில் கிருத்திகை மட்டும் சஷ்டி ஆகிய நாட்களில் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து வந்தாள் குடும்ப கஷ்டம் முற்றிலும் நீங்கிவிடும் மேலும் வருடத்தில் தைப்பூசம் அன்று முருகர் கோவிலுக்கு காவடி அல்லது பாதயாத்திரையாக சென்று விரதமிருந்து வழிபாடு செய்தால் நிச்சயம் உங்களது வாழ்க்கையில் உள்ள பிரச்சனை தீர்ந்துவிடும்
தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளை மிஞ்சும் அளவில் சேலத்தில் கட்டப்பட்டுள்ள 146 அடி உயரமுள்ள முருகன் சிலை மிக நேர்த்தியாக அமைந்துள்ளது, மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலை விட மிக நேர்த்தியாக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது இதைப் பார்க்கும் பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போகின்றனர்
சேலம் முருகன் கோவில் இன் சிறப்பு
உலகிலேயே மிக உயரமான சிலை என கருதப்பட்ட மலேசியா பத்துமலை முருகன் சிலை 140 அடி உயரத்தில் அமைந்திருந்தன ஆனால் இப்பொழுது சேலத்தில் 146 அடி உயரத்தில் அமைந்துள்ள முருகர் சிலையை உலகத்தில் மிக உயரமான முருகர் சிலை ஆகும் இந்த சிலை அமைப்பதற்கு 90 டன் இரும்பு கம்பிகள், 5000 முட்டை சிமெண்ட் போன்ற மூலப் பொருட்களால் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கோயிலை தனி ஒரு நபராக ஆத்தூரை சேர்ந்த நடராஜன் மற்றும் NS ஸ்ரீதர் குடும்பத்தார்கள் இந்த கோவில் கான பொருட்கள் செலவினை அனைத்தையும் செய்தனர் இந்தக் கோவிலை கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆனது .இந்த சிலை அமைப்பதற்கு சுமார் மூன்று கோடி ரூபாய் செலவாகி உள்ளதாக கோயிலின் நிர்வாகம் தெரிவித்துள்ளன
முருகன் கையில் உள்ள வேலுக்கு அபிஷேகம் செய்வதற்கு லிப்ட் வசதியும் அமைத்துள்ளது கோயில் நிர்வாகம் இதன் மூலம் பால் அபிஷேகம் செய்ய வேண்டுமென்றால் லிப்ட் மூலம் மேலே சென்று பால் அபிஷேகம் செய்து விட்டு வரலாம். மலேசியா பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜர் தான் இப்பொழுது கட்டப்பட்ட சேலத்தில் உள்ள முருகர் சிலையை வடிவமைத்துள்ளார் .கோயிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் பக்தர்களுக்கு பூத்தூவி சிறப்பித்துள்ளனர் கோயில் நிர்வாகம்
உலகின் மிகப்பெரிய முதல் 4 இந்து கடவுள் சிலைகள்
இந்தியாவின் முருகன் சிலை 146 அடி உயரம் கொண்டது
மலேசியாவின் முருகன் சிலை 140 அடி உயரம் கொண்டது ( 2004- 2006 )
நேபாளத்தின் சிவன் சிலை 143 அடி உயரம் கொண்டது ( 2004-2011 )
இந்தோனேசியாவின் விஷ்ணு சிலை 122 அடி உயரம் கொண்டது (1994_ 2018 )