சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
உடம்பில் தசையை வலுப்படுத்துவது எப்படி / Strengthen The Muscles In Tamil
தசை என்றால் என்ன ? / What Is Muscles In Tamil
நம் உடலானது மொத்தம் 600 தசைகளால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த 600 தசைகளுக்கும் அது இருக்கின்ற இடத்தில் அதற்கான வேலைகள் செய்யக்கூடியது . தசையானது மெல்லிய வளையக்கூடிய பைபர் போன்றவற்றினால் ஆனவை அது மிகவும் வெண்மையாக வளரக்கூடிய தன்மையில் அமைந்திருக்கும்.
ஒவ்வொரு தசைக்கும் உடலில் ஒவ்வொரு வேலைகள் இருக்கின்றது . ஒரு சில தசைகள் நாம் ஓடவும் நடப்பதற்கும் ஏதேனும் ஒரு பொருளை எடுப்பதற்கும் பயன்படுகின்றன ஒரு சில தசைகள் நாம் உண்ணும் உணவை செரிமானப்படுத்துவதற்கும், நம் மூச்சு வாங்குவதற்கும், பயன்படுகின்றன.
ஒரு சில தசைகள் நாம் பிறந்ததிலிருந்து சாவு முறை உபயோகமாகிறது உதாரணம் நம் இதயம் இதயத்தின் சுற்றியுள்ள தசைகள் தான் விரிந்து மற்றும் சுருங்கி நாம் இதயத்தை செயலாற்றிக் கொண்டிருக்கிறது இந்த தசைகளை நாம் மிகவும் வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நம் உடம்பில் ஏற்படக்கூடிய சில நோய்களால் நம் தசைகள் சோர்ந்து சிறிது வலுவிழந்து காணப்படும், மேலும் சில தசைகள் அதன் செயல்பாட்டில் சில தாமதம் ஏற்படும் இது ஏனென்றால் அந்த தசையில் சில காயங்களோ சில பலூன் கம்மியாகவோ இருக்கக்கூடும்.
மேலும் இதயத்தில் உள்ள தசைகள் வலுவிழந்து விட்டால் நாம் நம் உடம்பில் ரத்த ஓட்டத்தையே குறைத்து நம் நோய்வாய்ப்படுவதற்கு காரணங்களாக ஆகிவிடும் எனவே நாம் தசைகளை மிகவும் வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் உடலின் இயக்கம் முழுவதுமே தசையால் ஆனவைதான் நாம் நடப்பதாக இருந்தாலும் , உறங்குவதாக இருந்தாலும், நாம் மூச்சு காற்றை உள்ளே இழுத்து வெளியே அனுப்புவதாக இருந்தாலும், நம் இதயத்துடிப்பாக இருந்தாலும் அனைத்திற்கும் தசை தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது எனவே தசையை நாம் எப்பொழுதும் சிறிய புரோட்டின் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிட்டு மிக வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் உங்களின் தசைகளை மிக வலிமையாக வைத்துக் கொள்வதற்கு நீங்கள் உங்களது உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும், மேலும் நல்ல ஒரு ஆரோக்கியமான மீதமான உணவுகளை சாப்பிட வேண்டும், பின்னர் தினமும் உடற்பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும், மேலும் இரவில் நல்ல ஒரு ஆரோக்கியமான உறக்கம் அவசியம் இவை அனைத்தையும் நீங்கள் தவறாமல் செய்தால் உங்கள் உடலில் உள்ள தசைகள் மிக வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடும்.
நமது உடல் மூன்று வகையான தசைகளால் உருவாக்கப்பட்டுள்ளது / Three Types Of Muscles In Body In Tamil
ஸ்கெலெட்டால் தசைகள் / Skeletal Muscles
இந்த வகையான தசைகள் உங்களது எலும்புடன் ஒன்றாக இருக்கக்கூடிய அமைப்புடையது உங்களது மண்டை ஓட்டின் தசையுடன் உங்களது எழும்பை இணைத்து இருக்கும் நீங்கள் ஒரு செயலை செய்வதற்கு இந்த தசைகள் தான் பயன்படுகின்றன உதாரணத்துக்கு நீங்கள் நடப்பதற்கோ வருவதற்கோ எந்திரித்து நிற்பதற்கு இந்த தசையை தான் நாம் பயன்படுத்துகிறோம் அது போல இந்த தசை மிகவும் வேகமாக செயல்படும்
கார்டியாக் தசைகள் / Cardiac Muscles
இந்த தசை தான் இதயத்தை சுற்றி ஒரு சுவர் போல் அமைந்திருக்கும் . இந்த தசை தான் உங்களின் இதயத்தில் இருந்து உங்கள் உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்வதற்காக உதவி செய்கிறது இந்த தசை தான் விரிந்து மற்றும் சுருங்கி உங்களின் இதயத்தை செயல் படுத்தி வருகிறது. உங்களை நான் இந்த வகையான தசைகளை கட்டுப்படுத்த முடியாது அதன் வேலையை அது செய்து கொண்டே தான் இருக்கும்
ஸ்மூத் தசைகள் / Smooth Muscles
இந்த வகையான தசைகள் உடலில் பல்வேறு உறுப்புகளின் மேல் புறத்தில் அமைந்துள்ளது இந்த தசைகள் அமைந்துள்ள உறுப்புகள் யூரினரி பிளேடர் அதாவது சிறுநீரகப்பை , வயிற்றுப் பகுதி , சிறு குடல் , பெருக்குடல் , ஆண் மற்றும் பெண்ணின் பாலின சேர்க்கை இடங்களிலும் அமைந்துள்ளது மேலும் நம் நுரையீரலில் சுற்றியும் இந்த தசை அமைந்துள்ளது. இந்த தசையின் வேலை என்னவென்றால் நம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற இந்த தசைகள் உதவிகிறது.
மேலும் நம் நுரையீரல் சுருங்கி விரிவடைந்து நாம் மூச்சுக்காற்றை உள்ளே இழுப்பதற்கும் வெளியே அனுப்புவதற்கும் இந்த தசைகள் பயன்படுகின்றன
இந்த தசைகளை நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாத மேலும் இந்த தசைகள் இருக்கும் பகுதியை நாம் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு நாம் மூளை அமைந்துள்ளது இந்த தசைகளை எங்கே இருக்கின்றது என்று நம்மால் உணர முடியாது
தசை நம் உடம்பில் என்னென்ன செயல்களை செய்கின்றது / Works Of Muscles In Tamil
- மூச்சு விடுவதற்கும்
- பேசுவதற்கும்
- உணவை முழுங்குவதற்கும்
- உணவு செரிமானத்திற்கும்
- மலம் வெளியேற்றுவதற்கும்
- நடப்பதற்கும்
- அமர்வதற்கும்
- நிற்பதற்கும்
- இதயம் துடிப்பதற்கும்
- பெண்களுக்கு குழந்தை வயிற்றில் இருந்து வெளியே வருவதற்கு இந்த தசைகள் உதவுகிறது
- நாம் பார்ப்பதற்கும்
- நாம் கேட்பதற்கும்
- நாம் பேசுவதற்கும்
போன்ற பல்வேறு செயல்களுக்கு இந்த தசை தான் முக்கிய பங்காற்றுகிறது . இதனால் நம் தசைகள் பழுதடைகிறது . நம் உடலில் உள்ள தசைகள் பல்வேறு காரணங்களினால் செயல் இழந்தோ அல்லது பழுதடைந்தோ காணப்படுகிறது அதற்கு சில காரணங்கள் கேன்சர், நோய்வாய் படுதல், குடிப்பழக்கம் மற்றும் சில காயங்களினால் ஏற்படுகின்றன
கேன்சர் மற்றும் பிற நோய்கள் / Cancer And Other Disease
கேன்சர் என்பது பல்வேறு வகையான கேன்சர்கள் நம் உடலில் ஏற்படும் இதில் சில சார்கோமா மற்றும் வேலை செய்த சில வகைகளான நோய்களால் நாம் உடலில் உள்ள தசைகள் வலுவடைந்து விடும்
கார்டியோவாசகலர் நோய் / Cardiovascular Disease
இந்த வகையான நோய்களால் நாம் இதயத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் உள்ள தசைகள் மிகவும் வலுவிழந்து அதன் செயலை செய்ய முடியாமல் உடல் ஆரோக்கியம் மிகவும் மோசமாக ஆகிவிடும். மேலும் ஹார்ட் அட்டாக் போன்ற நோய்களில் நாளும் நாம் திசை வலுவளங்கு செயலிழந்து விடும்
குரோனிக் பெயிண்ட் டிஸ்ஆர்டர் / Chronic Pain Disorders
இந்த வகையான நோய்கள்னால் நம் உடல் உள்ள மொத்த தசையும் சிறிது அதன் சேலை இழந்து உடல் முழுவதும் உள்ள தசைகளில் வலி ஏற்படும் இந்த வலியினால் நம் உடல் சோர்வாகவும் உடல் முழுவதும் வழியாகவும் நாம் உணரவும்
தொற்று நோய்கள் / Infections
நம் உடலில் பாக்டீரியல் மட்டும் வைரஸ் ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய உடல் ஆரோக்கியம் கெடும் நோயினால் நம் உடலில் உள்ள தசைகளில் உள்ள பைபர்கள் சேதமடைந்து விடும். இந்த வகையான சில நோய்களின் பெயர்கள் வைரல் ஃபீவர், மலேரியா, சிக்கன்குனியா, டெங்கு போன்றவற்றினால் தசைகள் வலுந்து விடும்
தசையில் ஏற்படக்கூடிய சில காயங்கள் / Injuries
நாம் உடலில் உள்ள தசைகளில் சிறிது காயங்கள் ஏற்பட்டால் அந்த பகுதியில் உள்ள தசைகள் கிழிந்து அதன் செயலை சரியாக செய்ய முடியாத அளவிற்கு கொண்டு சென்று விடும் . இது போல் நம் உடலில் ஒரு பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மோசமாக காயம் பட்டிருந்தால் அந்தப் பகுதி முற்றிலும் செயலிழந்து விடும்
மரபணு குறைபாடுகள் / Genetic Disorders
மரபணு குறைபாடு இருப்பவர்களுக்கு இந்த தசை செயலிழந்தோ அல்லது வழுவிலந்தோ காணப்படுகிறது. மரபணு குறைபாடு என்பது நம்முடைய தாய் தந்தை அல்லது அவர்களுடைய முன்னோர்கள் யாரேனும் இந்த தசை குறைபாடு இருந்தால் அது நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதில் மொத்தம் 30 வகையான மரபணு குறைபாடு நோய்கள் இந்த வகையில் உள்ளது. இதுபோல் மரபணு குறைபாடுகள் ஏற்படும் தசை நோய்கள் குணப்படுத்த முடியாதது ஆக உள்ளது
மருந்துகள் / Medications
நாம் உண்ணக்கூடிய சில மருந்துகளில் உள்ள கெமிக்கல்கள் நம் உடலில் உள்ள தசைகளை பாதித்து அதனுடைய வலுவை குறைத்து வலு இழந்து விடும். இதனால் நாம் உண்ணும் மருந்து மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை இன்றே நாம் அதை உண்ணக்கூடாது அவ்வாறு நாம் மெடிக்கலில் மாத்திரைகளை வாங்கி அதிகம் சாப்பிட்டுக் கொண்டே வந்தால் நம் உடலில் தசைகள் மிகவும்
தசைகளை வலுப்படுத்துவது எப்படி ? / Strengthen Muscles In Tamil
நம் உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்துவது மிக எளிதான விஷயம்தான் நாம் தினமும் நன்றாக உடற்பயிற்சி மற்றும் நன்றாக உணவுகளை எடுத்துக் கொண்டாலே உடல் வலுவடைந்து விடும்
உணவு பழக்கவழக்கங்கள் / Food Habits
நாம் உண்ணும் உணவில் அதிகமான புரோட்டின் அளவு உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அதிக புரோட்டின் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது தசைகளில் உள்ள செல்கள் இறந்தாலும் மீண்டும் புரோட்டின் மூலக்கூறுகளால் அந்த செல் புதுப்பித்து விடும் எனவே உங்களது தசைகள் மிகவும் வலிமை அடைந்து விடும் எனவே புரோட்டீன் அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
புரதம் அதிகமாக உள்ள உணவுகள் / High Protein Foods In Tamil
- பாதாம்
- வால்நட்
- இறைச்சிகள்
- பால்
- முட்டை
- சோயா பீன்ஸ்
இவைகளில் அனைத்திலும் புரோட்டின் அதிகமாக உள்ளது எனவே நீங்கள் தினமும் காலை எழுந்தவுடன் நான்கு அல்லது ஐந்து பாதம் மற்றும் இரண்டு முட்டை அல்லது நான்கு முட்டை மேலும் காலையில் ஒரு டம்ளர் பால் மற்றும் இரவில் ஒரு டம்ளர் பால் இடையில் மதிய உணவாக சிறிது அசைவ உணவாக கோழிக்கறி அல்லது மாட்டுக்கறி அல்லது ஏதேனும் ஒரு அசைவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் இவர் நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டு வந்தீர்கள் என்றால் உடலில் உள்ள தசைகள் மிகுந்த வலுவடைந்து விடும்
உடற்பயிற்சி / Exercise
நீங்கள் தினமும் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் இவ்வாறு நீங்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் உங்களது தசைகளில் உள்ள செல்கள் இறந்து மீண்டும் நீங்கள் உண்ணும் புரதத்தின் மூலம் புதிதாக செல்கள் உருவாகும் இவ்வாறு மீண்டும் மீண்டும் அழித்தல் மற்றும் உருவாக்குதல் ஆகியவற்றை செய்து வந்தீர்கள் என்றால் உங்களது தசைகள் மிகவும் வழிவடையும் எனவே நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உங்களது தசைகளை புதுப்பித்துக் கொள்ளலாம்
அதிலும் இதயத்திற்கான உடற்பயிற்சி செய்தீர்கள் என்றால் உங்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் நீங்கள் உடற்பயிற்சி கூட செல்வீர்கள் என்றால் அங்குள்ள உடற்பயிற்சி ஆசிரியர்கள் தினம் கேட்டு பின்னர் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
தூக்கம் / Rest
உங்களது உடலில் உள்ள தசைகள் வலுவடைய நீங்கள் தினமும் 6 மணி நேரம் ஆகுவது குறைந்த அளவு தூக்கம் இருக்க வேண்டும் .
நீங்கள் உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் நன்றாக உறங்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் பொழுது தசையில் உள்ள செல்கள் இறந்துவிடும் மீண்டும் புதிதாக செல்கள் உற்பத்தி ஆகுவதற்கு நீங்கள் அதிக புரோட்டீன் உள்ள பொருட்களை உண்டு விட்டு நன்றாக உறங்க வேண்டும் ஏனென்றால் உறக்கத்தின் பொழுது தான் அந்த செல்கள் புதிதாக உருவாகிறது எனவே நீங்கள் நன்றாக தூங்க வேண்டும் நீங்கள் அதிக உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தீர்கள் என்றால் 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் ஆகும் உங்களது செல்கள் புதிதாக உருவாவதற்கு
உங்களது தசையை வலுவடையச் செய்வதற்கு நன்றாக சாப்பிட்டு நன்றாக உடற்பயிற்சி செய்து நன்றாக தூங்கினீர்கள் என்றால் இதுவே போதும்