சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Teachers Day Quotes in Tamil | ஆசிரியர்தின தத்துவங்கள்
ஆசிரியர் என்பவர்கள் பெற்றோர்களுக்கு சமமானவர்கள், இந்த உலகில் நம் முன்னோர்கள் மாதா , பிதா , குரு , தெய்வம் என்று கூறுவார்கள் இதில் குரு என்பது நம் ஆசிரியர்களை குறிக்கின்றது. இந்த உலகிற்கு நம்மை அறிமுகம் செய்தது தாய் தந்தையர்கள் ஆகும்.
அதற்குப்பின்னால் செல்வத்தில் மிகச் சிறந்த செல்வம் கல்விச் செல்வம் அந்த கல்விச்செல்வம் நமக்கு அளித்தவர் தான் இந்த ஆசிரியர்கள். ஆசிரியர்கள் இல்லாவிட்டால் நாம் அனைவரும் கல்வி அறிவு இன்றி இந்த உலகில் வாழ்ந்திருப்போம் ,கல்வி அறிவினால் மட்டுமே இந்த உலகம் பரிணாம வளர்ச்சி அடைந்து முன்னேறி இருக்கின்றது. இந்த அறிவை ஊட்டி அவர்கள் நம் ஆசிரியர்கள்தான், ஆசிரியர்கள் பணி என்பது மிகச் சிறந்த பணியாகும் இந்த பணியில் அவர்கள் பயிற்றுவிக்கும் அனைத்து குழந்தைகளையும் தனது பெத்த குழந்தைபோல் கவனித்துக் கொள்வார்கள்
ஆசிரியர்கள் தான் அம்மா என்கின்ற சொல்லை எழுத கற்றுக் கொடுப்பார்கள்,
இவ்வளவு சிறப்புமிக்க ஆசிரியர்களுக்கு வருடத்தில் ஒரு நாள் ஆசிரியர் தினம் என்று நாம் அனைவரும் கொண்டாடுகின்றோம். அந்த ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு இனிப்பு பண்டங்களை மாணவர்கள் வழங்கி அவர்களுக்கு ஒரு வாழ்த்து கூறி அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று அந்த தினத்தை மிக மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றோம். ஆசிரியர் தினத்திற்கு சில தத்துவங்கள் மூலம் ஆசிரியர்களிடம் வெளிப்படுத்தினால் அது மிகச் சிறப்பாக இருக்கக்கூடும் எனவே இந்தப் பதிவில் ஆசிரியர் தினத்திற்கான சில தத்துவங்களை பார்ப்போம்

- கற்றுத் தந்த வித்தைக்காக என்றென்றும் நன்றி தெரிவிப்பேன் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

- அறிவென்னும் விளக்கேற்றி அன்பெனும் வழிகாட்டி எமது வாழ்க்கையில் ஏற்றம் பெற உதவிய ஆசான்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

- நல்ல குறிக்கோளையும் சமுதாய உணர்வுகளையும் விதைத்து சிறந்த கல்வி பணியாற்றிட வேண்டும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

- கற்றுத்தந்த விதைக்காக நன்றியுடன் இருப்பேன் என்னும் உங்கள் மாணவனாக இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

- உலகின் இரண்டு புனிதமான இடங்கள் உண்டு ஒன்று தாயின் கருவறை இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை தாயின் கருவறையில் ஒருவன் உயிரை பெறுகிறான் ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவைப் பெறுகிறான்

- கற்பித்தலை விரும்பும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கற்றலை நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறார்கள்

- அறியாமை என்ற இருள்நீக்கி அறிவு என்ற தீபம் ஏற்றும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

- பறக்கும் பட்டம் இல்ல நம் ஆசிரியர்கள் நம்மை உயர உயர பறக்க வைக்கும் நூலாகி இருப்பவர்கள் தான் ஆசிரியர்கள் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

- இன்றைய மாணவர்கள் நாளைய தூண்கள் அந்த தூண்களை வடிவமைப்பது ஆசிரியர்கள்தான் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

- ஆசிரியர்கள் இல்லாதிருந்தால் மற்ற எந்த தொழில்களும் இருந்திருக்காது இங்கு உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

- உலகத்திற்கு நீங்கள் ஆசிரியராக இருக்கலாம் ஆனால் உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் ஹீரோ

- ஒருவரிடம் நண்பனை , வழிகாட்டியை , பெற்றோரை , இறைவனை , ஒன்றாக பார்க்க முடியும் என்றால் அது ஆசிரியர் மட்டுமே இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்

- கல்வியோடு ஒழுக்கத்தையும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் சேவை மேலும் சிறக்க வேண்டும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்