சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பாலியல் கல்வியின் அவசியம் | Sexual Education In Tamil
பாலியல் கல்வி என்பது தற்போது மிகவும் அவசியமான ஒன்று குழந்தைகளுக்கு அதாவது ஒரு 10 வயது குழந்தைக்கு என்ன தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை நாம் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
10 வருடத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கும் சூழல் இல்லாமல் ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என்று பிரித்து இருந்தது இதனால் எதிர் பாலினம் மீது ஒரு புரிதல் இல்லாமல் இருந்தது மேலும் இது போன்ற உளவியல் ரீதியான பிரச்சனைகள் வரமல் இருக்க நமக்கு பாலியல் கல்வி அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த பாலியல் கல்வியை பள்ளிகளில் நடைமுறை படுத்த உலகின் முக்கிய அமைப்புகள் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அதற்கான பாடத்திட்டங்களை வகுத்துள்ளது. அதோடு அவர்கள் வயது வாரியாக தெரிந்து கொள்ள வேண்டியதையும் வகுத்துள்ளனர் . அதாவது 5 முதல் 8 வயதுக்கு ஒரு வகையான பாடத்திட்டம், 8 முதல் 10 வயதுக்கு ஒரு வகையான பாடத்திட்டம், 10 முதல் 14 வயதுக்கு ஒரு வகையான பாடத்திட்டம் மற்றும் 14 முத்தம் 19 வயதுக்கு ஒரு பாடத்திட்ட முறை வகுத்துள்ளனர்.
அதேபோல் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்துக்கு ஏற்றாற்போல் அதை உருவாக்கியுள்ளனர் மேலும் இதை ஆசிரியர்கள் எவ்வாறு இதை நடத்த வேண்டும் என்பதையும் அவர்கள் அறிவுறுத்துகின்றன. பாலியல் கல்வி என்பது பலர் இது பாலியல் தூண்டுதலுக்கு உள்ளாகும் என்ற கருத்துக்களை முன்வைத்து வருகின்றன ஆனால் பல ஆய்வுகள் மேற்கொண்டத்தில் பாலியல் கல்வி உள்ள நாடுகளில் இருக்கும் முதல் உடல் உறவுக்கான வயது வரம்பு அதிகரித்துள்ளது . அதற்கு முன்பு முதல் உடல் உறவு 14-15 வயதில் இருந்தது பாலியல் கல்விக்கு பின் 17-18 ஆக உயர்ந்துள்ளது. குறைந்த வயதில் உடல் உறவு வைப்பதால் வரும் பிரச்சனைகள் பற்றி கல்வியாக நாம் கொடுக்கும்போது அது மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் இதனால் அவர்கள் அதை தள்ளி வைக்கின்றனர்.
பருவத்தில் எதிர் பாலினத்தை மீது வரும் ஈர்ப்பு இயல்பானது என்றும் அதை எவ்வாறு கையாள்வது என்றும் அவர்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் நடை, அவர்களின் உடை அணிந்திருக்கும் விதம் மற்றும் அவர்களின் உடல் வாகு போன்ற விசயங்கள் மூலம் சிலருக்கு பார்த்த உடன் காதல் என்று கூறுவார் . அதுவெறும் ஈர்ப்பாக தான் கருதப்படும் இதுவே பலரின் வாழ்க்கைத்துணை தேர்ந்தெடுக்கும் முறையாக உள்ளது இது அவர்களுக்கு அந்த நேரத்துக்கு ஒரு உற்சாகமாக இருந்தாலும் அது பிற்காலத்தில் வாழ்க்கைக்கு பெரும் ஆபத்தை உண்டாகும்.
இதுபோன்ற உளவியல் ரீதியான பிரச்னைகள் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால் பபாலியல் கல்வி மிக அவசியம் இது நாம் ஒவ்வொரு வயதிலும் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு அதை எதிர்கொள்வது போன்ற விசியங்களை தெரிந்து கையாளலாம் இதுபற்றிய அறிவு இல்லாமல் சிலர் குறைந்த வயதில் உடல் உறவு வைத்துக்கொள்வதால் சிறு வயதில் குழந்தை பேரு பெறுவது மற்றும் இதனால் கருக்கலைப்பு ஈடுபடும்போது உயிரிழப்பு ஏற்படுவது போன்ற சிக்கல்கள் வருகின்றன.
பாலியல் உணர்வு என்பது குறிப்பிட்ட வயதில் எதிர்பாலினத்தின் மீது வருவது இயற்கையான விசியம் அது வரும்போது அதை எப்படி கையாள்வது மேலும் அதை ஒரு அளவுக்கு மேல் போகும்போது எப்படி அதை சரி செய்வது என்று தெரிந்துகொள்ள இந்த பாலியல் கல்வி உதவியாக இருக்கும். இது பற்றி ஒரு ஒழுங்கான கல்வி முறையா இல்லாததால் இன்று இதை பற்றி இணையத்தில் தவறான தகவல்களை படித்து பெரும் தவறுகளை செய்து வருகின்றன. மேலும் இதை பற்றி ஒரு அடிப்படை அறிவு அனைவருக்கும் வேண்டும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல கல்வி தான் ஒரு சிறந்த முறை மற்றும் நாட்டில் பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் பாலியல் கல்வி மிக அவசியமான ஒன்று என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.