சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஸ்கேட்டிங் பயணம்.. மரணமடைந்த இளைஞர்..!
கன்னியாகுமரியிலிருந்து ஸ்கேட்டிங் பயணத்தைத் துவங்கிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞர் அனஸ் ஹஜாஸ். இவர் காஷ்மீரில் தனது பயணத்தை நிறைவு செய்வதற்குள் விபத்தில் சிக்கி மரணமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறு மூடு பகுதியைச் சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ் என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் முதலில் டெக்னோ பார்க்கில் வேலை செய்து வந்துள்ளார். அதன் பிறகு தனியார் பள்ளியிலும் பணிபுரிந்துள்ளார், ஸ்கேட்டிங் மீதுள்ள அடங்காத ஆவலால் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துள்ளார். மேலும் ஸ்கேட்டிங்கிள் பல சாகசங்கள் செய்து பரிசுகளையும் குவித்துள்ளார். புதிதாக சாதிக்க வேண்டும் என எண்ணியவர், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சாகச பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
இவர் இதற்காக கடந்த மே மாதம் 29ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஸ்கேட்டிங் சாகச பயணத்தை துவங்கினார். மதுரை, பெங்களூர் சென்று ஹைதராபாத் வழியாக பயணித்தவர் மத்திய பிரதேசம் உத்தரப் பிரதேசத்தைக் கடந்து ஹரியானா மாநிலத்தை அடைந்துள்ளார். இன்னும் சுமார் 15 நாட்களில் காஷ்மீர் சென்று தனது சாகச பயணத்தை நிறைவு செய்ய இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை லாரி ஒன்று மோதிய விபத்தில் மரணமடைந்துள்ளார். செல்போனுக்கு தொடர்பு கொண்ட அவராது நண்பர் ஒருவர் அழைத்த போது எதிர்முனையில் பேசியவர் இந்த அதிர்ச்சி சம்பவத்தை கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் பஞ்சாப் பகுதியில் விபத்தில் சிக்கியதாகவும் அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தியதாகவும் பின் காப்பாற்ற முடியவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளார். அனஸ் ஹஜாஸ் உடலை பெறுவதற்காக அவரது பெற்றோர்கள் ஹரியானா சென்றுள்ளனர். பின் அவர் தனது செல்போனில் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் தான் கடந்து சென்ற இடங்கள் குறித்து முகநூலில் வீடியோ பதவு செய்தது தெரியவந்துள்ளது.