சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு அலர்ட்..!
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், தற்போது ஆங்காங்கே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது இதனால் தமிழகத்தில் குளிர்ச்சியான தட்ப வெட்பம் நிலவி வருகிறது. தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் நகரின் ஒரு சில பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.