சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பாரதியாரின் வாழ்க்கை வரலாறு தமிழில் / Subramania Bharathiyar History In Tamil
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் சின்னச்சாமி என்பவர் வசித்து வந்தார் எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த அவருக்கு 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு சுப்பிரமணியம் என்று பெயர் சூட்டப்பட்டது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அக்குழந்தையை சுப்பையா என்றே அழைத்து வந்தனர்
ஐந்து வயதில் இருந்தபோது அவரது தாயார் லட்சுமி அம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். சுப்பையாவின் தாத்தா ராமசாமி தான் அந்தச் சிறுவனுக்கு முதலில் தமிழ் கற்றுக் கொடுக்க தொடங்கினார் . பாடம் கற்றுக் கொள்ளத் தொடங்கிய சில ஆண்டுகளுக்குள்ளாகவே சிறுவன் சிறிய சிறிய கவிதைகளை எழுதத் தொடங்கினான் .அதை கவனித்த அவன் எதிர்காலத்தில் பெரிய கவிஞராக வருவான் என தாத்தா கூறினார் ஆனால் சின்னச்சாமி ஐயருக்கும் தனது மகன் கவிஞராக வருவதில் விருப்பமில்லை.
அவன் நன்கு ஆங்கிலம் கற்று உயர் பதவி ஏதேனும் ஒன்றை அடைய வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார். தனது தந்தை வேலை செய்யும் எட்டயபுரம் அரண்மனைக்கு சிறுவன் சுப்பையா அடிக்கடி செல்வது வழக்கம் அப்படி சொல்லும் போதெல்லாம் தனது கவிதைகளால் அங்கிருந்தவர்களை அசத்தி வந்தான் அவனது கவிதைகளால் கவரப்பட்ட எட்டையபுரம் அரண்மனையில் சுப்பையாவுக்கு பாரதி என்ற பட்டத்தை அளித்தனர் . சுப்பையாவுக்கு சிவயோகியார் தான் பாரதி என்ற பட்டத்தை அளித்தார் என்ற கருத்தும் உள்ளது .எது எப்படி ஆனாலும் மிக இளம் வயதிலேயே பாரதி என்ற பட்டத்தை பெற்றார் அந்தப் பட்டத்தைப் பெறும் போது சுப்பையாவுக்கு வயது வெறும் 11 தான்
பின்னர் பாரதியை உயர்நிலை படிப்புக்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார் சின்னச்சாமி அய்யர் அதன்படி திருநெல்வேலியில் தைலாபுரத்தில் குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி படிப்பைத் தொடர்ந்தார் குடும்ப சூழ்நிலை காரணமாக பாரதிக்கு மாதாமாதம் பணம் கொடுப்பதே மிகவும் கஷ்டப்பட்டார் அவரது தந்தை சின்னச்சாமி என்பதையும் நன்கு உணர்ந்திருந்தார் அதனால் தன் படிப்பு செலவுக்கு எட்டயபுரம் மகாராஜாக்கு கடிதம் ஒன்றை எழுதினார் அந்த கடிதம் கவிதை வடிவில் எழுதப்பட்டது இதுதான் முதல் கவிதையாக கருதப்படுகிறது
பாரதிக்கு வயது ஆகி கொண்டே செல்வதாக அவரது தந்தை எண்ணினார் அதனால் அவருக்கு ஒரு திருமணத்தை செய்து வைக்க முடிவெடுத்தார் அவர் தந்தை இந்த முடிவை எடுக்கும் பொழுது பாரதிக்கு 14 வயதுதான் ஆகியிருந்தது. அதே நேரத்தில் அவருடைய உறவுப் பெண்ணான செல்லம்மாள் அவருடைய வயது வெறும் 7 பாரதிக்கும் செல்லம்மாள் அவர்களுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது .
மீண்டும்பழையபடி பாரதி தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வந்தார் இந்த சூழ்நிலையில்தான் எதிர்பாராதவிதமாக பாரதியின் தந்தை சின்னசாமி ஐயர் காலமானார் . சின்னசாமி ஐயரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க காசியில் இருந்து வந்த அவரது சகோதரி . அங்கு தாய் தந்தையை இழந்த பாரதியை தன்னுடன் காசிக்கு அழைத்துச் செல்ல அவர் முடிவெடுத்தார் . தனது அத்தையின் விருப்பப்படியே காசிக்குச் சென்ற பாரதி அங்கு ஜெயநாராயணி இன்டர்மெடியட் கல்லூரியில் சேர்ந்தார் அங்கு ஆங்கிலத்துடன் சேர்த்து சமஸ்கிருதமும் கற்றுக்கொண்டார் .
காசியில் இருந்தபோது பல்வேறு அரசியல் கூட்டங்களையும் பல்வேறு மேடை பேச்சு கேட்கும் வளர்ந்து வந்தார் . பின்னர் தாய் நாடு பிரிட்டிஷாரின் ஆட்சியில் இழிவான நிலையில் உள்ளதை உணர தொடங்கினார் . காசியில் இருந்த பாதிப்பால் பாரதி மீசை வைத்துக் கொள்ளவும் தலைப்பாகை அணிந்து கொள்ளத் தொடங்கினார் . பாரதி கல்லூரி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்த பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவருக்கு எட்டயபுரம் அரண்மனையிலேயே வேலையும் கிடைத்தது .
அங்கு அவருக்கு கடிதம் வாசித்தல், கோப்புகள் வாசித்தல், ஆங்கிலக் கவிதைகள் வாசித்து காட்டுவது போன்ற பணிகள்தான் பாரதிக்கு வழங்கப்பட்டிருந்தன . அப்போது அங்கிருந்த ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் பாரதியிடம் கட்டுரை ஒன்றை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார் பாரதியும் எழுதிக் கொடுத்தார் பணம் படைத்த சிலர் செய்யும் அறிவற்ற செயல்கள் குறித்து அந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தது பாரதியின் வேலை பறி போக அந்த ஒற்றை கட்டுரை போதுமானதாக இருந்தது. அந்தக் கட்டுரையைப் படித்த எட்டயபுரம் ஜமீன் தன்னை விமர்சித்து தான் அந்த கட்டுரையை எழுதி இருப்பதாக எண்ணி பாரதி வேலை இருந்து அனுப்பப்பட்டார். புதிய வேலை ஒன்றை தேட வேண்டிய சூழல் இத்தனைக்கும் பாரதியின் மனைவி செல்லம்மாள் தற்போது கர்ப்பமாக இருந்தார் .
பாரதியை மதுரைக்கு வரும்படி அவரது நண்பர்கள் சிலர் அழைத்தனர் அந்த அழைப்பை ஏற்று சங்கம் வளர்த்த மதுரையை நோக்கி பயணப்பட்டார் . மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த அரசன் சண்முகனார் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக மூன்று மாதம் மட்டும் தற்காலிக விடுப்பு எடுத்திருந்தார். அந்த ஆசிரியர் பணி காலியாக இருந்தது . அந்த நேரத்தில் தான் பாரதி மதுரை வந்து சேர்ந்ததும் நண்பர்களின் உதவியுடன் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார் பாரதி. இது ஒருபுறமிருக்க சென்னையில் சுப்பிரமணிய அய்யர் என்பவர் பத்திரிகை ஒன்றை தொடங்கி அதன் வாயிலாக மக்களிடையே தேச உணர்வை விதைத்தார் .மேலும் அவர் காங்கிரசில் முக்கிய பிரமுகராக இருந்த அவர் சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றும் உதவியாளர் ஒருவரை தேடிக் கொண்டிருந்தார் . அந்த சமயத்தில் பாரதியைப் பற்றி நண்பர்கள் மூலம் ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் கேள்விப்பட்ட அந்த கணமே பாரதியை பணியில் சேர்ந்தார்
சுதந்திர எழுச்சி உணர்வை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியில் பாரதி எழுதிய எழுத்துக்கள் ஈடுபட்டனர். நாட்டு விடுதலைக்காக சென்னையில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்
அந்த காலகட்டத்தில் தான் தூத்துக்குடியில் ஒருவர் மிகத்தீவிரமாக இந்திய விடுதலை பணிகளில் ஒருவர் ஈடுபட்டு வருகிறார் என்று பாரதிக்கு தெரியவந்தது அவர் வெள்ளையனை எதிர்த்து போட்டியாக கப்பல் வாங்கப் போகிறேன் என சொல்லில் செயல்படுத்தியவர் தான் வ உ சிதம்பரம் பிள்ளை பின்னர் பாரதியும் வ உ சி நண்பர்களாகினர் ஒரு நாள் வ உ சி வேலை விஷயமாக சென்னைக்கு வந்தார் பின்னர் பாரதியை சந்தித்தார் இருவரும் நண்பர்களாக மாறினர் பல்வேறு போராட்டங்களில் இருவரும் இணைந்து செயல்பட துவங்கினர் . பின்னர் வா உ சி இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் கொண்டுவந்திருக்கிறார் இந்த செய்தியை பத்திரிகையாளரான பாரதி புதிய முறையில் வெளியிட விரும்பினார் அதன்படி அவர் அந்த செய்தியை கார்ட்டூன் வடிவத்தில் வெளியிட்டார் . 1908ஆம் ஆண்டு நண்பருடன் இணைந்து ஜன சங்கம் என்ற அமைப்பு ஒன்றை பாரதி தொடங்கினார். இந்த தருணத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டார் என்ற காரணங்களை கூறி வ உ சி யை போலீசார் கைது செய்தனர் அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து போலீசாரின் பார்வை பாரதியின் மீது விழுந்தது எழுத்துக்களும் பேச்சுக்களும் ஆரம்பம் முதலே ஆட்சியாளர்களுக்கு பெரும் குடைச்சலை தந்து கொண்டிருந்தது .எனவே இந்தியா பத்திரிகையில் தேச விரோத கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி அதன் ஆசிரியரான பாரதியை கைது செய்ய போலீசார் முடிவெடுத்தனர் இதனை முன்பே அறிந்த இந்தியா பத்திரிகை நிர்வாகத்தினர் சீனிவாசன் என்பவரை பத்திரிகையின் ஆசிரியராக மாற்றினர் பின்னர் பாரதி கைது செய்ய வந்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது அங்கு கைது செய்ய வந்த போலீசார் இந்தப் பத்திரிகைக்கு பாரதி ஆசிரியர் இல்லை என்பதை அறிந்த போலீசார் பெயரளவில் ஆசிரியராக இருந்த சீனிவாசனை கைது செய்து அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று .பாரதி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழலில் பாரதி பாண்டிச்சேரியில் தப்பிச் செல்லும்படி அவரது நண்பர்கள் வலியுறுத்தியதை அடுத்து அங்கு சென்றார்.
பாண்டிச்சேரி சென்றடைந்த பாரதி அங்கு ஐயங்கார் என்பவரது வீட்டில் வசிக்க தொடங்கினார் பாண்டிச்சேரி பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அங்கு வைத்து தமிழக போலீசார் அவரை கைது செய்ய முடியவில்லை எனினும் பாரதிக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என ஐயங்காரை பிரிட்டிஷ் போலீசார் எச்சரித்தனர் . இதனால் பாரதி வேறொரு இடத்திற்கு இடம் மாற வேண்டி வந்தது தமிழகத்தில் நடத்திக் கொண்டிருந்த இந்தியா பத்திரிகையை பாண்டிச்சேரியில் வைத்து நடத்துவது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது .இதன்படி இந்தியா பத்திரிக்கை பாண்டிச்சேரியில் உதயமானது நாட்டின் விடுதலைக்காக பாரதியின் இந்தியா பத்திரிகை இயங்கத் தொடங்கின வா உ சி சிதம்பரனார் சிறைச்சாலையில் சென்றிருக்கிறார் என்கிற செய்தி அந்த சமயத்தில் பாரதி வந்தடைந்தது. பின்னர் பாரதி தனது பத்திரிக்கையில் இந்த செய்தியை நாட்டுப்பற்றுடன் மக்களிடையே சுதந்திர வேகத்தை ஊட்டும் விதமாக எழுதுகிறார் அதில் இந்த கம்பெனி தோல்வியுற்றால் தென்னிந்தியர்களுக்கு இதை விட பெரிய அவமானம் தேவையில்லை . போன்ற வார்த்தைகளால் பிரிட்டிஷ் அரசாங்கத்தை தொலைத்த எடுத்தார் . இச்செயலால் ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அவர் மீது பொய்யான கொலை குற்றம் சுமத்தி நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக குற்றம் சாட்டி கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது
ஆனால் பாரதி பாண்டிச்சேரியில் இருந்த தான் கைது செய்ய முடியவில்லை கொலை வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை விளக்கும் வகையில் சென்னையில் உள்ள ஆளுநர் பாரதி கடிதம் ஒன்றை எழுதினார் தனது தேசிய கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அரசியல் போராட்டங்களில் இருந்து விலகி வெளி நாட்டு அரசின் கொடியில் அமைதியாக வாழ்ந்து வருவதாகவும் பாரதி விளங்கினால் .மேலும் தனது நடவடிக்கைகளை விசாரித்து அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்த பாரதி தன் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கேட்டுக்கொண்டார். யாரோ ஒருவர் கொலை செய்ததற்காக அமைதியாக வாழ்ந்து வரும் தன் மீது வாரண்ட் பிறப்பித்து இருப்பது சரியில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் பாண்டிச்சேரியில் பத்திரிகைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு பின்னர்
பாரதியை தமிழகத்திற்கு திரும்பி வரும்படி அவரது நண்பர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர் பாரதியின் மனைவி செல்லம்மாள் நமது பூர்வீக இடத்துக்கே சென்று விடலாம் என்று ஆசைப்பட்டார் . அங்கு சென்று விட்டால் தங்கள் குடும்பத்தை தான் பார்த்துக் கொள்வதாகவும் , தேசப் பணியையும் , எழுத்துப் பணியும் அங்கு இருந்தவாறே மேற்கொள்ளலாம் எனவும் செல்லம்மாளின் சகோதரர் அப்பாத்துரை தெரிவித்தார் .
ஆனால் பாரதி பாண்டிச்சேரியில் இருந்த தான் கைது செய்ய முடியவில்லை கொலை வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை விளக்கும் வகையில் சென்னையில் உள்ள ஆளுநர் பாரதி கடிதம் ஒன்றை எழுதினார் தனது தேசிய கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அரசியல் போராட்டங்களில் இருந்து விலகி வெளி நாட்டு அரசின் கொடியில் அமைதியாக வாழ்ந்து வருவதாகவும் பாரதி விளங்கினால் .மேலும் தனது நடவடிக்கைகளை விசாரித்து அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்த பாரதி தன் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கேட்டுக்கொண்டார். யாரோ ஒருவர் கொலை செய்ததற்காக அமைதியாக வாழ்ந்து வரும் தன் மீது வாரண்ட் பிறப்பித்து இருப்பது சரியில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் பாண்டிச்சேரியில் பத்திரிகைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு பின்னர்
பாரதியை தமிழகத்திற்கு திரும்பி வரும்படி அவரது நண்பர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர் பாரதியின் மனைவி செல்லம்மாள் நமது பூர்வீக இடத்துக்கே சென்று விடலாம் என்று ஆசைப்பட்டார் . அங்கு சென்று விட்டால் தங்கள் குடும்பத்தை தான் பார்த்துக் கொள்வதாகவும் , தேசப் பணியையும் , எழுத்துப் பணியும் அங்கு இருந்தவாறே மேற்கொள்ளலாம் எனவும் செல்லம்மாளின் சகோதரர் அப்பாத்துரை தெரிவித்தார் .
இவ்வாறு பலரும் வற்புறுத்திய நிலையில் பாண்டிச்சேரியை விட்டு கிளம்பி தமிழகம் செல்ல முடிவெடுத்தார் சுப்பிரமணிய பாரதி 1918ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி தனது குடும்பத்தை பாண்டிச் சேரியை விட்டு வெளியேறினார். தன்னை கைது செய்ய போலீசாருக்கு எந்த காரணமும் இல்லை என்று கருதினார் . ஆனால் நடந்தது வேறு . பாண்டிச் சேரியை விட்டு வெளியேறி சென்று கொண்டிருக்கும் போது போலீசார் அவரை கைது செய்தனர். அந்த சமயத்தில்தான் அதாவது 1918ஆம் ஆண்டில் தான் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்திருந்தது . போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் பிற பகுதிக்குள் நுழைய தடை விதிக்கும் நுழைவுத் தடுப்புச் சட்டம் அமலில் இருந்தது .உலகப் போர் முடிந்தவுடன் அந்த சட்டம் காலாவதி ஆகி விட்டதாக எண்ணிய பாரதி தமிழகத்துக்குள் நுழைந்தார் ஆனால் அந்த காலாவதியான சட்டத்தை காரணமாக காட்டித்தான் பொலிசார் கைது செய்திருந்தனர் பாரதியை . வெளியே கொண்டுவர பல முயற்சிகள் அதன் பயனாக அரசும் அவரை விடுவிக்க முன்வந்தது .
பாரதி விடுவிக்கப்பட்டார் சென்னையிலிருந்து தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு சென்றார் பாரதி அங்கு முதல் வேலையாக தனது நூல்களைப் புதுப்பிக்கும் பணியில் இறங்கினார் பாரதியின் மகள் தங்கம்மாள் அப்போது வரம் ஒன்று வந்து சேர்ந்தது . தங்கம்மாள் திருமணத்திற்கு பணம் புரட்டும் பணியில் ஈடுபட்டார் . அப்பொழுது எட்டயபுரம் ஜமீன்தாருக்கு கடிதம் ஒன்று எழுத உறவினர்கள் அறிவுறுத்தினார்கள் . இதனை அடுத்து எட்டயபுரம் அரசரின் வரலாற்றை தீட்சிதர் ஒருவர் எழுதி இருந்தார் அது மிகவும் அபத்தமான தமிழில் அபத்தமான முறையில் எழுதப்பட்டிருந்தன அதனை நாம் திருத்தம் செய்து கொடுத்தா அரசர் மகிழ்ந்து சன்மானம் வழங்குவார் என்று நினைத்தார் பாரதி அது தொடர்பாக மகாராஜாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார் தனது பணிக்காக எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார் .ஆனால் அந்த கடிதத்துக்கு எந்த பதிலும் இல்லை தங்களின் திருமணத்திற்காக ஒரு 50 ரூபாயை மட்டும் அனுப்பி வைத்தார் . பின்னர் ஆண்டிப்பட்டி ஜமீன்தார் ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்தார் ஒரு வழியாக பாரதியின் மகளின் திருமணமும் நடந்தேறியது . பாரதி மீண்டும் சென்னைக்கு வந்து குடியேறினார் வேலை இல்லாமல் பொருளாதார நெருக்கடி தள்ளப்பட்டார் .எனவே மீண்டும் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இணைந்தார் .
செட்டித் தெருவில் வசிக்கத் தொடங்கினார் சுதேசமித்திரனில் பணியாற்றிய பொழுது பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றி வந்தார் இந்த சூழலில்தான் அவர் விரும்பத்தகாத அந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது .பாரதி அடிக்கடி பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கு செல்வது வழக்கம் அங்கு வாசல் மண்டபத்தில் கட்டப்பட்டிருக்கும் அர்ஜுனன் என்ற யானைக்கு பழங்கள் கொடுப்பதும் வழக்கமான ஒன்று திடீரென ஒரு நாள் அந்த யானைக்கு மதம் பிடித்து விட்டது சில தினங்களாக கோயிலுக்கு போகாதா பாரதி யானைக்கு மதம் பிடித்த விஷயம் பாரதிக்கு தெரிந்திருக்கவில்லை . வழக்கம்போல் பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று யானைக்கு பழங்களை கொடுத்தார் . அப்போது திடீரென அந்த யானை பாரதியை தூக்கி வீசியது அதில் மேலே இருந்து கீழே விழுந்த வேகத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .
சிறிது சிறிதாக குணமாகி பழையபடியே பத்திரிகை அலுவலகம் செல்ல கூட்டங்களில் பங்கேற்க தொடங்கினார் பாரதி . இந்த சம்பவத்தை அறிந்த பாரதிதாசன் பாரதி உடல் நலத்தை விசாரித்து கடிதம் ஒன்றை எழுதினார் . உடனே அந்தக் கடிதத்திற்கு பாரதி பதில் கடிதம் எழுதினார் அதில் தனது உடல்நிலை தேறி விட்டதாக பாரதி பதில் கடிதம் எழுதினால் அதை நம்ப மறுத்த பாரதிதாசன் புகைப்படம் எடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டார் அதற்கு சம்மதித்த பாரதி சென்னை பிராட்வேயில் உள்ள ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பினார் அந்த புகைப்படம் நாம் காணும் முண்டாசு கட்டிய புகைப்படம் ஆகும்
பின்னர் பாரதிக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது . இது அவரை மேலும் உடல் சோர்வை அளித்தது பின்னர் பாரதியின் உடல்நிலை மிகவும் மோசமாகி கொண்டே சென்றது மருந்து எடுத்துக் கொள்ளவும் அவர் மறுத்துவிட்டார் பாரதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பின் ஒருவராக அவரது வீட்டிற்கு வர தொடங்கின. 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிகாலை சுமார் ஒன்றரை மணி இருக்கும் பொது பாரதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது அத்துடன் சிறிது நேரத்தில் மூச்சு முட்டி பாரதி என்கிற மகாகவியின் மரணித்த போது அவருக்கு வயது வெறும் முப்பத்தி எட்டு தான் . மிகப்பெரிய கவிஞனாக , கவிச்சக்கரவர்த்தி, ஆசிரியராக, பத்திரிகையாளனாக, விடுதலைப் போராட்ட வீரனாக , பயணத்தை தொடர்ந்த அந்த சுப்பு மணிபாரதி காலமானார்.
பாரதி இறந்த போது அவரின் உடல் எடை சுமார் 45 ஆக இருந்தது அந்த அளவுக்கு மிகவும் உடல் நலம் குன்றி இருந்தார் . காலை 8 மணிக்கு திருவல்லிக்கேணியில் உள்ள பேட்டை மயானத்தில் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பாரதியாருக்கு யார் கொள்ளி வைப்பது என்ற கேள்வி எழுந்தது முடிவில் தூரத்து உறவினரான சர்மா என்பவர் உடலுக்கு கொள்ளி வைத்தார் . பெண் விடுதலை , தேச விடுதலை , கல்வி போன்றவை குறித்தும் ஜாதி மதங்களுக்கு எதிராக பல கவிதைகளை எழுதியவர் . மீசையோடு அதே தீர்க்கமான பார்வை யோடு அதே நெஞ்சத்தோடு குறிப்பாக அதே முண்டாசு பாரதி இன்றும் உயிர்ப்போடு தான் இருக்கிறார் வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத திருநாள்